இலங்கை கிரிக்கெட் சபை நடத்தும் 2017/18 ஆம் ஆண்டின் உள்ளூர் பருவத்திற்கான பிரீமியர் லீக் A நிலை தொடரின் நான்கு சுப்பர் 8 போட்டிகளின் மூன்றாவது நாள் ஆட்டம் வெள்ளிக்கிழமை (02) நடைபெற்றது. அதேபோன்று மூன்று பிளேட் சம்பியன்ஷிப் போட்டிகளின் இரண்டாவது நாள் ஆட்டமும் நடைபெற்றது.
கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம்
கோல்ட்ஸ் அணியுடனான போட்டியை 4 விக்கெட்டுகளால் வென்ற சிலாபம் மேரியன்ஸ் அணி சுப்பர் 8 சுற்றில் இதுவரை நடந்த இரண்டு போட்டிகளிலும் வென்று முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது.
கொழும்பு SSC மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டி மூன்று நாட்களுக்குள்ளேயே முடிவுற்றது. இதில் 233 ஓட்ட வெற்றி இலக்கை நோக்கி ஆட்டத்தின் மூன்றாவது நாளில் தனது இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த சிலாபம் மேரியன்ஸ் அணிக்கு ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஷெஹான் ஜயசூரிய கைகொடுத்தார். 5 ஓட்டங்களால் தனது 8ஆவது முதல்தர சதத்தை தவறவிட்ட அவர் 108 பந்துகளில் 95 ஓட்டங்களை பெற்றார்.
பலம் மிக்க சிலாபம் மேரியன்ஸை ஆட்டம் காணச்செய்த பிரபாத் ஜயசூரிய
அதேபோன்று சச்சித்ர சேரசிங்க 23 ஒட்டங்களை பெற்றபோதும் இம்முறை பிரீமியர் லீக் தொடரில் முதல் வீரராக 800 ஓட்டங்களை கடந்துள்ளார்.
இதன்படி சிலாபம் மேரியன்ஸ் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 234 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது.
போட்டியின் சுருக்கம்
கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 169 (58) – பசிந்து லக்ஷங்க 37, சதீர சமரவிக்ரம 28, பிரியமால் பெரேரா 23, மலிந்த புஷ்பகுமார 5/40, இசுரு உதான 3/31, அசித பெர்னாண்டோ 2/22
சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 162 (37.5) – ஷெஹான் ஜயசூரிய 50, ஓஷத பெர்னாண்டோ 36, ருக்ஷான் ஷெஹான் 23, சலன டி சில்வா 22, பிரபாத் ஜயசூரிய 6/48, மொஹமட் அலி 2/30, நிசல தாரக்க 2/52
கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 225 (76) – ஹஷான் துமிந்து 57, நிசல தாரக்க 52, விஷாட் ரந்திக்க 35, பிரியமால் பெரேரா 27, இசுரு உதான 2/18, சச்சித்ர சேரசிங்க 2/29, ஷெஹான் ஜயசூரிய 2/51, மலிந்த புஷ்பகுமார 2/59
சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 234/6 (48.4) – ஷெஹான் ஜயசூரிய 95, கசுன் விதுர 57, சச்சித்ர சேரசிங்க 23, மொஹமட் அலி 2/34, நிசல தாரக்க 2/46
முடிவு – சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் 4 விக்கெட்டுகளால் வெற்றி.
BRC எதிர் செரசன்ஸ் விளையாட்டுக் கழகம்
சாமிக்கர எதிரிசிங்க மற்றும் திலகரத்ன சம்பத்தின் மிரட்டும் பந்துவீச்சுக்கு முன் விக்கெட்டுகளை பறிகொடுத்த செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் BRC அணியிடம் 83 ஓட்டங்களால் தோல்வி அடைந்தது.
கொழும்பு கோல்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியின் மூன்றாவது நாளில் செரசன்ஸ் அணிக்கு 290 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டபோதும் அந்த அணி நின்றுபிடித்து ஆடவில்லை. முதல் வரிசையில் வந்த மின்ஹாஜ் ஜலீல் ஒருமுனையில் பொறுப்புடன் ஆட மறுமுனை விக்கெட்டுகள் மளமளவென்று பறிபோயின. இதனால் செரசன்ஸ் அணி 206 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. ஜலீல் மாத்திரம் 90 ஓட்டங்களோடு கடைசி வரை களத்தில் இருந்தார்.
அபாரமாக பந்து வீசிய சாமிக்கர எதிரிசிங்க 5 விக்கெட்டுகளையும் திலகரத்ன சம்பத் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
போட்டியின் சுருக்கம்
BRC (முதல் இன்னிங்ஸ்) – 168 (57.3) – விகும் சஞ்சய 34, ஹஷேன் ராமனாயக்க 30, ருமேஷ் புத்திக்க 21, ரனித்த லியனாரச்சி 3/35, மொஹமட் டில்ஷாட் 2/38
செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 173 (49.5) – கமிந்து கனிஷ்க 51, தனுக்க தாபரே 30, சுராஜ் ரந்திவ் 4/26, திலகரத்ன சம்பத் 4/31, விகும் சஞ்சய 2/37
BRC (இரண்டாவது இன்னிங்ஸ்) – 294 (81.5) – டேஷான் டயஸ் 72, லசித் லக்ஷான் 47, ஹர்ஷ விதான 45, விகும் சஞ்சய 41*, திலகரத்ன சம்பத் 23, சச்சித்ர பெரேரா 6/87, ரனித்த லியனாரச்சி 2/68
செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 206 (64.4) – மின்ஹாஜ் ஜலீல் 90*, தனுக்க தாபரே 38, சாமிக்கர எதிரிசிங்க 5/69, திலகரத்ன சம்பத் 4/57
முடிவு – BRC அணி 83 ஓட்டங்களால் வெற்றி
SSC எதிர் NCC
ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய விக்கெட் காப்பாளர் மினோத் பானுக்க பெற்ற அபார சதத்தால் NCC அணிக்கு எதிராக SSC அணி இரண்டாவது இன்னிங்சில் 347 ஓட்டங்களால் முன்னிலை பெற்றுள்ளது.
இரட்டைச் சதத்தை தவறவிட்ட மெண்டிஸ்; மிக வலுவான நிலையில் இலங்கை
கொழும்பு CCC மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியின் மூன்றாவது நாளில் தனது இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த SSC அணி ஆட்ட நேர முடிவின்போது 9 விக்கெட்டுகளை இழந்து 298 ஓட்டங்களை பெற்றுள்ளது. மினோத் பானுக்க 110 ஓட்டங்களை குவித்தார். இதன் மூலம் NCC அணிக்கு சவாலான வெற்றி இலக்கை நிர்ணயிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
போட்டியின் சுருக்கம்
SSC (முதல் இன்னிங்ஸ்) – 347 (93.1) – மிலிந்த சிறிவர்தன 70, தசுன் ஷானக்க 63, சரித் அசலங்க 56, ஷம்மு அஷான் 40, சாமர கபுகெதர 33, மினோத் பானுக்க 28, லசித் அம்புல்தெனிய 5/81, பர்வீஸ் மஹ்ரூப் 2/59, சாமிக்க கருணாரத்ன 2/86
NCC (முதல் இன்னிங்ஸ்) – 298 (82.2) – அஞ்செலோ பெரேரா 107, மஹேல உடவத்த 46, சதுன் வீரக்கொடி 44, சதுரங்க டி சில்வா 38, தம்மிக்க பிரசாத் 4/37, தசுன் ஷானக்க 3/29, ஜெப்ரி வென்டர்சே 2/113
SSC (இரண்டாவது இன்னிங்ஸ்) – 298/9 (82.1) – மினோத் பானுக்க 110, கவிந்து குலசேகர 47, தசுன் ஷானக்க 38, மிலிந்த சிறிவர்தன 24, லசித் அம்புல்தெனிய 4/88, சாமிக்க கருணாரத்ன 2/39, தரிந்து கௌஷால் 2/69
ராகம கிரிக்கெட் கழகம் எதிர் இலங்கை துறைமுக அதிகாரசபை கிரிக்கெட் கழகம்
இலங்கை துறைமுக அதிகாரசபை அணி முதல் இன்னிங்சில் 485 ஓட்டங்களை பெற்ற நிலையில் ராகம கிரிக்கெட் கழகம் இன்னிங்ஸ் தோல்வி ஒன்றை தவிர்க்க போராடி வருகிறது.
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றுவரும் இப்போட்டியின் மூன்றாவது நாளில் தனது முதல் இன்னிங்சைத் தொடர்ந்த துறைமுக அதிகாரசபை அணிக்காக கயான் மனீஷன் ஆட்டமிழக்காது 139 ஓட்டங்களை பெற்றார்.
கேலிக்கையான கிரிக்கெட் போட்டி குறித்து ICC விசாரணை
முதல் இன்னிங்சில் 216 ஓட்டங்களால் பின்தங்கிய நிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த ராகம கிரிக்கெட் கழகம் மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவின்போது 28 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்து நெருக்கடியை சந்தித்துள்ளது.
போட்டியின் சுருக்கம்
ராகம் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 269 (98) – லஹிரு திரிமான்ன 52, சமிந்து பெர்னாண்டோ 42, உதார ஜயசுந்தர 39, லஹிரு மலிந்த 37, சமீர டி சொய்சா 22, சதுர பீரிஸ் 20, சானக்க கோமசாரு 5/66, மதுக லியனபதிரனகே 3/74, சரித் ஜயம்பதி 2/70
இலங்கை துறைமுக அதிகாரசபை கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 485/9d (154.3) – கயான் மனீஷன் 139*, கிஹான் ரூபசிங்க 66, யொஹான் டி சில்வா 66, சரித் ஜயம்பதி 62*, நிக் கொப்டன் 62, மதுக லியனபதிரனகே 20, அமில அபொன்சோ 3/82, லஹிரு மலிந்த 2/11, இஷான் ஜயரத்ன 2/75
ராகம் கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 28/1 (12)
இரண்டு போட்டிகளினதும் நான்காவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நாளை தொடரும்.
பிளேட் சம்பியன்சிப் போட்டிகளின் சுருக்கம்
ப்ளூம்பீல்ட் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம் எதிர் தமிழ் யூனியன் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம்
ப்ளூம்பீல்ட் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 323 (81.5) – ரமேஷ் மெண்டிஸ் 137*, நிசல பிரான்சிஸ்கோ 48, நிபுன் கருனநாயக்க 45, ஜீவன் மெண்டிஸ் 6/100, திஸ்னக்க மனோஜ் 2/53
தமிழ் யூனியன் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 295/5 (91) – பினுர பெர்னாண்டோ 82, தரங்க பரணவிதான 68*, தினுக் விக்ரமநாயக்க 50, சிதார கிம்ஹான் 50, மலித் டி சில்வா 3/56, கொஷான் தனுஷ்க 2/79
கொழும்பு கிரிக்கெட் கழகம் (CCC) எதிர் இலங்கை இராணுவப்படை விளையாட்டுக் கழகம்
கொழும்பு கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 333 (79.4) – லசித் அபேரத்ன 109, மலிந்து மதுரங்க 63, வனிந்து ஹசரங்க 35, சச்சித் பதிரண 27, அஷான் பிரியஞ்சன் 27, ரொன் சந்திரகுப்தா 22, தசுன் விமுக்தி 5/66, சீகுகே பிரசன்ன 2/96
இலங்கை இராணுவப்படை விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 265 (76) – டில்ஷான் டி சொய்சா 62, அசேல குணரத்ன 51, யசோத மெண்டிஸ் 34, துஷான் விமுக்தி 33, சீக்குகே பிரசன்ன 26*, லக்ஷித மதுஷான் 24*, சச்சித் பதிரண 7/76, தினுக் ஹெட்டியாரச்சி 2/78
கொழும்பு கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 56/7 (20.3) – சீகுகே பிரசன்ன 4/13, துஷான் விமுக்தி 2/07
பதுரெலிய விளையாட்டுக் கழகம் எதிர் சோனகர் விளையாட்டுக் கழகம்
சோனகர் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 214 (49.1) – திலக் சுமனசிரி 53, சரித்த குமாரசிங்க 24, இரோஷ் சமரசூரிய 22, அலங்கார அசங்க 4/51, சவித் பிரியான் 2/37, மதுர லக்மால் 2/47, டிலேஷ் குணரத்ன 2/63
பதுரெலிய விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 338 (113.5) – சலிது உஷான் 97, நதீர நாவல 95, சஞ்சய சதுரங்க 37, சுப்ரமனியன் ஆனந்த் 30, சவித் பிரியான் 24, டிலங்க சதகன் 4/79, ஷிரான் பெர்னாண்டோ 2/45, சாமர சில்வா 2/27
சோனகர் விளையாட்டுக் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 40/0 (12) – பிரிமோஷ் பெரேரா 24*
மூன்று போட்டிகளினதும் மூன்றாவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நாளை தொடரும்.