சதத்தினை தவறவிட்ட தரங்க பரணவிதான

175

இலங்கை கிரிக்கெட் சபை (SLC), பிரிவு A உள்ளூர் கழகங்கள் இடையே நடாத்தும் மூன்று நாட்கள் கொண்ட ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று (18) நிறைவடைந்த லங்கன் கிரிக்கெட் கழகம் மற்றும் தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் இடையிலான மோதல் சமநிலை அடைந்தது.

இலங்கை லெஜன்ட்ஸ் அணியின் தலைவராக திலகரட்ன டில்ஷான்

இந்த ஆண்டில், கிரிக்கெட் விளையாட்டானது…….

கடந்த ஞாயிற்றுக்கிழமை (16) கொழும்பு கிரிக்கெட் கழக மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற தமிழ் யூனியன் அணியினால் முதலில் துடுப்பாட பணிக்கப்பட்ட லங்கன் கிரிக்கெட் கழகம் தமது முதல் இன்னிங்ஸில் 271 ஓட்டங்களை எடுத்தது. 

லங்கன் கிரிக்கெட் கழகத்தின் துடுப்பாட்டம் சார்பாக, பிரிமோஷ் பெரேரா 69 ஓட்டங்கள் பெற்று தனது தரப்பில் கூடுதல் ஓட்டங்களை பதிவு செய்திருந்தார். இதேநேரம், தமிழ் யூனியன் அணியின் பந்துவீச்சு சார்பில் தேசிய கிரிக்கெட் அணி வீரர்களான ஜீவன் மெண்டிஸ் மற்றும் சுரங்க லக்மால் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகள் வீதம் சாய்த்திருந்தனர்.

இதன் பின்னர், தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பாடிய தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் 269 ஓட்டங்களை எடுத்தது. தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகத்தின் துடுப்பாட்டம் சார்பாக, இலங்கை டெஸ்ட் அணியின் முன்னாள் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தரங்க பரணவிதான 92 ஓட்டங்கள் பெற்று, சதத்தினை வெறும் 8 ஓட்டங்களால் தவறவிட்டிருந்தார். இதேநேரம், லங்கன் கிரிக்கெட் கழக அணியின் பந்துவீச்சு சார்பில் கீத் குமார 4 விக்கெட்டுக்களை சாய்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து, 2 ஓட்டங்கள் முன்னிலை பெற்றவாறு தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்ட த்தை ஆரம்பித்த லங்கன் கிரிக்கெட் கழகம் 4 விக்கெட்டுக்களை இழந்து 224 ஓட்டங்கள் பெற்றிருந்த போது, போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்து போட்டி சமநிலையில் முடிவடைந்தது.

லங்கன் கிரிக்கெட் கழகத்தின் துடுப்பாட்டம் சார்பில் ஏற்கனவே, பந்துவீச்சில் சிறப்பாக செயற்பட்ட கீத் குமார 70 ஓட்டங்கள் பெற்று ஆட்டமிழக்காமல் நிற்க, தமிழ் யூனியன் அணிக்காக முன்னர் பந்துவீச்சில் அசத்திய ஜீவன் மெண்டிஸ் 2 விக்கெட்டுக்களை கைப்பற்றி போட்டியில் மொத்தமாக 6 விக்கெட்டுக்களை சாய்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

லங்கன் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 271 (93.2) ப்ரிமோஷ் பெரேரா 64, சுரங்க லக்மால் 4/50, ஜீவன் மெண்டிஸ் 4/91

தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 269 (92.5) தரங்க பரணவிதான 92, யோஹான் மெண்டிஸ் 48, கீத் குமார 4/30

லங்கன் கிரிக்கெட் கழகம் (இரண்டாம் இன்னிங்ஸ்) – 224/4 (64) கீத் குமார 70*, ஜீவன் மெண்டிஸ் 2/63

முடிவு – போட்டி சமநிலையில் அடைந்தது

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<