தேசிய வீரர்களின் அசத்தலான ஆட்டத்தால் அரையிறுதிக்கு தெரிவான SSC

720

இலங்கையின் பிரதான உள்ளூர் கழகங்களுக்கு இடையிலான ஒருநாள் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு SSC, NCC, சிலாபம் மேரியன்ஸ் மற்றும் செரசன்ஸ் விளையாட்டுக் கழகங்கள் தகுதிபெற்றன.

இலங்கை கிரிக்கெட் சபை (SLC) நடாத்தும் 2017/2018 ஆம் ஆண்டுக்கான இந்த போட்டித் தொடரின் நான்கு காலிறுதிப் போட்டிகளும் இன்று (21) நடைபெற்றன. இதில் சர்வதேச போட்டிகள் இல்லாத நிலையில் அந்தந்த கழகங்களின் முன்னணி தேசிய அணி வீரர்களும் பங்கேற்றனர்.

தமிழ் யூனியன் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம் எதிர் செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் 

கழக போட்டிகளில் அனுபவ சுழல் பந்து வீச்சாளரான சதுர ரந்துனுவின் மிரட்டும் பந்துவீச்சின் உதவியோடு தமிழ் யூனியன் கழகத்தை 4 விக்கெட்டுகளால் வீழ்த்தி செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் அரையிறுதிக்கு முன்னேறியது.

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய விளையாட்டு வளாகத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட தமிழ் யூனியன் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுக்க 113 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. தமிழ் யூனியன் அணிக்காக தரங்க பரணவிதான (47) மற்றும் ரமித் ரம்புக்வெல்ல (20) ஆகியோர் மாத்திரமே இரட்டை இலக் ஓட்டங்களை எட்டினர்.

இதன்போது 33 வயதுடைய சதுர ரந்துனு 30 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டுகளை பதம்பார்த்தார். வேகப்பந்து வீச்சாளர் அன்டி சொலமன்ஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

உள்ளூர் கழக ஒரு நாள் தொடரில் காலிறுதியில் மோதவுள்ள அணிகள்

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் (SLC) நடாத்தும் 2017/2018 பருவகாலத்துக்கான…

இந்நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய செரசன்ஸ் கழகம் முக்கிய தருணங்களில் விக்கெட்டுகளை பறிகொடுத்தபோதும் அதனால் 6 விக்கெட்டுகளை இழந்து 114 ஓட்ட வெற்றி இலக்கை எட்ட முடிந்தது.

போட்டியின் சுருக்கம்

தமிழ் யூனியன் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம் – 113 (40.3) – தரங்க பரணவிதான 47, ரமித் ரம்புக்வெல்ல 20, சதுர ரந்துனு 6/30, அன்டி சொலமன்ஸ் 3/12

செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் – 114/6 (29.3) – தனுக்க தாபரே 26, பினுர பெர்னாண்டோ 3/19

முடிவு செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் 4 விக்கெட்டுகளால் வெற்றி


NCC எதிர் கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம்

பல தேசிய வீரர்களுடன் பலம் மிக்க அணியாக களமிறங்கி இருக்கும் NCC அணி கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகத்தை காலிறுதிப் போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

ஆரம்ப சுற்றில் தோல்வியுறாத அணியாக காலிறுதிக்கு முன்னேறிய இந்த இரு அணிகளில் NCC அணிக்காக நிரோஷன் திக்வெல்ல, உபுல் தரங்க, தினேஷ் சந்திமால், பர்வீஸ் மஹ்ரூப், துஷ்மந்த சமீர, லசித் மாலிங்க ஆகிய முன்னணி வீரர்கள் கமிறங்கினர்.

கொழும்பு SSC மைதானத்தில் நடைபெற்ற இந்த காலிறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் 54 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோதும் பின்வரிசையில் வந்த நிசல தாரக்க 83 ஓட்டங்களை பெற்று வலுச்சேர்த்தார். இதன் மூலம் அந்த அணி 49.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 218 ஓட்டங்களைப் பெற்றது. NCC அணி சார்பாக பந்துவீச்சில் துஷ்மந்த சமீர 5 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

இந்நிலையில் 219 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பாடிய NCC அணி ஆரம்ப துடுப்பாட்ட வீரர் உபுல் தரங்க (72) மற்றும் அணித் தலைவர் அஞ்செலோ பெரேரா (74*) பெற்ற அரைச்சதத்தின் மூலம் 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது.

இதன் போது பர்வீஸ் மஹ்ரூப் பந்துவீச்சில் 2 விக்கெட்டுகளையும் துடுப்பாட்டத்தில் ஆட்டமிழக்காது 30 ஓட்டங்களையும் பெற்று NCC அணிக்கு பலம் சேர்த்தார்.

போட்டியின் சுருக்கம்

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் – 218 (49.1) – நிசல தாரக்க 83, சஹன் ஆரச்சிகே 31, நுவன் குலசேகர 22, துஷ்மந்த சமீர 5/51, பர்வீஸ் மஹ்ரூப் 2/16

NCC – 220/5 (36.4) – அஞ்செலோ பெரேரா 74*, உபுல் தரங்க 72, பர்வீஸ் மஹ்ரூப் 30*, அகில தனஞ்சய 2/34

முடிவு NCC அணி 5 விக்கெட்டுகளால் வெற்றி


SSC எதிர் ராகம கிரிக்கெட் கழகம்

SSC அணியின் பலமான துடுப்பாட்ட வரிசையை சமாளிக்க முடியாத லஹிரு திரிமான்ன தலைமையிலான ராகம கிரிக்கெட் கழகம் காலிறுதிப் போட்டியில் 8 விக்கெட்டுகளால் தோல்வி அடைந்தது. இதன் மூலம் பிரதான கழகங்களுக்கு இடையிலான ஒருநாள் தொடரின் அரையிறுதியில் விளையாட SSC கழகம் தகுதி பெற்றுள்ளது.

கொழும்பு கோல்ட்ஸ் கிரிக்கெட் கழக மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற ராகம கிரிக்கெட் கழகம் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. எனினும் அந்த அணி 48 ஓவர்களில் 206 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

உள்ளூர் ஒருநாள் போட்டிகளின் காலிறுதி அணிகள் தேர்வு

இலங்கை உள்ளூர் கழகங்களுக்கு இடையிலான பிரதான ஒருநாள் கிரிக்கெட்…

இந்த தொடரில் அதிகூடிய ஓட்டங்களை பெற்றவரான (448) லஹிரு மிலந்த அதிகபட்சம் 48 ஓட்டங்களை பெற்றார். SSC அணித்தலைவர் சச்சித்ர சேனநாயக்க நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் தொடரில் அதிக விக்கெட்டு விழ்த்தியவர் வரிசையில் பொலிஸ் விளையாட்டு கழகத்தைச் சேர்ந்த மஹேஷ் பிரியதர்ஷனவுடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டார். இருவரும் தலா 14 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.

இந்நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய SSC அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தனுஷ்க குணதிலக்க (50), திமுத் கருணாரத்ன (70*) மற்றும் தசுன் ஷானக்க (54*) ஆகியோர் அரைச்சதம் பெற்றனர். இதன் மூலம் SSC அணி 36.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 207 ஓட்டங்களைப் பெற்று இலகு வெற்றியீட்டியது.

போட்டியின் சுருக்கம்

ராகம கிரிக்கெட் கழகம் – 206 (48) – லஹிரு மிலந்த 48, சமீர டி சொய்சா 39, ரொஷேன் சில்வா 37, சமிந்து பெர்னாண்டோ 20, சச்சித்ர சேனநாயக்க 4/25

SSC – 207/2 (36.5) – திமுத் கருணாரத்ன 70*, தசுன் ஷானக்க 54*, தனுஷ்க குணதிலக்க 53, கௌஷால் சில்வா 20, லஹிரு மிலந்த 2/43

முடிவு SSC அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி


சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் BRC

கொழும்பு பி. சாரா ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் அணித் தலைவர் ஷெஹான் ஜயசூரியவின் அபார துடுப்பாட்டத்தின் மூலம் BRC அணியை 30 ஓட்டங்களால் வென்ற சிலாபம் மேரியன்ஸ் அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற BRC அணி எதிரணியை முதலில் துடுப்பெடுத்தாட பணித்தது. இதன்படி முதலில் துடுப்பாடக் களமிறங்கிய சிலாபம் மேரியன்ஸ் அணிக்கு ஆரம்ப துடுப்பாட்ட வீரராக வந்த ஷெஹான் ஜயசூரிய 83 பந்துகளில் 84 ஓட்டங்களை பெற்றார். இதன் மூலம் சிலாபம் மேரியன்ஸ் அணி 49.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 256 ஓட்டங்களைப் பெற்றது.

ஐ.சி.சி T-20 தரவரிசையில் இலங்கை, இந்திய வீரர்கள் முன்னேற்றம்

கடைசி இரண்டு ஓவர்களிலும் தனது துடுப்பாட்டத்தால் சாகசம் நிகழ்த்திய…

தொடர்ந்து பதிலுக்கு துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய BRC அணி வெற்றிக்காக போராடியபோதும் 46.2 ஓவர்களில் 226 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

போட்டியின் சுருக்கம்   

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் – 256 (49.4) – ஷெஹான் ஜயசூரிய 84, ரோஹித் தாமோதரன் 32, கசுன் விதுர 29, இசுரு உதான 29, ருக்ஷான் செஹான் 21, ருமேஷ் புத்திக்க 2/46, சாமிக்கர எதிரிசிங்க 2/46, விகும் சஞ்சய 2/52

BRC – 226 (46.2) – டேஷான் டயஸ் 60, விகும் சஞ்சய 55*, ருமேஷ் புத்திக்க 37, திலகரத்ன சம்பத் 25, டில்ஷான் குணவர்தன 3/35, அசித பெர்னாண்டோ 2/39, இசுரு உதான 2/43

முடிவு சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் 30 ஓட்டங்களால் வெற்றி