அரைச்சதம் கடந்த பானுக்க; தொடர்ந்தும் அசத்தும் திரிமான்ன

139

இலங்கை கிரிக்கெட் சபை (SLC), பிரிவு A உள்ளூர் கழகங்கள் இடையே நடாத்தும் மூன்று நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரில் இன்று (29) ஆறு போட்டிகளின் இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்தது.

இன்றைய நாளுக்கான போட்டிகளில் இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் வீரர்கள் பலர் தங்களது திறமைகளை நிரூபித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இலங்கை T20 அணியில் வாய்ப்பினை பெறத்தவறிய பானுக்க ராஜபக்ஷ கோல்ட்ஸ் அணிக்கு எதிரான மோதலில், பலோவ் ஒன் (follow on) முறையில் துடுப்பாடும் BRC அணிக்காக அரைச்சதம் விளாசி 87 ஓட்டங்களினைக் குவித்திருந்தார்.

இதேநேரம், றாகம கிரிக்கெட் கழகத்திற்காக ஆடிவரும் லஹிரு திரிமான்ன போட்டியின் முதல் நாளில் சதத்தினை மூன்று ஓட்டங்களால் தவறவிட்டு (97) சிறந்த இன்னிங்ஸை வெளிப்படுத்தியது போல் இன்றைய நாளிலும் அசத்தியிருந்தார். அந்தவகையில், திரிமான்ன சிலாபம் மேரியன்ஸ் அணிக்கு எதிரான தனது இரண்டாவது இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தில் அரைச்சதம் பெற்று 66 ஓட்டங்களை எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கொழும்பு கிரிக்கெட் கழக வீரரான பவன் ரத்நாயக்க சோனகர் கிரிக்கெட் கழகத்திற்காக 163 ஓட்டங்கள் பெற்று இன்றைய நாளில் பெறப்பட்ட முதல் சதத்தினை பதிவு செய்ய, தமிழ் யூனியன் அணியின் மனோஜ் சரச்சந்திர 133 ஓட்டங்களுடன் இன்றைய நாளில் இரண்டாவது சதம் பெற்ற வீரராக மாறினார்.

பந்துவீச்சினை பொறுத்தவரையில்  கோல்ட்ஸ் அணிக்காக ஆடும் இலங்கை தேசிய அணியின் சுழல் பந்துவீச்சாளரான பிரபாத் ஜயசூரிய 6 விக்கெட்டுக்களை சாய்க்க, ஏனைய தேசிய அணி சுழல் வீரர்களான சச்சித்ர சேனநாயக்க மற்றும் அமில அபொன்சோ ஆகியோர் தலா 5 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றி சிறப்பாக செயற்பட்டது குறிப்பிடத்தக்கது.

மூன்றாம் நாள் போட்டிகளின் சுருக்கம்

றாகம கிரிக்கெட் கழகம் எதிர் சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் 

இடம் – சோனகர் கிரிக்கெட் கழகம்

றாகம கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 204 (62.2) – லஹிரு திரிமான்ன 97, நிமேஷ் விமுக்தி 6/62

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 268 (60.5) – லசித் குரூஸ்புள்ளே 99, அமில அபொன்சோ 5/98

றாகம கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 233/1 (52) – சமிந்த பெர்னாந்து 90*, உதார ஜயசுந்தர 67*, லஹிரு திரிமான்ன 66


SSC எதிர் இராணுவப்படை கிரிக்கெட் கழகம்

இடம் – கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம், கொழும்பு

SSC (முதல் இன்னிங்ஸ்) – 229 (71) – சம்மு அஷான் 77*, ஜனித் சில்வா 4/53

இராணுவப்படை கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 274 (80) – ஹிமாஷ லியனகே 90*, சச்சித்ர சேனநாயக்க 5/56

SSC (இரண்டாவது இன்னிங்ஸ்) – 88/3 (24) – சந்துன் வீரக்கொடி 34


கொழும்பு கிரிக்கெட் கழகம் எதிர் சோனகர் கிரிக்கெட் கழகம் 

இடம் – கொழும்பு கிரிக்கெட் கழக மைதானம்

கொழும்பு கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 547 (133.4) – பவன் ரத்நாயக்க 164*, லஹிரு மதுஷங்க 89, சத்துர ரன்துனு  3/188, சச்சித்ர சேரசிங்க 2/62

சோனகர் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 191/3 (44) – சரித்த குமாரசிங்க 55, ரமேஷ் மெண்டிஸ் 43*


பதுரெலிய கிரிக்கெட் கழகம் எதிர் செரசன்ஸ் விளையாட்டுக் கழகம்

இடம் – சர்ரே மைதானம், மக்கோன

பதுரெலிய கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 365 (94.4) – சஹீட் யூசுப் 142, கமிந்து கனிஷ்க 4/54

செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 244/3 (81) – சித்தரா கிம்ஹான் 73, புத்திக்க சஞ்சீவ 2/63


NCC எதிர் தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் 

இடம் – NCC மைதானம், கொழும்பு

NCC (முதல் இன்னிங்ஸ்) – 339 (69.2) – பெதும் நிஸ்ஸங்க 94, பிரமோத் லியனகமகே 4/67

தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 391/8 (108) – மனோஜ் சரச்சந்திர 133*, சாமிக்க கருணாரத்ன 2/65


கோல்ட கிரிக்கெட் கழகம் எதிர் BRC 

Photos: BRC Vs Colts CC | SLC Major League Tier ‘A’ Tournament 2019/20

இடம் – BRC மைதானம், கொழும்பு

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 366 (86.1) – பிரியமல் பெரேரா 99, சதீர சமரவிக்ரம 66, துவிந்து திலகரட்ன 8/147

BRC (முதல் இன்னிங்ஸ்) – 168 (42.1) – தரிந்து கெளஷால் 38, நளின் பிரியதர்ஷன 4/67

BRC (இரண்டாம் இன்னிங்ஸ்) f/o – 214 (45.3) – பானுக்க ராஜபக்ஷ 87, பிரபாத் ஜயசூரிய 6/65

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் (இரண்டாம் இன்னிங்ஸ்) – 17/4 (4)

முடிவு – கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் 6 விக்கெட்டுகளால் வெற்றி

அனைத்து போட்டிகளினதும் மூன்றாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்