உலகக் கிண்ண கால்பந்துப் போட்டிகளிற்கான தகுதிகாண் போட்டிகளின் பின்னராக, மீண்டும் தற்போது பிரீமியர் லீக் சுற்றுப் போட்டிகள் ஆரம்பமாகியுள்ளன. இதில் கடந்த நாட்களில் தமது நாட்டிற்காக எதிரணியாக இருந்து விளையாடிய பல வீரர்கள், இச்சுற்றுப் போட்டியில் மீண்டும் ஓன்றிணைத்துள்ளனர்.
பிரிமியர் லீக் சுற்றுப் போட்டியில் இவ்வாரம் முன்னேறியுள்ள கழகங்கள்
பிரிமியர் லீக் சுற்றுப்போட்டியின் மூன்றாவது வாரத்திற்கான போட்டிகள் பார்வையாளர்களை..
ஏற்கனவே, அனைத்து அணிகளும் தலா மூன்று போட்டிகளில் விளையாடியிருந்தன. அதன் அடிப்படையில் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தை மென்சஸ்டர் யுனைடட் அணி பெற்றிருந்தது. இதற்கு முன்னர் நடைபெற்று முடிந்த போட்டிகளில் சிறந்த விளையாட்டை வெளிப்படுத்திய அணிகள், இவ்வாரம் அதிர்ச்சித் தோல்விகளை அடைந்துள்ளன. அதேபோன்று, சுற்றுப் போட்டியின் முதல் வாரங்களில் சோபிக்கத் தவறிய அணிகள் இவ்வாரம் சிறந்த பெறுபேறுகளுடனான வெற்றிகளைப் பதிவு செய்துள்ளன.
கடந்த 9ஆம் திகதி நடைபெற்ற லிவர்பூல் கால்பந்துக் கழகம் மற்றும் மென்சஸ்டர் சிடி கழகம் என்பவற்றுக்கு இடையிலான போட்டியானது பலரது கவனத்தையும் ஈர்த்த போட்டியாக அமைந்தது. இரு அணிகளும் இறுதியாக நடைபெற்ற போட்டியை வென்ற நிலையிலே இப்போட்டியில் சந்தித்தன. இருந்தும் இப்போட்டியில் மென்சஸ்டர் சிடி 5-0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.
போட்டியின் ஆரம்பம் முதலே மென்சஸ்டர் சிடி கழகம் லிவர்பூல் கழகத்திற்கு தனது சிறந்த பந்துப் பரிமாற்றங்கள் மூலம் சவால் கொடுத்தது. அதன் பலனாக மென்சஸ்டர் சிடி கழகத்திற்கான முதல் கோலை போட்டியின் 24ஆம் நிமிடத்தில் ஸர்ஜியோ அக்வேரோ பெற்றுக் கொடுத்தார்.
Highlights – Renown SC v Saunders SC – DCL17 (Week 1)
Uploaded by ThePapare.com on 2017-09-08.
அதனைத் தொடர்ந்து கெப்ரீயல் ஜீஸஸ் 45ஆம் மற்றும் 53ஆம் நிமிடங்களிலும், லெரோய் சேன் 77ஆம் மற்றும் 91ஆம் நிமிடங்களிலும் கோல்களை பெற்றுக் கொடுத்தனர். இப்போட்டியில் லிவர்பூல் அணியின் முன்கள வீரர் ஸடியோ மெனே, போட்டியின் 37ஆம் நிமிடத்தில் சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் லயஸ்டர் சிடி மற்றும் செல்சி கால்பந்துக் கழகங்கள் மோதிய போட்டியில் 2-1 என்ற கோல் வித்தியாசத்தில் செல்சி அணி வெற்றி பெற்றது. போட்டியில் கூடுதலாக செல்சி கழகத்தின் ஆதிக்கமே தென்பட்டது.
அக்கழக அணிக்காக அல்வாரோ மோராடா மற்றும் கென்டே ஆகியோர் கோல்களைப் பெற்றுக்கொடுத்தனர். அத்துடன் லயஸ்டர் சிடி கழகத்திற்கு பெனால்டி முறை மூலம் ஜேமீ வார்டி ஓரு கோலைப் பெற்றுக்கொடுத்தார்.
அதே தினம் நடைபெற்ற பர்னமவுதிற்கு எதிரான போட்டியில் 3-0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இப்பருவகாலத்திற்கான தனது முதல் வெற்றியை பதிவு செய்தது ஆர்சனல் கழகம். அதேபோல், எவர்டன் கழகம் டொடன்கம் கழகத்துடன் தோல்வியுற்றதன் மூலம் புள்ளிப் பட்டியலில் தொடர்ச்சியான தோல்விகளை பதிவு செய்துள்ளது.
பதுளையில் திஹாரிய யூத் அணி வீரர்கள் மீது தாக்குதல்
இந்த பருவகாலத்திற்கான டிவிஷன் 1 ( பிரிவு 1) கால்பந்து சுற்றுப்போட்டியில், கெலிஓய…
இப்பருவகாலத்தின் ஆரம்பம் முதலே பல அபார வெற்றிகளைப் பெற்ற மென்சஸ்டர் யுனைடட் அணி, ஸ்டோக் சிடிக்கு எதிரான போட்டியில் 2-2 என்ற சமநிலையான கோல் வித்தியாசத்தில் போட்டியை நிறைவு செய்தது. எனினும், இப்போட்டியின் பின்பும் மென்சஸ்டர் யுனைடட் அணியே புள்ளிப் பட்டியலில் முதலிடத்திலுள்ளது.
அத்துடன் ஸவுதம்டன் மற்றும் வொட்பூர்ட் கழகங்கள் மோதிய போட்டியில், வொர்ட்பூர்ட் 2-0 என்ற கோல்கள் வித்தியாசத்திலும், பரய்டன் மற்றும் வெஸ்ட் புரும் கழகங்கள் மோதிய போட்டியில் பரய்டன் கழகம் 3-1 என்ற கோல்கள் வித்தியாசத்திலும் வெற்றிகளைப் பதிவு செய்தன.
மேலும், 10ஆம் திகதி இரண்டு போட்டிகள் நடைபெற்றன. முதலாவதாக நடைபெற்ற போட்டியில் பர்ன்லி மற்றும் கிரிஸ்டல் பலஸ் கால்பந்துக் கழகங்கள் மோதின. இப்போட்டியில் பர்ன்லி கழகம் 1-0 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இப்பருவகாலத்திற்கான தனது இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தது.
பிரீமியர் லீக் சுற்றுப் போட்டியில் இதுவரை நான்கு வாரங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், கிரிஸ்டல் பலஸ் மற்றும் பர்னமவுத் கழகங்கள் எந்தவித வெற்றியையும் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டாவதாக நடைபெற்ற போட்டியில் ஸீவஸேனா சிடி மற்றும் நியு காஸ்ல் கழகங்கள் மோதின. இப்போட்டியில் நியு காஸ்ல் அணி 1-0 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இவ்வாரத்தின் இறுதிப் போட்டி 12ஆம் திகதி வெஸ்ட் ஹாம் மற்றும் ஹடர்ஸ்வீய்லட் கழகங்களுக்கு இடையிலான பலப்பரீட்சையாக இடம்பெறவுள்ளது.
Highlights – Super Sun SC v Blue Star SC – DCL17 (Week 1)
Uploaded by ThePapare.com on 2017-09-08.
இன்று வரையான (2017.09.11) புள்ளிப் பட்டியல்
நிலை | ஆணி | போட்டிகள் | வெற்றி | தோல்வி | சமநிலை | எ.பெ.கோல்கள் | பெ.கோல்கள் | புள்ளி |
1 | மெ. யுனைடட் | 4 | 3 | 0 | 1 | 2 | 10 | 10 |
2 | மெ. சிடி | 4 | 3 | 0 | 1 | 2 | 8 | 10 |
3 | செல்சி | 4 | 3 | 1 | 0 | 5 | 3 | 9 |
4 | வொர்ட்புட் | 4 | 2 | 0 | 2 | 3 | 4 | 8 |
5 | டொடன்ஹம் | 4 | 2 | 1 | 1 | 3 | 4 | 7 |
6 | ஹடர்ஸ்வீய்ல்ட் | 3 | 2 | 0 | 1 | 0 | 4 | 7 |
7 | பர்ன்லீ | 4 | 2 | 1 | 1 | 4 | 1 | 7 |
8 | லிவர்பூல் | 4 | 2 | 1 | 1 | 8 | 0 | 7 |
9 | வெஸ்ட்பூரும் | 4 | 2 | 1 | 1 | 4 | 0 | 7 |
10 | நியூகாஸ்ல் | 4 | 2 | 2 | 0 | 3 | 1 | 6 |
11 | ஆர்சனல் | 4 | 2 | 2 | 0 | 8 | -1 | 6 |
12 | ஸ்டோக்சிடி | 4 | 1 | 1 | 2 | 4 | 0 | 5 |
13 | ஸவுதம்டன் | 4 | 1 | 1 | 2 | 4 | -1 | 5 |
14 | பரய்டன் | 4 | 1 | 2 | 1 | 5 | -2 | 4 |
15 | ஸீவஸேனாசிடி | 4 | 1 | 2 | 1 | 5 | -3 | 4 |
16 | எவர்டன் | 4 | 1 | 2 | 1 | 6 | -4 | 4 |
17 | லயஸ்டர்சிடி | 4 | 1 | 3 | 0 | 8 | -2 | 3 |
18 | பர்னமவுத் | 4 | 0 | 4 | 0 | 8 | -7 | 0 |
19 | கிரிஸ்டல்பலஸ் | 4 | 0 | 4 | 0 | 7 | -7 | 0 |
20 | வெஸ்ட்ஹாம் | 3 | 0 | 3 | 0 | 10 | -8 | 0 |