உள்ளூர் போட்டிகளில் அசத்தும் தினேஷ் சந்திமால்

149

இலங்கை கிரிக்கெட் சபையினால் நடத்தப்படும் பிரிவு A உள்ளூர் கழகங்களுக்கு இடையிலான மூன்று நாட்கள் கொண்ட ப்ரீமியர் லீக் போட்டித் தொடரின் ஆறு போட்டிகள் இன்று (06) ஆரம்பமாயின. 

எனினும் மக்கொன சர்ரே மைதானத்தில் ஆரம்பமான B குழுவுக்கான NCC மற்றும் பதுரெலிய விளையாட்டுக் கழகங்களுக்கு இடையிலான போட்டி ஆபத்தான ஆடுகளம் காரணமாக 41.3 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் தடைப்பட்டது. 

தொடர்ந்து போட்டியில் முன்னிலை வகிக்கும் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் சென். ஜோன்ஸ் கல்லூரி அணிகள்…

இதன்போது முதலில் துப்பெடுத்தாடிய NCC அணி 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 133 ஓட்டங்களை பெற்றிருந்தது. பெத்தும் நிஸ்ஸங்க ஆட்டமிழக்காது 83 ஓட்டங்களுடன் இருந்தார்.

ஏனைய போட்டிகளின் விபரம் வருமாறு,

இராணுவப்படை கிரிக்கெட் கழகம் எதிர் சோனகர் விளையாட்டுக் கழகம்

தினேஷ் சந்திமால் உட்பட்ட இராணுவப்படை கிரிக்கெட் கழகத்தின் சிறப்பான துடுப்பாட்டத்தின் மூலம் சோனகர் விளையாட்டுக் கழகத்திற்கு எதிராக முதல் இன்னிங்ஸில் இராணுவப்படை அணி இமாலய ஓட்டங்களை எட்டியுள்ளது. 

பனாகொட, இராணுவப்படை மைதானத்தில் ஆரம்பமான இந்தப் போட்டியின் முதல்நாள் முடிவின்போது இராணுவப்படை கிரிக்கெட் கழகம் 349 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்துள்ளது. 

மத்திய வரிசையில் வந்த சந்திமால் 84 ஓட்டங்களையும், லக்ஷான் எதிரிசிங்க 86 ஓட்டங்களையும் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

இராணுவப்படை கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 349/6 (90) – லக்ஷான் எதிரிசிங்க 86, தினேஷ் சந்திமால் 84, அஷேன் ரந்திக்க 77, துஷான் விமுக்தி 54*, தனுஷ்க ரணசிங்க 4/67

CCC எதிர் கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம்

இளம் சுழல் பந்துவீச்சாளர் சொனால் தினுஷவின் அபார பந்துவீச்சு மூலம் கோல்ட்ஸ் அணிக்கு எதிராக CCC அணி வலுவான நிலையை பெற்றுள்ளது. 

தனது சொந்த மைதானத்தில் அரம்பமான இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கோல்ட்ஸ் அணியின் விக்கெட்டுகளை விரைவாக வீழ்த்துவதற்கு CCC அணியால் முடிந்தது. இதனால் கோல்ட்ஸ் கழகம் 205 ஓட்டங்களுக்கே சுருண்டதோடு 19 வயதான சொனால் தினுஷ 6 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

போட்டியின் சுருக்கம் 

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 205 (53.2) – சந்தோஷ் குணதிலக்க 67, விஷாட் டி சில்வா 46, தனஞ்சய லக்ஷான் 29, சொனால் தினுஷ 6/55, விஷ்வ பெர்னாண்டோ 3/40

CCC (முதல் இன்னிங்ஸ்) – 128/3 (22) – மினோத் பானுக்க 53*, லசித் அபேரத்ன 24*, டில்ருவன் பெரேரா 2/36

BRC எதிர் நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம்

அனுபவ சுழல் பந்துவீச்சாளர் உபுல் இந்திரசிறியின் அதிரடி பந்துவீச்சு மூலம் BRC அணியை குறைந்த ஓட்டங்களுக்கு மட்டுப்படுத்த நீர்கொழும்பு கிரிக்கெட் கழகத்தால் முடிந்தது.

பங்களாதேஷ் டி20 குழாமுக்கு திரும்பியுள்ள முஷ்பிகூர் ரஹீம்

சுற்றுலா ஜிம்பாப்வே அணியுடன் நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள்…

சோனகர் விளையாட்டுக் கழக மைதானத்தில் ஆரம்பமான இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய BRC அணியின் முதல் 6 விக்கெட்டுகளை 37 வயதான இந்திரசிறியால் வீழ்த்த முடிந்தது. இதன் மூலம் முதல் நாள் ஆட்ட நேர முடிவின்போது BRC அணி 282 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்துள்ளது. 

இந்திரசிறி 102 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

போட்டியின் சுருக்கம்

BRC (முதல் இன்னிங்ஸ்) – 282/9 (91) – ஷானுக்க விதானவசம் , லசித் லக்ஷான் 59, லிசுல லக்ஷான் 49, டேஷான் டயஸ் 36, உபுல் இந்திரசிறி 7/102 

லங்கா கிரிக்கெட் கழகம் எதிர் ராகம் கிரிக்கெட் கழகம்

இடம் –  NCC மைதானம், கொழும்பு

லங்கா கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 205 (77) – பிரமோஷ் பெரேரா 57, கேஷான் விஜேரத்ன 51, சஹன் நாணயக்கார 20, ஷஷிக டுல்ஷான் 5/26, அமில அபொன்சோ 2/42

ராகம கிரிக்கெட் கழகம் – 33/1 (12) – லஹிரு திரிமான்ன 21* 

செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் எதிர் சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம்

இடம் – கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய மைதானம்

செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 176 (83) – சாலிய ஜீவந்த 35, பெத்தும் மதுசங்க 29, சாமிக்க எதிரிசிங்க 24*, நிமேஷ் விமுக்தி 4/36, சத்துரங்க குமார 3/25

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<