முதல்தரப் போட்டிகளில் சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்திய கசுன் ராஜித

194

இலங்கை கிரிக்கெட் சபை (SLC), இலங்கையின் உள்ளூர் முதல்தரக்கழகங்கள் இடையே நடாத்தும் மூன்று நாட்கள் கொண்ட ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று (14) ஐந்து போட்டிகள் ஆரம்பமாகின.

இன்று ஆரம்பமாகிய போட்டிகளில் இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் வீரர்கள் பந்துவீச்சில் தங்களது திறமைகளை வெளிக்காட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

கிரிக்கெட்டை மீண்டும் கொண்டுவர பாகிஸ்தான் சென்றுள்ள MCC

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை மீண்டும்…..

இந்தப் பட்டியலில் முதல் வரும் வீரராக இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர்களில் ஒருவரான கசுன் ராஜித மாறியிருந்தார். செரசன்ஸ் அணிக்காக ஆடிவரும் கசுன் ராஜித றாகம கிரிக்கெட் கழகத்திற்கு எதிரான மோதலில் வெறும் 31 ஓட்டங்களை மாத்திரம் விட்டுத்தந்து 8 விக்கெட்டுக்களைச் சாய்த்திருந்தார். அத்தோடு, ராஜிதவின் இந்தப் பந்துவீச்சு முதல்தரப் போட்டிகளில் அவரின் சிறந்த பந்துவீச்சுப் பெறுதியாகவும் மாறியது.

இதேநேரம், ராஜிதவின் பந்துவீச்சில் சிதைந்து போன றாகம கிரிக்கெட் கழக அணியினர், தமது முதல் இன்னிங்ஸில் 119 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து மோசமான துடுப்பாட்டத்தினை வெளிப்படுத்தியிருந்தனர்.

அதேவேளை, இலங்கை அணிக்காக ஒரு வருடத்திற்கு முன்னர் ஒருநாள் போட்டிகள் மூலம் சர்வதேச அறிமுகம் பெற்றுக் கொண்ட சுழல் பந்துவீச்சாளரான பிரபாத் ஜயசூரியவும் அசத்தல் பந்துவீச்சினை வெளிப்படுத்தினார். கோல்ட்ஸ் அணிக்காக ஆடிவரும் பிரபாத் ஜயசூரிய, SSC அணிக்கு எதிரான மோதலில் 5 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் தவிர சிலாபம் மேரியன்ஸ் கழகத்திற்காக ஆடிவரும் இளம் வேகப்பந்துவீச்சாளரான அசித்த பெர்னாந்து, NCC அணிக்கு எதிராக 5 விக்கெட்டுக்களைச் சாய்த்ததன் மூலம் இன்றைய நாளுக்கான போட்டிகளில் ஐந்து விக்கெட்டுக்கள் கைப்பற்றிய மூன்றாவது பந்துவீச்சாளராக மாறினார். 

துடுப்பாட்டத்தினை பொறுத்தவரை, சந்துன் வீரக்கொடி SSC அணிக்காக அரைச்சதம் தாண்டி பெற்ற 55 ஓட்டங்களே, இலங்கையின் தேசிய கிரிக்கெட் அணி வீரர் ஒருவர் இன்றைய நாளில் வெளிப்படுத்திய சிறந்த துடுப்பாட்டமாக அமைந்தது. இதேநேரம், NCC அணிக்காக சஹான் ஆராச்சிகே 128  ஓட்டங்கள் பெற்று திறமையை வெளிப்படுத்தியிருந்தார். இவர் தவிர சோனகர் கிரிக்கெட் கழகத்திற்காக ஆடிய முன்வரிசை துடுப்பாட்ட வீரர் சச்சித்ர சேரசிங்க 94 ஓட்டங்கள் எடுத்து சதத்தினை வெறும் ஆறு ஓட்டங்களால் தவறவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

SLC தலைவர் பதினொருவர் அணியில் தரங்க, அசேல, திரிமான்ன

மேற்கிந்திய தீவுகள் அணியுடன்…..

முதல் நாள் போட்டிகளின் சுருக்கம்

றாகம கிரிக்கெட் கழகம் எதிர் செரசன்ஸ் விளையாட்டுக் கழகம்

இடம் – சர்ரே மைதானம், மக்கோன

றாகம கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 119 (53) – லஹிரு திரிமான்ன 28, கசுன் ராஜித 8/31

செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 134/1 (37) – சித்தார கிம்ஹான் 74, நவிந்து விதானகே 52*


NCC எதிர் சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் 

இடம் – மேரியன்ஸ் கிரிக்கெட் கழக மைதானம், கட்டுநாயக்க

NCC (முதல் இன்னிங்ஸ்) – 312 (79) – சஹான் ஆராச்சிகே 128, சாமிக்க குணசேகர 50, அசித்த பெர்னாந்து 5/47

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் (இரண்டாம் இன்னிங்ஸ்) – 35/1 (7)


நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் எதிர் இராணுவப்படை விளையாட்டுக் கழகம் 

இடம் – சோனகர் கிரிக்கெட் கழக மைதானம், கொழும்பு

இராணுவப்படை கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 155 (42.1) – ஹிமாஷ லியனகே 56, உபுல் இந்திரசிறி 3/73

நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 164/2 (42.2) – அஷேன் சில்வா 61*, அஞ்செலோ ஜயசிங்க 51*, டில்ஷான் முனவீர 40


SSC எதிர் கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம்

இடம் – கோல்ட்ஸ் மைதானம், கொழும்பு

SSC (முதல் இன்னிங்ஸ்) – 301 (76) – சந்துன் வீரக்கொடி 55, பிரபாத் ஜயசூரிய 5/89

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 14/2 (6)


சோனகர் கிரிக்கெட் கழகம் எதிர் BRC

இடம் – BRC மைதானம், கொழும்பு

சோனகர் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 353 (77.3) – சச்சித்ர சேரசிங்க 94, துவிந்து திலகரட்ன 3/103

BRC – 23/1 (10)

இன்று ஆரம்பமாகிய அனைத்துப் போட்டிகளினதும் இரண்டாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<