கொழும்பு கிரிக்கெட் கழகத்திற்காக சதம் விளாசிய மினோத் பானுக்க

139
Premier League Tournament Tier A

இலங்கை கிரிக்கெட் சபை (SLC) இலங்கையின் பிரதான உள்ளூர் கிரிக்கெட் அணிகள் இடையே நடாத்தும் பிரிவு A (Tier A) அணிகளுக்கான மூன்று நாட்கள் கொண்ட பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று (31)  மூன்று போட்டிகள் ஆரம்பமாகின.

நேபாளத்தில் கிரிக்கெட் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்ட உபுல் தரங்க

இலங்கை கிரிக்கெட் அணியின் சிரேஷ்ட வீரரான உபுல் தரங்க

இன்று ஆரம்பமான போட்டிகளில் இலங்கையின் தேசிய கிரிக்கெட் அணியின்  வீரர்கள் சிலர் திறமையினை வெளிப்படுத்தியிருந்தனர். இதில் நீர்கொழும்பு கிரிக்கெட் அணிக்கு எதிரான போட்டியில் கொழும்பு கிரிக்கெட் கழகத்திற்காக ஆடியிருந்த மினோத் பானுக்க அவரின் 10ஆவது முதல்தர சதத்தோடு 114 ஓட்டங்கள் குவிக்க, அவரின் சக அணி வீரரான லசித் அபேய்ரத்ன 113 ஓட்டங்கள் பெற்று ஆட்டமிழக்காமல் நின்றிருந்தார். 

அதேநேரம், கொழும்பு கிரிக்கெட் கழக அணியின் மற்றுமொரு வீரரான அஷான் பிரியஞ்சன் 90 ஓட்டங்கள் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

மறுமுனையில்,  இலங்கை சோனகர் கிரிக்கெட் கழகத்திற்காக விளையாடிய வலதுகை துடுப்பாட்ட வீரரான ரமேஷ் மெண்டிஸ் இரட்டைச்சதம் பூர்த்தி செய்து 205 ஓட்டங்கள் பெற்று ஆட்டமிழக்காமல் நிற்க, சசித்ர சேரசிங்க 149 ஓட்டங்கள் எடுத்திருந்தார். 

26 அணிகள் பங்கேற்கும் உள்ளூர் முதல்தர கிரிக்கெட் போட்டிகள் இன்று ஆரம்பம்

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் ஏற்பாடு

அதேநேரம், இலங்கை இராணுவப்படை – BRC அணிகள் இடையிலான மோதலில் இராணுவப்படை அணிக்காக நீண்ட கால இடைவெளி ஒன்றின் பின்னர் களமிறங்கிய அசேல குணரத்ன 39 ஓட்டங்கள் பெற்று ஆட்டமிழக்காமல் இருக்க, அவரின் சக அணி வீரரான லக்ஷான் எதிரிசிங்க 99 ஓட்டங்கள் குவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

போட்டிகளின் சுருக்கம்

இராணுவப்படை விளையாட்டுக் கழகம் எதிர் BRC 

டொம்பேகொட சர்வதேச மைதானம் 

இராணுவப்படை கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 279/3 (89) லக்ஷான் எதிரிசிங்க 99, துஷான் விமுக்தி 82, ஹிமாஷ லியனகே 40*, அசேல குணரத்ன 39*


சோனகர் கிரிக்கெட் கழகம் எதிர் நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் 

சோனகர் கிரிக்கெட் கழக மைதானம், கொழும்பு

சோனகர் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 509/6 (90) ரமேஷ் மெண்டிஸ் 205*, சசித்ர சேரசிங்க 149, நிமன்த மதுசங்க 58*, சாத் நஸீம் 3/155


கொழும்பு கிரிக்கெட் கழகம் எதிர் SSC

கொழும்பு கிரிக்கெட் கழக மைதானம்

கொழும்பு கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 430/6 (90) மினோத் பானுக்க 114, லசித் அபேய்ரத்ன 113*, அஷான் பிரியஞ்சன் 90, சரித் அசலன்க 2/42, ஆகாஷ் செனரத்ன 2/96

இன்று ஆரம்பமான அனைத்துப் போட்டிகளினதும் இரண்டாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க