சச்சித்ரவின் மிரட்டும் பந்துவீச்சால் SSC அணி இலகு வெற்றி

338
AFP

இலங்கை கிரிக்கெட் சபை நடத்தும் 2017/18 ஆம் ஆண்டின் உள்ளூர் பருவத்திற்கான பிரீமியர் லீக் A நிலை தொடரின் இரண்டு சுப்பர் 8 போட்டிகள் மற்றும் மூன்று பிளேட் சம்பியன்ஷிப் போட்டிகள் சனிக்கிழமை (03) நிறைவடைந்தன.

NCC எதிர் SSC

அணித் தலைவர் சச்சித்ர சேனநாயக்க NCC அணியின் விக்கெட்டுகளை சாய்த்ததன் மூலம் SSC அணி 194 ஓட்டங்களால் இலகு வெற்றியீட்டியது.

கொழும்பு CCC மைதானத்தில் நடைபெற்ற போட்டியின் நான்காவது மற்றும் கடைசி நாளில் NCC அணிக்கு 350 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. எனினும் அந்த அணி 155 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. சச்சித்ர சேனநாக்க 6 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

பிரீமியர் லீக்கில் சிலாபம் மேரியன்ஸின் ஆதிக்கம் தொடர்கிறது

இந்த வெற்றியுடன் SSC அணி சுப்பர் 8 புள்ளிப்பட்டியலில் 5 போட்டிகளில் 3 போட்டிகளில் வென்று சிலாபம் மேரியன்ஸ் அணிக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது.

போட்டியின் சுருக்கம்    

SSC (முதல் இன்னிங்ஸ்) – 347 (93.1) – மிலிந்த சிறிவர்தன 70, தசுன் ஷானக்க 63, சரித் அசலங்க 56, ஷம்மு அஷான் 40, சாமர கபுகெதர 33, மினோத் பானுக்க 28, லசித் அம்புல்தெனிய 5/81, பர்வீஸ் மஹ்ரூப் 2/59, சாமிக்க கருணாரத்ன 2/86

NCC (முதல் இன்னிங்ஸ்) – 298 (82.2) – அஞ்செலோ பெரேரா 107, மஹேல உடவத்த 46, சதுன் வீரக்கொடி 44, சதுரங்க டி சில்வா 38, தம்மிக்க பிரசாத் 4/37, தசுன் ஷானக்க 3/29, ஜெப்ரி வென்டர்சே 2/113

SSC (இரண்டாவது இன்னிங்ஸ்) – 300 (85.1) – மினோத் பானுக்க 110, கவிந்து குலசேகர 47, தசுன் ஷானக்க 38, மிலிந்த சிறிவர்தன 24, லசித் அம்புல்தெனிய 5/89, சாமிக்க கருணாரத்ன 2/40, தரிந்து கௌஷால் 2/69   

NCC (இரண்டாவது இன்னிங்ஸ்) – 155 (45.5) – தரிந்து கௌஷால் 37, சந்துன் வீரக்கொடி 35, சச்சித்ர சேனநாயக்க 6/65, ஜெப்ரி வன்டர்சே 3/30

முடிவு – SSC அணி 194 ஓட்டங்களால் வெற்றி


ராகம கிரிக்கெட் கழகம் எதிர் இலங்கை துறைமுக அதிகாரசபை கிரிக்கெட் கழகம்

சகல துறைகளிலும் சோபிக்கத் தவறிய லஹிரு திரிமான்ன தலைமையிலான ராகம கிரிக்கெட் கழகம் இலங்கை துறைமுக அதிகாரசபை அணியுடனான போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 42 ஓட்டங்களால் தோல்வியை சந்தித்தது.  

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்ப்பதற்கு 216 ஓட்டங்களை எடுக்க வேண்டிய நிலையில் ஆட்டத்தின் கடைசி நாளில் தனது இரண்டாவது இன்னிங்சைத் தொடர்ந்த ராகம அணி 174 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

இலங்கை துறைமுக அதிகாரசபை அணிக்காக மதுக லியனபதிரனகே 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு இடதுகை சுழல் பந்து வீச்சாளர் சானக்க கோசாரு 4 விக்கெட்டுகளை பதம்பார்த்தார். இதன்மூலம் கோமசாரு இம்முறை பிரீமியர் லீக் தொடரில் மலிந்த புஷ்பகுமாரவுக்கு (60) அடுத்து 50 விக்கெட்டுகளை கடந்துள்ளார்.

போட்டியின் சுருக்கம்

ராகம கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 269 (98) – லஹிரு திரிமான்ன 52, சமிந்து பெர்னாண்டோ 42, உதார ஜயசுந்தர 39, லஹிரு மலிந்த 37, சமீர டி சொய்சா 22, சதுர பீரிஸ் 20, சானக்க கோமசாரு 5/66, மதுக லியனபதிரனகே 3/74, சரித் ஜயம்பதி 2/70  

இலங்கை துறைமுக அதிகாரசபை கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 485/9d (154.3) – கயான் மனீஷன் 139*, கிஹான் ரூபசிங்க 66, யொஹான் டி சில்வா 66, சரித் ஜயம்பதி 62*, நிக் கொப்டன் 62, மதுக லியனபதிரனகே 20, அமில அபொன்சோ 3/82, லஹிரு மலிந்த 2/11, இஷான் ஜயரத்ன 2/75

ராகம கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 174 (72.4) – சதுர பீரிஸ் 45, லஹிரு திரிமான்ன 40, மதுக லயனபதிரனகே 5/85, சானக்க கோமசாரு 4/45

முடிவு – இலங்கை துறைமுக அதிகாரசபை கிரிக்கெட் கழகம் இன்னிங்ஸ் மற்றும் 42 ஓட்டங்களால் வெற்றி


பிளேட் சம்பியன்ஷிப் போட்டிகளின் சுருக்கம்

கொழும்பு கிரிக்கெட் கழகம் (CCC) எதிர் இலங்கை இராணுவப்படை விளையாட்டுக் கழகம்

கொழும்பு கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 333 (79.4) – லசித் அபேரத்ன 109, மலிந்து மதுரங்க 63, வனிந்து ஹசரங்க 35, சச்சித் பதிரண 27, அஷான் பிரியஞ்சன் 27, ரொன் சந்திரகுப்தா 22, தசுன் விமுக்தி 5/66, சீகுகே பிரசன்ன 2/96

இலங்கை இராணுவப்படை விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 265 (76) – டில்ஷான் டி சொய்சா 62, அசேல குணரத்ன 51, யசோத மெண்டிஸ் 34, துஷான் விமுக்தி 33, சீக்குகே பிரசன்ன 26*, லக்ஷித மதுஷான் 24*, சச்சித் பதிரண 7/76, தினுக் ஹெட்டியாரச்சி 2/78  

கொழும்பு கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 120 (32.3) – வனிந்து ஹசரங்க 35, சீகுகே பிரசன்ன 5/45, துஷான் விமுக்தி 3/17

இலங்கை இராணுவப்படை விளையாட்டுக் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 189/8 (44.1) – சீகுகே பிரசன்ன 63, அஜந்த மெண்டிஸ் 37, லக்ஷித்த மதுஷான் 35*, சச்சித் பதிரண 4/110, அஷான் பிரியஞ்சன் 2/21

முடிவு – இலங்கை இராணுவப்படை விளையாட்டுக் கழகம் 2 விக்கெட்டுகளால் வெற்றி

இலங்கை வீரர்களிடம் தடுமாற்றம் காணும் பங்களாதேஷ்

ப்ளூம்பீல்ட் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம் எதிர் தமிழ் யூனியன் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம்

ப்ளூம்பீல்ட் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 323 (81.5) – ரமேஷ் மெண்டிஸ் 137*,  நிசல பிரான்சிஸ்கோ 48, நிபுன் கருனநாயக்க 45, ஜீவன் மெண்டிஸ் 6/100, திஸ்னக்க மனோஜ் 2/53

தமிழ் யூனியன் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 336 (106.4) – பினுர பெர்னாண்டோ 82, தரங்க பரணவிதான 76, தினுக் விக்ரமநாயக்க 50, சிதார கிம்ஹான் 50, மலித் டி சில்வா 5/56, கொஷான் தனுஷ்க 3/98

ப்ளூம்பீல்ட் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 301/8 (72) – நிசல் பிரான்சிஸ்கோ 120, அனுக் பெர்னாண்டோ 103*, ரமேஷ் மெண்டிஸ் 29, அதீஷ நாணயக்கார 22, ஜீவன் மெண்டிஸ் 4/123, தினுக் விக்ரமனாயக்க 2/39, ரமித் ரம்புக்வெல்ல 2/85

முடிவு – போட்டி வெற்றி தோல்வி இன்றி முடிவுற்றது.


பதுரெலிய விளையாட்டுக் கழகம் எதிர் சோனகர் விளையாட்டுக் கழகம்

சோனகர் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 214 (49.1) – திலக் சுமனசிரி 53, சரித்த குமாரசிங்க 24, இரோஷ் சமரசூரிய 22, அலங்கார அசங்க 4/51, சவித் பிரியான் 2/37, மதுர லக்மால் 2/47, டிலேஷ் குணரத்ன 2/63

பதுரெலிய விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 338 (113.5) – சலிது உஷான் 97, நதீர நாவல 95, சஞ்சய சதுரங்க 37, சுப்ரமனியன் ஆனந்த் 30, சவித் பிரியான் 24, டிலங்க சதகன் 4/79, ஷிரான் பெர்னாண்டோ 2/45, சாமர சில்வா 2/27

சோனகர் விளையாட்டுக் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 386/5d (80) – சாமர சில்வா 121, திலக்ஷ சுமனசிறி 79, பபசர வதுகே 64, பிரிமோஷ் பெரேரா 37, சரித் குமாரசிங்க 32*, அலங்கார அசங்க 2/125

பதுரெலிய விளையாட்டுக் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 121/4 (29) – பதும் நிஸ்ஸங்க 67*, நதீர நாவல 47, சஜீவ வீரகோன் 3/31

முடிவு – போட்டி வெற்றி தோல்வி இன்றி முடிவுற்றது.