இலங்கை கிரிக்கெட் சபையினால் நடாத்தப்படும் முதல்தர கிரிக்கெட் சுற்றுப்போட்டியான பிரீமியர் லீக் தொடரின் B மட்டத்திலான நான்கு போட்டிகளின் மூன்றாவதும் இறுதியுமான நாள் இன்று நடைபெற்றது. 

லங்கன் கிரிக்கெட் கழகம் எதிர் குருநாகல இளையோர் கழகம்

இறுதி நாளான இன்று இன்னிங்க்ஸ் தோல்வியிலிருந்து மீளுவதற்கு 146 ஓட்டங்களைப் பெற வேண்டிய நிலையில் களமிறங்கிய குருநாகல இளையோர் கழகம் 38.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 90 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. இதனால் இன்னின்ங்ஸ் மற்றும் 79 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது.

அவ்வணி சார்பாக ஹஷான் பிரபாத் ஆட்டமிழக்காமல் 42 ஓட்டங்களையும் தனுஷ்க தர்மசிரி 16 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

அதே நேரம், லங்கன் கிரிக்கெட் கழகம் சார்பாக சிறப்பாக பந்து வீசிய ரஜீவ வீரசிங்க 42 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

போட்டியின் சுருக்கம்

லங்கன் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்): 422 (89.2) – சானக ருவன்சிறி 100, லக்ஷான் ரொட்ரிகோ 91, லால் குமார் 86, மதுரங்க சொய்சா 38, யஷான் சமரசிங்க 37, மிதுன் ஜயவிக்ரம 103/3, சரித் மாபடுன 104/2, சரித் பண்டார 52/2, ஹஷான் பிரபாத் 18/1

குருநாகல இளையோர் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்): 253 (79.1) –ஹஷான் பிரபாத் 76, அனுராதா ராஜபக்ச 40, ருவந்த ஏக்கநாயக்க 26, சானக ருவன்சிரி 59/4, ரஜீவ வீரசிங்க 62/3, நவீன் கவிகார 81/3

குருநாகல இளையோர் கிரிக்கெட்  கழகம் (இரண்டாம் இன்னிங்ஸ்): (F/O) 90 (38.1) – ஹஷான் பிரபாத் 42*, ரஜீவ வீரசிங்க 42/6, நவீன் கவிகார 46/2


பொலிஸ் விளையாட்டு கழகம் எதிர் இலங்கை விமானப்படை விளையாட்டு கழகம்

இவ்விரு அணிகளுக்கிடையிலான போட்டி மிகவும் விறுவிறுப்பாக  அமைந்திருந்தது. பிரீமியர் லீக் தொடரின் B மட்டத்திலான இந்த போட்டிகளில் எவ்விதமான வெற்றிகளையும் பெற்றிராத நிலையில் இவ்விரு அணிகளும் முதல் வெற்றிக்காக போராடின. இறுதியில் ஒரு விக்கெட்டினால் முதல் வெற்றியை பதிவு செய்த பொலிஸ் விளையாட்டு கழகம், தர வரிசையில் எட்டாவது இடத்தில் இருந்து 6ஆவது இடத்துக்கு முன்னேறியது.

நேற்றைய நாள் முடிவின்போது 5 ஓட்டங்களுக்கு 1 விக்கெட்டினை இழந்த நிலையில் மூன்றாம் நாளான இன்று, இரண்டாம் இன்னிங்சைத் தொடர்ந்த இலங்கை விமானப்படை விளையாட்டு கழகம் 45.1 ஓவர்களில் 142 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. அவ்வணி சார்பாக ரொஸ்கோ தட்டில் 5 பவுண்டரிகள் உள்ளடங்கலாக 56 ஓட்டங்களையும் லக்‌ஷான் பெர்னாண்டோ 21 ஓட்டங்களையும் பெற்றனர்.

சிறப்பாக பந்து வீசிய மஞ்சுல ஜயவர்தன 59 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். அதனை தொடர்ந்து வெற்றி இலக்கான 127 ஓட்டங்களை நோக்கி துடுப்பாடிய பொலிஸ் விளையாட்டு கழகம் முதல் விக்கெட்டுக்காக 39 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றுக்கொண்டது.

அதன் பின்னர் பொலிஸ் விளையாட்டு கழகம் தொடர்ச்சியாக விக்கெட்டுக்களை இழந்தது. 73 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்த நிலையில் களமிறங்கிய சுவஞ்சி மதனாயக்க நிதான ஆட்டத்தினை வெளிப்படுத்தி 70 பந்துகளுக்கு முகம் கொடுத்து ஒரு பவுண்டரி உள்ளடங்கலாக 27 ஓட்டங்களைப் பெற்று பொலிஸ் விளையாட்டு கழகம் வெற்றி இலக்கை அடைய உதவினார்.

எனினும், ஓட்ட எண்ணிக்கை 119 ஆக இருந்த போது பொலிஸ் விளையாட்டு கழகம் ஒன்பதாவது விக்கெட்டாக சொஹான் ரன்கிக்கவின் பந்து வீச்சில் உதயவன்ச பராக்கிரமவிடம் பிடி கொடுத்து துரதிர்ஷ்டவசமாக ஆட்டமிழந்து சென்றார். ஒரே ஒரு விக்கெட் எஞ்சியிருந்த நிலையில் மேலும் ஒன்பது ஓட்டங்களை பெற வேண்டிய நிலையில், சுஜான் மயூரவுடன் கை கோர்த்த கல்யாண ரத்னபிரிய தொடர்ச்சியாக 9 ஓவர்கள் துடுப்பாடி வெற்றி இலக்கை அடைந்தனர்.

இறுதி நேரம் வரை விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இறுதி விக்கெட்டை வீழ்த்துவதற்கு இலங்கை விமானப்படை விளையாட்டு கழகம் இயன்ற வரை போராடியது. எனினும் இறுதியில் ஒரு விக்கெட்டினால் துரதிர்ஷ்டவசமாக தோல்வியுற்றது. சிறப்பாக பந்து வீசிய சொஹான் ரங்கிக்க 42 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்

போட்டியின் சுருக்கம்

இலங்கை விமானப் படை விளையாட்டு கழகம் (முதல் இன்னிங்ஸ்): 168 (76.2) – புத்திக சந்தருவன் 43, ரொஸ்கோ தட்டில் 38, மஞ்சுல ஜயவர்தன 47/4

பொலிஸ் விளையாட்டு கழகம் (முதல் இன்னிங்ஸ்): 184 (87.1) – சமித் டுஷாந்த 82, சுவஞ்சி மதனாயக 31, சொஹான் ரங்கிக்க 36 /3, அச்சிர எரங்க 35/2, லக்ஷான் பெர்னாண்டோ 50/2

இலங்கை விமானப்படை விளையாட்டு கழகம் (இரண்டாம் இன்னிங்ஸ்): 142 (45.1) – ரொஸ்கோ தட்டில் 56, லக்ஷான் பெர்னாண்டோ 21, சொஹான் ஜயவர்தன 14, மஞ்சுல ஜயவர்தன 59/7

பொலிஸ் விளையாட்டு கழகம் (இரண்டாம் இன்னிங்ஸ்): 128/9 (53.5) – தறிந்து தில்ஷான் 32, அகில லக்க்ஷான் 26, சுவஞ்சி மதனாயக்க 27, சொஹான் ரங்கிக்க 42/5, லக்க்ஷன் பெர்னாண்டோ 17/2


பாணதுறை விளையாட்டு கழகம் எதிர் இலங்கை கடற்படை விளையாட்டு கழகம்

நேற்றைய நாள் முடிவின்போது 10 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து மிகவும் இக்கட்டான நிலையில், இன்று மூன்றாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்த இலங்கை கடற்படை விளையாட்டு கழகம் 90.1 ஓவர்களில் 332 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து 99 ஓட்டங்களால் தோல்வியுற்றது.

இலங்கை கடற்படை அணி சார்பாக புத்திக்க ஹசரங்க 76 ஓட்டங்களையும்  அஷான் ரணசிங்க 57 ஓட்டங்களையும் கூடிய ஓட்டங்களாக பதிவு செய்தனர். சிறப்பாக பந்து வீசிய கயான் சிரிசோம 152 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளையும் நிமேஷ் விமுக்தி 86 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதன் முலம் பாணத்துறை விளையாட்டு கழகம் நான்கு போட்டிகளில் பங்குபற்றி மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றும், ஒரு போட்டி வெற்றி தோல்வியின்றியும் முடிவடைந்த நிலையில், தர வரசையில் தொடர்ந்தும் முன்னிலை வகிக்கிறது.

போட்டியின் சுருக்கம்

பாணதுறை விளையாட்டு கழகம் (முதல் இன்னிங்ஸ்): 268 (54.2) – சாமர சில்வா 72, மிஷேன் சில்வா 70, ஹசந்த பெர்னாண்டோ 29, இஷான் அபேசேகர 78/4, டிலங்க ஆவர்ட் 47/3, அமித் எரந்த 62/2

இலங்கை கடற்படை விளையாட்டு கழகம் (முதல் இன்னிங்ஸ்): 125 (47.3) –டினுஷ்க மாலன் 56, சமீர சந்தமால் 34, கயான் சிரிசோம 46/8, சரித புத்திக்க 6/1

பாணதுறை விளையாட்டு கழகம் (இரண்டாம் இன்னிங்ஸ்): 288/8d (66) – மிஷேன் சில்வா 57 , அருண தர்மசேன 50, லசித் பெர்னாண்டோ 45, மதுர மதுஷங்க 46/3, டிலங்க ஆவர்ட் 82/2

இலங்கை கடற்படை விளையாட்டு கழகம் (இரண்டாம் இன்னிங்ஸ்): 332 (90.1) – புத்திக்க ஹசரங்க 76, அஷான் ரணசிங்க 57, சமீர சந்தமல் 48, யொஹான் சொய்சா 33, கயான் சிறிசோம 152/5, நிமேஷ் விமுக்தி 86/2


இலங்கை துறைமுக அதிகார சபை கழகம் எதிர் களுத்துறை பௌதீக கலாச்சார கழகம்

7 விக்கட்டுகள் எஞ்சிய நிலையில் 181 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு மூன்றாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்த களுத்துறை பௌதீக கலாச்சார அணி 87.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகையும் இழந்து 273 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. இதன் மூலம் இன்னிங்ஸ் மற்றும் 78 ஓட்டங்களால் படுதோல்வியடைந்தது.

ஆட்டமிழக்காமல் 83 ஓட்டங்களுடன் இன்றைய நாள் களமிறங்கிய பத்தும் நிஸ்ஸங்க நிதான ஆட்டத்தினை வெளிப்படுத்தியதோடு, 178 பந்துகளில் 16 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸ்சர் உள்ளடங்கலாக 104 ஓட்டங்களை களுத்துறை பௌதீக கலாச்சார அணி சார்பாக பெற்றுக்கொடுத்தார்.

மேலும், மனோஜ் தேஷப்ரிய 53 ஓட்டங்களையும் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தமிந்து அஷான் 41 ஓட்டங்களையும் பெற்றனர். அதே நேரம் சிறப்பாக பந்து வீசிய சானக்க கோமசாரு 54 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளையும் சமிகாற எதிரிசிங்க 70 ஓட்டங்களுக்கு மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

போட்டியின் சுருக்கம்

களுத்துறை பௌதீக கலாச்சார அணி (முதல் இன்னிங்ஸ்): 49 (22.2) – பஹாட் பாபர் 14, பத்தும் நிஸ்ஸங்க 11, சானக கோமசாரு 17/5, சமிகாற எதிரிசிங்க 8/4

இலங்கை துறைமுக அதிகார சபை கழகம் (முதல் இன்னிங்ஸ்): 400/7d (93) – இஷான் ரங்கன 109, ஹஷான் குணதிலக்க 67, ப்ரஷான் விக்கரமசிங்க 80, தில்ஷான் மென்டிஸ் 70/2, பஹாட் பாபர் 73/2

களுத்துறை பௌதீக கலாச்சார அணி (இரண்டாம் இன்னிங்ஸ்): 273 (87.1) –  பத்தும் நிஸ்ஸங்க 104, தமிந்து அஷான் 41, மனோஜ் தேஷப்பிரிய 53, மனோஜ் நிரோஷன் 30, சானக்க கோமசாரு 54/6, சமிகாற எதிரிசிங்க 70/3