SSC அணிக்காக சதம் விளாசிய சந்துன் வீரக்கொடி

132
Premier League Tournament Tier A

இலங்கை கிரிக்கெட் சபை (SLC) இலங்கையின் பிரிவு A உள்ளூர் கழகங்கள் இடையே நடாத்தும், மூன்று நாட்கள் கொண்ட ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று (8) ஐந்து போட்டிகளின் இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வர ஒரு போட்டி ஆரம்பமாகியிருந்தது. 

இன்று இரண்டாம் நாளுக்குரிய போட்டியொன்றில், இலங்கை தேசிய கிரிக்கெட் அணிக்காக இரண்டு வருடங்களின் முன்னர் அறிமுகம் பெற்ற விக்கெட்காப்பு துடுப்பாட்ட வீரரான சந்துன் வீரக்கொடி, SSC அணிக்காக சதம் பெற்றார். அந்தவகையில் சந்துன் வீரக்கொடி நீர்கொழும்பு அணிக்கு எதிராக 114 ஓட்டங்கள் பெற்றதோடு, இது அவரின் 7 ஆவது முதல்தரச் சதமாகவும் அமைந்திருந்தது. 

சதம் விளாசி அசத்திய டில்ஷான் முனவீர, மினோத் பானுக்க

இலங்கை கிரிக்கெட் சபை (SLC) – இலங்கையின் பிரிவு A உள்ளூர் கழகங்கள் இடையி…

அதேவேளை, இலங்கை கிரிக்கெட் அணியில் குறுகிய கால இடைவெளி ஒன்றுக்கு முன்னர் அறிமுகம் பெற்ற பானுக்க ராஜபக்ஷ, கமிந்து மெண்டிஸ் ஆகியோரும் சிறந்த துடுப்பாட்டத்தினை வெளிப்படுத்தியிருந்தனர். இதில், BRC அணிக்காக விளையாடி வரும் பானுக்க ராஜபக்ஷ 85 ஓட்டங்கள் குவிக்க, சிலாபம் மேரியன்ஸ் அணிக்காக ஆடும் கமிந்து மெண்டிஸ் 73 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். 

தேசிய கிரிக்கெட் அணிக்காக விளையாடும் வீரர்கள் இருக்க, விக்கெட்காப்பு துடுப்பாட்ட வீரரான விஷாட் ரந்திக ஆட்டமிழக்காமல் கோல்ட்ஸ் அணிக்காகப் பெற்ற 122 ஓட்டங்கள் இன்றைய நாளில் வீரர் ஒருவர் பெற்ற இரண்டாவது சதமாக மாற, பதுரெலிய அணிக்காக இந்திய வீரர் ப்ரவிஷ் ஷெட்டி ஆட்டமிழக்காமல் பெற்ற 104 ஓட்டங்கள் இன்றைய நாளின் மூன்றாவது சதமாக மாறியது. 

அதேநேரம், பந்துவீச்சினைப் பொறுத்தவரையில் ஜிம்பாப்வே டெஸ்ட் தொடருக்குப் பின்னர் இலங்கை உள்ளூர் கிரிக்கெட்டிற்கு தமிழ் யூனியன் அணி மூலம்  திரும்பியிருக்கும் முன்னணி வேகப்பந்துவீச்சாளரான சுரங்க லக்மால், சிலாபம் மேரியன்ஸ் அணிக்கு எதிராக 5 விக்கெட்டுக்களைச் சாய்த்திருந்தார். லக்மால் தவிர சுழல்பந்துவீச்சு மூலம் திறமையை வெளிக்காட்டிய மலிந்த புஷ்பகுமார கொழும்பு கிரிக்கெட் அணிக்காக 4 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

பிக் பேஷ் லீக் சம்பியனாக மகுடம் சூடியது சிட்னி சிக்ஸர்ஸ்

அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வந்த பிக் பேஷ் லீக் (BBL) தொடரின் இறுதிப் …

போட்டிகளின் சுருக்கம்

றாகம கிரிக்கெட் கழகம் எதிர் பதுரெலிய கிரிக்கெட் கழகம்

இடம் – சர்ரே மைதானம், மக்கோன

பதுரெலிய கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 215/2 (62) – ப்ரவிஷ் ஷெட்டி 104*, லஹிரு மிலன்த 47*, சலிந்த உஷான் 54, சிரான் பெர்னாந்தை 2/45

போட்டியின் இரண்டாம் நாள் நாளை தொடரும்

நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் எதிர் SSC

இடம் – SSC மைதானம், கொழும்பு

நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 428 (111.3) – டில்ஷான் முனவீர 120, அஷேன் சில்வா 66, மாதவ வர்ணபுர 66, ரொஸ்கோ தட்டில் 51, தரிந்து ரத்னாயக்க 4/125, ஹிமேஷ் ராமநாயக்க 2/56

SSC (முதல் இன்னிங்ஸ்) – 239/6 (65) – சந்துன் வீரக்கொடி 114, கவிந்து குலசேகர 57, உபுல் இந்திரசிறி 3/56, ரொஷென் பெர்னாந்து 2/53

போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்

NCC எதிர் லங்கன் கிரிக்கெட் கழகம்

இடம் – NCC மைதானம், கொழும்பு

NCC (முதல் இன்னிங்ஸ்) – 511/9d (107.2) – பெதும் நிஸ்ஸங்க 129, உபுல் தரங்க 69, சஹான் ஆராச்சிகே 64, சாமிக்க கருணாரத்ன 63, அஞ்செலோ பெரேரா 51, சானக்க ருவன்சிரி 3/57

லங்கன் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 249/4 (66) – ப்ரிமோஷ் பெரேரா 66, கீத் குமார 61*, சானக்க ருவன்சிரி 51

போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்

இராணுவப்படை கிரிக்கெட் கழகம் எதிர் கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம்

இடம் – கோல்ட்ஸ் மைதானம், கொழும்பு

இராணுவப்படை கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 270 (89.3) – அசேல குணரத்ன 87, ஹிமாஷ லியனகே 73, தினேஷ் சந்திமல் 44, டில்ருவான் பெரேரா 5/58

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 312/9 (90) – விஷாத் ரன்திக்க 122*, அவிஷ்க பெர்னாந்து 41, மல்க மதுஷங்க 3/67

போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்

கொழும்பு கிரிக்கெட் கழகம் எதிர் BRC

இடம் – BRC மைதானம், கொழும்பு

கொழும்பு கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 416 (77.1) – மினோத் பானுக்க 108, ரொன் சந்திரகுப்தா 95, துவிந்து திலகரட்ன 6/102, தரிந்து கெளஷால் 4/125

BRC (முதல் இன்னிங்ஸ்) – 277 (65.2) – பானுக்க ராஜபக்ஷ 85, சாகர் மங்லோக்கர் 52, மலிந்த புஷ்பகுமார 4/63, அஷான் பிரியஞ்சன் 3/58

கொழும்பு கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 144/1 (32) – ரொன் சந்திரகுப்தா 77

போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்

Photos: BRC Vs CCC | Major League Tier A Tournament 2019/20

தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் எதிர் சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் 

இடம் – பி. சரவணமுத்து மைதானம், கொழும்பு

தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 162 (63.2) – தரங்க பரணவிதான 45, அசித்த பெர்னாந்து 5/50, திக்ஷில டி சில்வா 4/42

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 346 (87.1) – கமிந்து மெண்டிஸ் 73, திக்ஷில டி சில்வா 58, சுரங்க லக்மால் 5/79, மதுக்க லியனபத்திரனகே 3/99

தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் (இரண்டாம் இன்னிங்ஸ்) – 45/3 (21)

போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<