2017/2018 பருவகாலத்திற்கான இலங்கை கிரிக்கெட் சபை நடாத்தும் பிரீமியர் லீக் தொடரின் முதல் சுற்றுத் தொடரின் பிரிவு A மற்றும் பிரிவு Bக்கான போட்டிகளின் இரண்டாம் நாள் இன்று நடைபெற்றன.
பிரிவு A யில் முதல் நாளைப் போன்றே இன்றைய இரண்டாவது நாளிலும் தேசிய அணி வீரர்கள் தமது அபாரத்தைக் காண்பித்தனர்.
அஷான், மிலிந்த ஆகியோரின் சதங்களின் உதவியுடன் SSC வலுவான நிலையில்
2017/2018 பருவ காலத்திற்கான இலங்கை…
தமிழ் யூனியன் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம் எதிர் NCC
NCC மைதானத்தில் நேற்று காலை ஆரம்பமான இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற NCC அணி முதலில் துடுப்பெடுத்தாடும் சந்தர்ப்பத்தினை தமிழ் யூனியன் அணிக்கு வழங்கியது. இதன்படி தமிழ் யூனியன் அணி தமது முதல் இன்னிங்ஸுக்காக சகல விக்கெட்டுக்களையும் இழந்து 117 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய NCC சகல விக்கெட்டுக்களையும் இழந்து 234 ஓட்டங்களைப் பெற்றது. தொடர்ந்து தமது 2ஆவது இன்னிங்ஸுக்காக ஆடி வரும் தமிழ் யூனியன் அணி இன்றைய 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவின் போது 3 விக்கெட் இழப்பிற்கு 89 ஓட்டங்களைப் பெற்றது.
போட்டியின் சுருக்கம்
தமிழ் யூனியன் (முதல் இன்னிங்ஸ்) – 117/10 (38.3) மனோஜ் சரத்சந்திர 33. தரிந்து கௌசால் 2/19, சாமிக கருணாரத்ன 2/19, லஹிரு குமார 2/21, லசித் அம்புல்தேனிய 2/25.
NCC (முதல் இன்னிங்ஸ்) – 234/10 (75) லஹிரு உதார 45, மஹேல உடவத்த 38, சந்துன் வீரக்கொடி 34, மலிங்க அமரசிங்க்ஹ 29. பிரமோத் மதுசான் 5/69
தமிழ் யூனியன் (இரண்டாம் இன்னிங்ஸ்) – 89/3 (30) தினேத் திமொத்யா 54*. தரிந்து கௌஷால் 3/29
SSC எதிர் சரசென்ஸ் விளையாட்டுக் கழகம்
கொழும்பு SSC மைதானத்தில் நேற்று ஆரம்பமான இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற சரசென்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடும் சந்தர்ப்பத்தினை SSC அணிக்கு வழங்கியது. இதன்படி களமிறங்கிய SSC அணி தமது முதல் இன்னிங்ஸுக்காக 4 விக்கெட் இழப்பிற்கு 444 ஓட்டங்களைப் பெற்று ஆட்டத்தினை இடை நிறுத்திக்கொண்டது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடும் சரசென்ஸ் அணி இன்றைய 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவின் போது 7 விக்கெட் இழப்பிற்கு 192 ஓட்டங்களைப் பெற்றது.
போட்டியின் சுருக்கம்
SSC (முதல் இன்னிங்ஸ்) – 444/4d (94) சம்மு அஷான் 107, மிலிந்த சிறிவர்தன 137*, திமுத் கருணாரத்ன 83, கௌஷால் சில்வா 42, கவிந்து குலசேகர 39*. சதுர ரந்துனு 1/71.
சரசென்ஸ் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 192/7 (47) ஹர்ஷா குரே 53*, அண்டி சொலோமான்ஸ் 27, மின்ஹாஜ் ஜலீல் 25, சசித்திர பெரேரா 24*. தம்மிக்க பிரசாத் 3/58, விமுக்தி பெரேரா 2/28.
இலங்கை – பங்களாதேஷ் இடையிலான போட்டி அட்டவணை வெளியீடு
இலங்கை மற்றும் பங்களாதேஷ்…
ராகம கிரிக்கெட் கழகம் எதிர் கொழும்பு கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம்
கொழும்பு கோல்ட்ஸ் கிரிக்கெட் கழக மைதானத்தில் நேற்று ஆரம்பமான இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ராகம அணி முதலில் துடுப்பெடுத்தாடி தமது முதல் இன்னிங்ஸுக்காக இன்றைய 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவின் போது 6 விக்கெட் இழப்பிற்கு 324 ஓட்டங்களைப் பெற்றது.
போட்டியின் சுருக்கம்
ராகம கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 324/6 (87) சமிந்த பெர்னாண்டோ 55, இஷான் ஜயரத்ன 51*, ஜனித் லியனகே 51, சமீர டி சொய்சா 49*, லஹிரு மிலந்த 33, ரொஷேன் சில்வா 36, நிசால் தாரக 3/80, கவீஷ அஞ்சுல 2/67
சோனகர் விளையாட்டுக் கழகம் எதிர் கொழும்பு விளையாட்டுக் கழகம்
கொழும்பு விளையாட்டுக் கழக மைதானத்தில் நேற்று ஆரம்பமான இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற மைதானத் தரப்பினர் முதலில் துடுப்பெடுத்தாடும் சந்தர்ப்பத்தினை சோனகர் அணிக்கு வழங்கியது.
இதன்படி துடுப்பெடுத்தாடிய சோனகர் விளையாட்டுக் கழக அணி தமது முதல் இன்னிங்ஸுக்காக 6 விக்கெட் இழப்பிற்கு 444 ஓட்டங்களைப் பெற்று ஆட்டத்தினை இடை நிறுத்திக்கொண்டது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடும் கொழும்பு கிரிக்கெட் கழக அணி தமது முதல் இன்னிங்ஸுக்காக இன்றைய 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவின் போது 1 விக்கெட் இழப்பிற்கு 48 ஓட்டங்களைப் பெற்றது.
போட்டியின் சுருக்கம்
சோனகர் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 444/6d (118.5) ப்ரிமோஷ் பெரேரா 121, ஷனுக துலாஜ் 62*, சாமர சில்வா 58, சகான் விஜேரத்ன 45, இரோஸ் சமரசூரிய 41, பபசர வடுகே 32. லக்ஷான் சந்தகன் 2/100
கொழும்பு கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 48/1 (18) கவீன் பண்டார 23*, குசல் மென்டிஸ் 21*. சிரான் பெர்னாண்டோ 1/25
சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் BRC
சுதந்திர வர்த்தக மைதானத்தில் நேற்று ஆரம்பமான இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற சிலாபம் மேரியன்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடி சகல விக்கெட்டுக்களையும் இழந்து தமது முதல் இன்னிங்ஸுக்காக 293 ஓட்டங்களைப் பெற்றது.
T-10 கிரிக்கெட் தொடரில் வெற்றிகளை பறிகொடுத்த இலங்கை வீரர்கள்
கிரிக்கெட் வரலாற்றில் புரட்சியினை…
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய BRC அணி தமது முதல் இன்னிங்ஸுக்காக சகல விக்கெட்டுக்களையும் இழந்து 316 ஓட்டங்களைப் பெற்றது. தொடர்ந்து தமது 2ஆவது இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடும் சிலாபம் மேரியன்ஸ் அணி இன்றைய 2ஆம் நாள் முடிவின் போது 1 விக்கெட் இழப்பிற்கு 9 ஓட்டங்களைப் பெற்றது.
போட்டியின் சுருக்கம்
சிலாபம் மேரியன்ஸ் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 293/10 (87.2) சசித்திர செரசிங்க்ஹ 63, ஒஷத பெர்னாண்டோ 47, மலிந்த புஷ்பகுமார 34, கசுன் விதுர 30, ரோஹித் தாமோதரன் 23. சுராஜ் ரன்திவ் 6/90, சமிகர எதிரிசிங்ஹ 2/72.
BRC (முதல் இன்னிங்ஸ்) – ரமேஷ் புத்திக்க 123, TN சம்பத் 96, லசித் லக்ஷான் 40. மலிந்த புஷ்பகுமார 5/102, சசித்திர செரசிங்க்ஹ 4/76
சிலாபம் மேரியன்ஸ் விளையாட்டுக் கழகம் (இரண்டாம் இன்னிங்ஸ்) – 9/01
இராணுவப்படை விளையாட்டுக் கழகம் எதிர் இலங்கை துறைமுக அதிகார சபை கிரிக்கெட் கழகம்
பனாகொடை இராணுவப்படை மைதானத்தில் நேற்று ஆரம்பமான இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற துறைமுக அதிகார சபை அணி முதலில் துடுப்பெடுத்தாடும் சந்தர்ப்பத்தினை இராணுவ விளையாட்டுக் கழக அணிக்கு வழங்கியது.
இதன்படி களமிறங்கிய இராணுவ அணி தமது முதல் இன்னிங்ஸுக்காக சகல விக்கெட்டுக்களையும் இழந்து 224 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடும் துறைமுக அதிகாரசபை அணி இன்றைய 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவின் போது 3 விக்கெட் இழப்பிற்கு 85 ஓட்டங்களைப் பெற்றது.
போட்டியின் சுருக்கம்
இராணுவ விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 224/10 (98) லியோ பிரான்சிஸ்கோ 57, கசுன் டி சில்வா 40, நவோத் இழுக்வத்த 27, துஷான் விமுக்தி 27. சானக்க கொமசாரு 3/28, ஆதில் மலிக் 2/30, மதுக்க லியனபதிரனகே 2/43
துறைமுக அதிகாரசபை கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 85/3 (28).யோஹான் டி சில்வா 29*, யசோத லங்கா 26. நுவான் லியனபதிறன 2/47