ஜயசூரியவின் அபார பந்து வீச்சினால் கோல்ட்ஸ் அணிக்கு இன்னிங்ஸ் வெற்றி

621

இலங்கை கிரிக்கெட் சபை நடாத்தும் 2017/2018ஆம் பருவகாலத்திற்கான பிரீமியர் லீக் தொடரின் முதல் சுற்றின் (Tier A) போட்டிகள் யாவும் இன்று நிறைவுபெற்றன. இதில் கொழும்பு கோல்ட்ஸ் அணி இன்னிங்ஸ் வெற்றியை சுவைத்துள்ளது.

BRC எதிர் இலங்கை துறைமுக அதிகார சபை கிரிக்கெட் கழகம்  

கொழும்பு BRC மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் BRC அணி 35 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

மலிந்தவின் சுழலினால் 2ஆம் நாளிலேயே வெற்றி பெற்ற சிலாபம் மேரியன்ஸ்

இலங்கை கிரிக்கெட் சபை நடாத்தும் இந்த 2017/2018 பருவகாலத்திற்கான கிரிக்கெட் பிரீமியர் லீக்…

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற துறைமுக அதிகார சபை கிரிக்கெட் கழக அணி முதலில் துடுப்பெடுத்தாடும் சந்தர்ப்பத்தினை BRC அணிக்கு வழங்கியது. இதன்படி களமிறங்கிய BRC அணி  தமது முதல் இன்னிங்சுக்காக சகல விக்கெட்டுக்களையும் இழந்து 187 ஓட்டங்களைப் பெற்றது. அவ்வணி சார்பாக விக்கும் சன்ஜய மாத்திரம் அரைச் சதம் கடந்தார்.

பதிலுக்கு ஆடிய துறைமுக அதிகார சபை கிரிக்கெட் கழக அணி தமது முதல் இன்னிங்சுக்காக சகல விக்கெட்டுக்களையும் இழந்து 192 ஓட்டங்களைப் பெற்றது. தொடர்ந்து தமது 2ஆவது இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாடிய  BRC அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 126 ஓட்டங்களைப் பெற்றது.

பின்னர் வெற்றி இலக்காக 125 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்ட போதிலும் துறைமுக அதிகார சபை அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 86 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தொல்வியைடைந்தது.

போட்டியின் சுருக்கம்

BRC (முதல் இன்னிங்ஸ்) – 187/10 (65.5) விக்கும் சன்ஜய 51, சமிகார எதிரிசிங்ஹ 24*, மதுக்க லியனபதிரனகே 3/41, சானக்க கொமசாரு 3/40

இலங்கை துறைமுக அதிகார சபை (முதல் இன்னிங்ஸ்) – 192/10 (65.3) யோஹான் டி சில்வா 103, மதுக்க லியனபதிரனகே 30, யசோத லங்கா 26, திலகரத்ன சம்பத் 2/25, சமிகார எதிரிசிங்ஹ 3/40, சுராஜ் ரன்திவ் 3/49

BRC (இரண்டாம் இன்னிங்ஸ்) – 126/10 (48.3) லசித் லக்சான் 48, ஹர்ஷ விதான 19, மதுக்க லியனபதிரனகே 4/18, ஆதில் மலிக் 2/41

இலங்கை துறைமுக அதிகார சபை (இரண்டாம் இன்னிங்ஸ்) – 86/10 (38.5) யசோத லங்கா 24, ஆதில் மலிக் 19,  திலகரத்ன சம்பத் 3/18, சாமிக எதிரிசிங்ஹ 2/24, விக்கும் சஞ்சய 2/19

முடிவு – BRC அணி 35 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.


சரசென்ஸ் விளையாட்டுக் கழகம் எதிர் சோனகர் விளையாட்டுக் கழகம்

கொழும்பு சோனகர் விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவுற்றது.

ஆட்டத்தின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சரசென்ஸ் விளையாட்டுக் கழக அணி  முதலில் துடுப்பெடுத்தாடி, சொலோமான்ஸ் மற்றும் கமிந்து ஆகியோரது சதங்களின் உதவியுடன் தமது முதல் இன்னிங்சுக்காக சகல விக்கெட்டுக்களையும் இழந்து 432 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய சோனகர் விளையாட்டுக் கழகம் தமது முதல் இன்னிங்சுக்காக சகல விக்கெட்டுக்களையும் இழந்து 375 ஓட்டங்களைப் பெற்றது.  அவ்வணி சார்பாகவும் இரண்டு சதங்கள் பெறப்பட்டன.

பதிலுக்கு தமது இரண்டாம் இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாடிய சரசென்ஸ் விளையாட்டுக் கழகம் இன்றைய மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவு வரை 7 விக்கெட் இழப்பிற்கு 208 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளை போட்டி சமநிலையில் முடித்துக்கொள்ளப்பட்டது.

போட்டியின் சுருக்கம்

சரசென்ஸ் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 432/10 (102.3) அண்டி சொலோமான்ஸ் 152, கமிந்து கனிஷ்க 108, சதுர ரந்துனு 41, சசித்திர பெரேரா 33, சிரான் பெர்னாண்டோ 4/114, தரிந்து ரத்னாயக்க 5/156

சோனகர் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 375/10 (103.2) இரோஸ் சமரசூரிய 111, ப்ரிமோஷ் பெரேரா 142, சஹான் விஜேரத்ன 43, ரொஷான் ஜயதிஸ்ஸ 4/53, சதுர ரந்துனு 2/92, சசித்திர பெரேரா 3/67

சரசென்ஸ் விளையாட்டுக் கழகம் (இரண்டாம் இன்னிங்ஸ்) – 208/7 (57) சாலிய சமன் 34, நவிந்து விதானகே 70*, சசித்திர பெரேரா 50, சிரான் பெர்னாண்டோ 2/21, தறிந்து ரத்னாயக 2/105, சுபெஷல ஜயதிலக 2/37

முடிவு – போட்டி சமநிலையில் முடிவுற்றது

இந்தியாவுக்கு எதிரான இலங்கையின் புகாரை விசாரிக்கவுள்ள ஐ.சி.சி

இந்தியாவின் சுற்றுச்சூழல் மாசடைகின்ற நகரங்களில் டெல்லி முதலிடம் வகிக்கின்றது. இதற்கு முக்கிய…


தமிழ் யூனியன் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் விளையாட்டுக் கழகம் எதிர் பதுரலிய கிரிக்கெட் கழகம்

மக்கோன சர்ரே  விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியும் சமநிலையில் முடிந்தது.

நாணய சுழற்சி வெற்றியைத் தொடர்ந்து முதலில் துடுப்பெடுத்தாடிய தமிழ் யூனியன் கழக அணி  தமது முதல் இன்னிங்சுக்காக சகல விக்கெட்டுக்களையும் இழந்து 332 ஓட்டங்களைப் பெற்றது. மனோஜ் மற்றும் தேசிய அணியில் இடம்பெற்ற ஜீவன் மென்டிஸ் ஆகியோர் அணிக்கு சிறந்த பங்களிப்பு வழங்கினர்.

பதிலுக்குத் ஆடிய பதுரேலிய வீரர்கள் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 196 ஓட்டங்களை மாத்திரிமே பெற்றது. தொடர்ந்து தமது 2ஆவது இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாடிய தமிழ் யூனியன் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 182 ஓட்டங்கள் பெற்றிருந்த வேளை ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது.

இறுதியாக தமது இறுதி இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாடிய பதுரேலிய வீரர்கள் ஆட்ட நேர முடிவின் போது 6 விக்கெட் இழப்பிற்கு 167 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளை போட்டி சமனிலையானது.

போட்டியின் சுருக்கம்

தமிழ் யூனியன் (முதல் இன்னிங்ஸ் ) – 325/9 (93.1) மனோஜ் சரத்சந்திர 119*, ஜீவன் மென்டிஸ் 77, சிதார கிம்ஹான 43, பொபி பெர்னாண்டோ 40, அலங்கார அசங்க 5/106, டிலேஸ் குணரத்ன 3/83, நசீர் மலிக் 2/57

பதுரேலிய கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 196/10 (64.1) பெத்தும் நிஸ்ஸங்க 100, அலங்கார அசங்க 23, ரமித் ரம்புக்வெல்ல 6/40, பொபி பெர்னாண்டோ 2/26.

தமிழ் யூனியன் (இரண்டாம் இன்னிங்ஸ்) – 182/5d (48.4) தினேத் திமொத்ய 68, பினுர பெர்னாண்டோ 54. டிலேஷ் குணரத்ன 2/55, நதீர நாவெல 1/06

பதுரேலிய கிரிக்கெட் கழகம் (இரண்டாம் இன்னிங்ஸ்) – 167/6 (52). டில்ஹான் குரே 55, ரமிந்து டி சில்வா 43, ஜஹாங்கிர் மிர்சா 34, ரமித் ரம்புக்வெல்ல 2/62, ஜீவன் மென்டிஸ் 1/39.

முடிவு – போட்டி சமநிலையில் முடிவுற்றது.


கொழும்பு கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் ப்லூம்பீல்ட் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் விளையாட்டுக் கழகம்

கொழும்பு கோல்ட்ஸ் கழக மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் கோல்ட்ஸ் கழகம் இன்னிங்ஸ் மற்றும் 55 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ப்லூம்பீல்ட் அணி முதலில் துடுப்பெடுத்தாடும் சந்தர்ப்பத்தினை எதிரணிக்கு வழங்கியது. இதன்படி களமிறங்கிய கோல்ட்ஸ் கழக அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 400 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ப்லூம்பீல்ட் 151 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. பல்லோவ் ஓன் முறைக்கு தள்ளப்பட்ட ப்லூம்பீல்ட் கழகம் தமது 2வது இன்னிங்சுக்காக சகல விக்கெட்டுக்களையும் இழந்து 194 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தொல்வியைத் தழுவியது. இந்தப் போட்டியில் கோல்ட்ஸ் அணி சார்பாக சுழற்பந்து வீச்சாளர்கள் அபாரம் காட்டியிருந்தனர்.

போட்டியின் சுருக்கம்

கோல்ட்ஸ் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 400/10 (148.5) ஹசான் துமிந்து 168*, முஹமட் சிராஸ் 65, தில்ருவன் பெரேரா 60, சங்கீத் குரே 37, அஞ்சேலோ ஜெயசிங்க்ஹ 26,  மலித் டி சில்வா 5/105, லஹிரு பெர்னாண்டோ 3/92

ப்லூம்பீல்ட் (முதல் இன்னிங்ஸ்) – 151/10 (54.3)  நிசால் பிரான்சிஸ்கோ 33, நிபுன் கருணாநாயக்க 28,.  பிரபாத் ஜெயசூரிய 2/14

ப்லூம்பீல்ட் (இரண்டாம் இன்னிங்ஸ்) – F/O 194/10 (56.5) – ரமேஷ் மென்டிஸ் 52, நிபுன் ஹக்கல 51, தில்ருவான் பெரேரா 4/69, பிரபாத் ஜயசூரிய 4/56.

முடிவு – கொழும்பு கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் இன்னிங்ஸ் மற்றும் 55 ஓட்டங்களால் வெற்றி

தொடர் தோல்விகளுக்கு அதிரடி வெற்றியுடன் முற்றுப்புள்ளி வைத்த இலங்கை

நடைபெற்று முடிந்திருக்கும் சுற்றுலா இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் தொடரின்…

 


ராகம கிரிக்கெட் கழகம் எதிர் சிங்கலீஸ் விளையாட்டுக் கழகம்(SSC)

குருநாகல் வெலகெதர கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற  இப்போட்டி சமநிலையில் முடிவடைந்தது.

ஆட்டத்தின் முதலாம் நாள் கைவிடப்பட்டிருந்த நிலையில் நேற்று ஆரம்பமாகிய போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய ராகம அணி தமது முதல் இன்னிங்சுக்காக சகல விக்கெட்டுக்களையும் இழந்து 187 ஓட்டங்களைப் பெற்றது. பந்து வீச்சில் தேசிய அணி வீரர் ஜெப்ரி வேண்டர்சே 5 விக்கெட்டுக்களைப் பதம்பார்த்திருந்தார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சிங்கலீஸ் அணி வீரர்கள் தமது முதல் இன்னிங்சுக்காக 6 விக்கெட் இழப்பிற்கு 307 ஓட்டங்களைப் பெற்ற வேளை ஆட்டத்தினை இடைநிறுத்திக்கொண்டனர். பதிலுக்கு தமது இரணடாம் இன்னிங்சினைத் தொடர்ந்த ராகம விளையாட்டுக் கழகம் இன்றைய ஆட்ட நேர முடிவின் போது 5 விக்கெட் இழப்பிற்கு 156 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளை போட்டி சமநிலையில் முடித்துக்கொள்ளப்பட்டது.

போட்டியின் சுருக்கம்

ராகம கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 187/10 (66.4) உதார ஜெயசுந்தர 71, செஹான் பெர்னாண்டோ 47, ஜெப்ரி வேண்டர்சே 5/63, சசித்திர சேனாநாயக்க 3/25

SSC (முதல் இன்னிங்ஸ்) – 307/6d (76) கௌஷால் சில்வா 47, மிலிந்த சிறிவர்தன 60, தசுன் சானக 114*. அமில அபோன்ஷோ 4/129, சஹான் நாணயக்கார 1/33.

ராகம கிரிக்கெட் கழகம் (இரண்டாம் இன்னிங்ஸ்) – 156/5 (52) ஷேஹான் பெர்னாடோ 50, லஹிரு மிலந்த 61, சரித் அசலங்க 3/26.

போட்டி முடிவு – ஆட்டம் சமநிலையில் நிறைவுற்றது.