பிரீமியர் லீக் ‘சுப்பர் 8’ சுற்றில் SSC அணிக்கு முதல் வெற்றி

220

இலங்கை கிரிக்கெட் சபை நடத்தும் 2017/18ஆம் ஆண்டின் உள்ளூர் பருவத்திற்கான பிரீமியர் லீக் A நிலை தொடரின் நான்கு சுப்பர் 8 போட்டிகளின் மூன்றாவது நாள் ஆட்டம் சனிக்கிழமை (26) நடைபெற்றது. அதேபோன்று மூன்று பிளேட் சம்பியன்சிப் போட்டிகளின் இரண்டாவது நாள் ஆட்டமும் நடைபெற்றது.

SSC எதிர் இலங்கை துறைமுக அதிகாரசபை கிரிக்கெட் கழகம்

இலங்கை துறைமுக அதிகாரசபை அணியை இன்னிங்ஸ் மற்றும் 82 ஓட்டங்களால் வீழ்த்திய SSC அணி சுப்பர் 8 சுற்றில் முதல் வெற்றியை சுவீகரித்தது.

கௌஷால் சில்வா, கபுகெதர ஆகியோரின் சதத்தால் SSC அணிக்கு இன்னிங்ஸ் வெற்றி வாய்ப்பு

இன்னிங்ஸ் தோல்வி ஒன்றை தவிர்ப்பதற்கு 248 ஓட்டங்களை பெற வேண்டிய நிலையில் மூன்றாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்த துறைமுக அதிகாரசபை அணி 166 ஓட்டங்களுக்கே சுருண்டது. இதன்மூலம் நான்கு நாட்கள் கொண்ட ஆட்டம் மூன்றாவது நாளிலேயே முடிவுற்றது. இந்த போட்டி கொழும்பு, பி சரா ஓவல் மைதானத்தில் நடைபெற்றது.  

போட்டியின் சுருக்கம்

இலங்கை துறைமுக அதிகாரசபை கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 165 (44.2) – கிஹான் ரூபசிங்க 36, யொஹான் டி சில்வா 24, யஷோத லங்கா 21, தசுன் ஷானக்க 3/26, ஜெப்ரி வென்டர்சே 3/28, சசித்ர சேனநாயக்க 3/40

SSC (முதல் இன்னிங்ஸ்) – 413 (104) – கௌஷால் சில்வா 120, சாமர கபுகெதர 109, கவின்து குலசேகர 78, மிலிந்த சிறிவர்தன 49, மினோத் பானுக்க 20, சானக்க கொமசரு 4/119, அகலங்க கனேகம 3/99

இலங்கை துறைமுக அதிகாரசபை கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 166 (4-.1) – யஷோத லங்கா 67, தசுன் ஷானக்க 3/64, ஜெப்ரி வென்டர்சே 3/40, சசித்ர சேனநாயக்க 3/11

முடிவு SSC அணி இன்னிங்ஸ் மற்றும் 82 ஓட்டங்களால் வெற்றி


சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் செரசன்ஸ் விளையாட்டுக் கழகம்      

செரசன்ஸ் விளையாட்டுக் கழகத்திற்கு எதிராக சிலாபம் மேரியன்ஸ் வெற்றி வாய்ப்பை நெருங்கியுள்ளது. 424 என்ற சவாலான வெற்றி இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸை ஆடி வரும் செரசன்ஸ் அணி மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில் 92 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறுகிறது.

கொழும்பு, SSC மைதானத்தில் நடைபெறும் போட்டியில் மூன்றாவது நாளில் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த சிலாபம் மேரியன்ஸ் அணி 259 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்த நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.

இதன்போது முதல் இன்னிங்ஸில் சதம் பெற்ற சச்சித்ர சேரசிங்க 87 ஓட்டங்களை குவித்தார். இந்த ஓட்டங்கள் மூலம் இம்முறை பிரீமியர் லீக் தொடரில் மொத்தம் 786 ஓட்டங்களை பெற்று அதிக ஓட்டங்கள் பெற்றவர் வரிசையில் சக வீரர் ஓஷத பெர்னாண்டோவை முந்தினார்.

போட்டியின் சுருக்கம்

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 401 (109.2) ஓஷாத பெர்னாண்டோ 112, சச்சித்ர சேரசிங்க 112, அஷேன் சில்வா 47, திக்ஷில டி சில்வா 45, சாலிய சமன் 5/76  

செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 236 (65.5) – கமின்து கனிஷ்க 43, ஹர்ஷ குரே 41, அசித்த பெர்னாண்டோ 5/47, மலிந்த புஷ்பகுமார 3/71

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 259/8 d (56.3) – சச்சித்ர சேரசிங்க 87, ஷெஹான் ஜயசூரிய 40, ரிசித் உபமால் 39, அஷேன் சில்வா 32, சதுர ரன்துனு 4/68

செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 92/5 (31) – ஹர்ஷ குரே 34, பிரமோத் மதுவன்த 21*, மலிந்த புஷ்பகுமார 2/35   


BRC எதிர் கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம்

கவீஷ்க அன்ஜுல மற்றும் பிரபாத் ஜயசூரியவின் அதிரடி பந்துவீச்சால் BRC அணியை இரண்டாவது இன்னிங்ஸில் 122 ஓட்டங்களுக்கு சுருட்டிய கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகத்தின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.

மததுசங்கவின் கன்னி ஹட்ரிக்கொடு முக்கோண ஒரு நாள் தொடரின் சம்பியனான இலங்கை

இதன்படி 202 ஓட்ட வெற்றி இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிவரும் கோல்ட்ஸ் அணி மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவின்போது 2 விக்கெட்டுகளை இழந்து 106 ஓட்டங்களுடன் வலுவான நிலையில் உள்ளது. அந்த அணி வெற்றி பெற கடைசி நாள் ஆட்டத்தில் இன்னும் 96 ஓட்டங்களே பெறவேண்டி உள்ளது.

கட்டுநாயக்க, சுதந்திர வர்த்தக வலய விளையாட்டு அரங்கில் நடைபெற்று வரும் போட்டியின் மூன்றாவது நாளில் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த BRC அணி எதிர்பாராத விதமாக அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இதன்போது அன்ஜுல மற்றும் பிரபாத் தலா 4 விக்கெட்டுகளை பதம்பார்த்தனர்.

போட்டியின் சுருக்கம்

BRC (முதல் இன்னிங்ஸ்) – 310 (90.2) – சஷின் டில்ரங்க 124, ஹஷேன் ராமனாயக்க 66, ஹர்ஷ விதான 41, நிசல தாரக்க 6/71, பிரபாத் ஜயசூரிய 2/62

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 231 (97.1) – பிரியமால் பெரேரா 88, அஞ்செலோ ஜயசிங்க 37, நிசல தாரக்க 31, விஷாத் ரன்திக்க 22, நிரஞ்சன வன்னியாரச்சி 4/38, ஹஷேன் ராமனாயக்க 3/47, சுராஜ் ரன்திவ் 2/36

BRC (இரண்டாவது இன்னிங்ஸ்) – 122 (38.4) – லசித் லக்ஷான் 64, ருமேஷ் புத்திக்க 22, கவிஷ்க அஞ்ஜுல 4/35, பிரபாத் ஜயசூரிய 4/15, நிசல தாரக்க 2/26

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 106/2 (29) – சங்கீக் குரே 39, பசிந்து லக்ஷான் 26, சதீர சமரவிக்ரம 20*, சுராஜ் ரன்திவ் 2/31


NCC எதிர் ராகம கிரிக்கெட் கழகம்   

கொழும்பு, கோல்ட்ஸ் கிரிக்கெட் கழக மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில் NCC மற்றும் ராகம கிரிக்கெட் கழகம் ஆகிய இரு அணிகளும் வெற்றிக்காக போராடி வருகின்றன.

126 ஓட்டங்கள் வெற்றி இலக்குடன் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்திருக்கும் ராகம கிரிக்கெட் கழகம் மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவின்போது 45 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது. இதன்படி NCC வெற்றிபெற எஞ்சிய 6 விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டி இருப்பதோடு ராகம கிரிக்கெட் கழகத்திற்கு மேலும் 81 ஓட்டங்கள் தேவை. எவ்வாறாயினும் ராகம அணித்தலைவர் லஹிரு திரிமான்ன 12 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளமை அந்த அணிக்கு சாதகமானதாகும்.

இளையோர் உலகக் கிண்ண பிளேட் இறுதிப்போட்டியில் இலங்கை

மறுபுறம் அபாரமாக பந்து வீசிய தரிந்து கௌஷால் 3 விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்தினார்.

போட்டியின் சுருக்கம்

NCC (முதல் இன்னிங்ஸ்) – 247 (761) – சதுரங்க டி சில்வா 90, சாமிக்க கருணாரத்ன 32, பர்வீஸ் மஹ்ரூப் 24, சதுன் வீரக்கொடி 24, தரிந்து கௌஷால் 23*, இசுரு ஜயரத்ன 4/46, அமில அபொன்சோ 3/72, ஜனித் லியனகே 2/41

ராகம கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 337 (108.3) – ஜனித் லியனகே 69, உதார ஜயசுந்தர 57, லஹிரு திரிமான்ன 56, சமீர டி சொய்சா 39, அக்சு பெர்னாண்டோ 32, ஷெஹான் பெர்னாண்டோ 23, சாமிக்க பெர்னாண்டோ 4/80, பர்வீஸ் மஹ்ரூப் 2/48

NCC (இரண்டாவது இன்னிங்ஸ்) – 215 (57.1) – சாமிக்க கருணாரத்ன 51, மாலிங்க அமரசிங்க 34, சதுரங்க டி சில்வா 37, நிஷான் பீரிஸ் 5/56

ராகம கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 45/4 (19) தரிந்து கௌஷால் 319

மூன்று போட்டிகளின் நான்காவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நாளை தொடரும்


பிளேட் சம்பியன்சிப் போட்டிகள்

ப்ளூம்பீல்ட் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம் எதிர் இலங்கை இராணுவப்படை விளையாட்டுக் கழகம்

கொழும்பு, சோனகர் விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெறும் போட்டியில் வெற்றி பெற ப்ளூம்பீல்ட் மற்றும் இலங்கை இராணுவப்படை அணிகள் போராடி வருகின்றன.

199 ஓட்ட வெற்றி இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடி வரும் இலங்கை இராணுவப்படை அணி இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவின்போது 53 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது. இதன்படி ஆட்டத்தின் கடைசி நாளில் ப்ளூம்பீல்ட் அணியின் வெற்றிக்கு 7 விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டி இருப்பதோடு இராணுவப்படை அணியின் வெற்றிக்கு இன்னும் 147 ஓட்டங்கள் தேவை.

போட்டியின் சுருக்கம்   

ப்ளூம்பீல்ட் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 163 (38.3) – அதீஷ நாணயக்கார 35, பிரமுத் ஹெட்டிவத்த 33, ரமேஷ் மெண்டிஸ் 24, துஷான் விமுக்தி 6/77

இலங்கை இராணுவப்படை விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 171 (52.2) – டில்ஷான் டி சொய்சா 35, லியோ பிரான்சிஸ்கோ 31, அஷேன் ரன்திக்க 30, அஜந்த மெண்டிஸ் 37, மலிந்த டி சில்வா 5/69, ரமேஷ் மெண்டிஸ் 2/23, கசுன் ராஜித 2/30  

ப்ளூம்பீல்ட் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 206 (60) – நிபுன் கருனநாயக்க 91, நிசல பிரான்சிஸ்கோ 23, டிஷான் விமுக்தி 4/50, மல்க மதுஷங்க 3/38

இலங்கை இராணுவப்படை விளையாட்டுக் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 52/3 (22) – மலித் டி சில்வா 2/14


கொழும்பு கிரிக்கெட் கழகம் (CCC) எதிர் பதுரெலிய விளையாட்டுக் கழகம்

ரொன் சந்திரகுப்தாவுடன் மாதவ வர்ணபுர மற்றும் லசித் அபேரத்ன பெற்ற சதங்களால் கொழும்பு கிரிக்கெட் கழகம் பதுரெலிய விளையாட்டுக் கழகத்திற்கு எதிராக முதல் இன்னிங்ஸில் 480 என்ற இமாலய ஓட்டங்களை குவித்தது.

கொழும்பு ப்ளூம்பீல்ட் மைதானத்தில் நடைபெறும் போட்டியின் இரண்டாவது நாளில் தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த கொழும்பு கிரிக்கெட் கழகத்திற்கு வர்ணபுர ஆட்டமிழக்கா 138 ஓட்டங்களையும், அபேரத்ன 105 ஓட்டங்களையும் எடுத்தனர். இதன்மூலம் கொழும்பு கிரிக்கெட் கழகம் பாதியலேயே அட்டத்தை நிறுத்தி பதுரெலிய விளையாட்டுக் கழகத்தை துடுப்பெடுத்தாட அழைத்தது.

பதுரெலிய விளையாட்டுக் கழகமும் இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் 171 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து ஸ்திரமான நிலையில் உள்ளது.

போட்டியின் சுருக்கம்

கொழும்பு கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 480/5 d (110) – ரொன் சந்திரகுப்தா 130, மாதவ வர்ணபுர 138*, லசித் அபேரத்ன 105, அஷான் பிரியஜான் 66, மதுர லக்மால் 2/90, அலங்கார அசங்க 2/85

பதுரெலிய விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 171/3 (71) – நதீர நாவல 56, பதும் நிஸ்ஸங்க 42, சலிந்து உஷான் 51*


சோனகர் விளையாட்டுக் கழகம் எதிர் தமிழ் யூனியன் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம்

கொழும்பு, டீசுஊ மைதானத்தில் நடைபெறும் போட்டியில் தமிழ் யூனியன் அணிக்கு எதிராக சோனகர் விளையாட்டுக் கழகம் இரண்டாவது இன்னிங்ஸில் 166 ஓட்டங்களால் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.

முதல் இன்னிங்ஸில் 17 ஓட்டங்களால் முன்னிலை பெற்ற நிலையில் இரண்டாவது நாளில் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த சோனகர் விளையாட்டுக் கழகம் ஆட்ட நேர முடிவின்போது 2 விக்கெட் இழப்புக்கு 149 ஓட்டங்களை பெற்றுள்ளது.

போட்டியின் சுருக்கம்

சோனகர் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 260 (67.4) – ஷானுக்க துலாஜ் 82, இரோஷ் சமரசூரிய 44, பபசர வாதுகே 40, பிரமோத் மதுஷான் 4/53, ஜீவன் மெண்டிஸ் 4/97

தமிழ் யூனியன் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 243 (65.5) – பனுர பெர்னாண்டோ 56, மனோஜ் சரத்சந்திர 46, ஜீவன் மெண்டிஸ் 30, ஷிரான் பெர்னாண்டோ 4/74, தரிந்து ரத்னாயக்க 5/85

சோனகர் விளையாட்டுக் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 149/2 (39) –  இரோஷ் சமரசூரிய 51*, பிரிமோஷ் பெரேரா 41, பபசர வாதுகே 49

மூன்று போட்டிகளின் மூன்றாவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நாளை தொடரும்