இலங்கை கிரிக்கெட் சபை நடாத்தும் இந்த 2017/2018 பருவகாலத்திற்கான கிரிக்கெட் பிரீமியர் லீக் தொடரின் முதல் சுற்றுத் தொடரின் 2 ஆம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் ஒரு போட்டி இரண்டாம் நாளிலேயே முடிவடைந்தது.
அண்டி சொலொமான்சின் சதத்தின் உதவியுடன் சரசென்ஸ் கழகம் முதல் நாள் வலுவான நிலையில்
சிலாபம் மேரியன்ஸ் எதிர் NCC
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய மைதானத்தில் நேற்று ஆரம்பமான இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழக அணி முதலில் துடுப்பெடுத்தாடி தமது முதல் இன்னிங்சுக்காக சகல விக்கெட்டுக்களையும் இழந்து 206 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய NCC அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 128 ஓட்டங்களைப் பெற்றது. தொடர்ந்து தமது இரண்டாவது இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாடிய சிலாபம் மேரியன்ஸ் அணி 132 ஓட்டங்களுக்கு சுருண்டது.
இதன் காரணமாக NCC கழக அணிக்கு வெற்றி இலக்காக 210 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்ட போதிலும் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 116 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 94 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது.
போட்டியின் சுருக்கம்
சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 209/10 (53) கசுன் விதுரங்க 50, ருக்ஷான் பெர்னாண்டோ 37, சசித்திர செரசிங்ஹ 26, லசித் எம்புல்தேனிய 5/66, அஞ்சேலோ பெரேரா 2/34.
NCC (முதல் இன்னிங்ஸ்) – 128/10 (39.5) மஹேல உடவத்த 46, லஹிரு குமார 24, சசித்திர செரசிங்ஹ 3/21, அசித பெர்னாண்டோ 3/30, மலிந்த புஷ்பகுமார 3/40.
சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 132/10 (20.2) திக்சில டி சில்வா 37, ஓசாத பெர்னாண்டோ 24, செஹான் ஜயசூரிய 21. லசித் எம்புல்தேனிய 5/57, லஹிரு குமார 4/40.
NCC (இரண்டாவது இன்னிங்ஸ்) – 116/10 (28) சந்துன் வீரக்கொடி 32, பானுக ராஜபக்ஷ 19, மலிந்த புஷ்பகுமார 5/25, சசித்திர செரசிங்க்ஹ 4/48
முடிவு – சிலாபம் மேரியன்ஸ் அணி 94 ஓட்டங்களால் வெற்றி பெற்றது
BRC எதிர் இலங்கை துறைமுக அதிகார சபை கிரிக்கெட் கழகம்
கொழும்பு BRC மைதானத்தில் நேற்று ஆரம்பமான இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற துறைமுக அதிகார சபை கிரிக்கெட் கழக அணி முதலில் துடுப்பெடுத்தாடும் சந்தர்ப்பத்தினை BRC அணிக்கு வழங்கியது.
இதன்படி களமிறங்கிய BRC அணி தமது முதல் இன்னிங்சுக்காக சகல விக்கெட்டுக்களையும் இழந்து 187 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய துறைமுக அதிகார சபை கிரிக்கெட் கழக அணி தமது முதல் இன்னிங்சுக்காக சகல விக்கெட்டுக்களையும் இழந்து 192 ஓட்டங்களைப் பெற்றது. தொடர்ந்து தமது 2ஆவது இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாடும் BRC அணி இன்றைய 2ம் நாள் ஆட்ட நேர முடிவின் போது 8 விக்கெட் இழப்பிற்கு 116 ஓட்டங்களைப் பெற்றது.
போட்டியின் சுருக்கம்
BRC (முதல் இன்னிங்ஸ்) – 187/10 (65.5) விக்கும் சன்ஜய 51, சமிகார எதிரிசிங்ஹ 24*, மதுக்க லியனபதிரனகே 3/41, சானக்க கொமசாரு 3/40.
இலங்கை துறைமுக அதிகார சபை கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 192/10 (65.3) யோஹான் டி சில்வா 103, மதுக்க லியனபதிரனகே 30, யசோத லங்கா 26, திலகரத்ன சம்பத் 2/25, சமிகார எதிரிசிங்ஹ 3/40, சுராஜ் ரன்திவ் 3/49
BRC (இரண்டாவது இன்னிங்ஸ்) – 116/8 (45.1) லசித் லக்சான் 48, மதுக்க லியனபதிரனகே 3/16, ஆதில் மலிக் 2/22
சரசென்ஸ் விளையாட்டுக் கழகம் எதிர் சோனகர் விளையட்டுக்கழகம்
கொழும்பு சோனகர் விளையாட்டுக்கழக மைதானத்தில் நேற்று ஆரம்பமான இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சரசென்ஸ் விளையாட்டுக் கழக அணி முதலில் துடுப்பெடுத்தாடி தமது முதல் இன்னிங்சுக்காக சகல விக்கெட்டுக்களையும் இழந்து 432 ஓட்டங்களைப் பெற்றது. அணி சார்பாக அண்டி சொலோமான்ஸ் அபாரமாக ஆடி 152 ஓட்டங்களைக் குவித்தார்.
இலங்கை அணியின் போராட்டம் ஒரு நாள் தொடரில் எவ்வாறு அமையும்?
ஒருவரின் உண்மையான தோல்வி…
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய சோனகர் விளையாட்டுக் கழகம் இன்றைய 2ஆம் நாள் முடிவின் போது 3 விக்கெட் இழப்பிற்கு 288 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. இவ்வணி சார்பாகவும் இரண்டு வீரர்கள் சதம் கடந்துள்ளனர்.
போட்டியின் சுருக்கம்
சரசென்ஸ் விளையாட்டுக் கழகம் (1வது இன்னிங்க்ஸ்) – 432/10 (102.3) அண்டி சொலோமான்ஸ் 152, கமிந்து கனிஷ்க 108, சதுர ரந்துனு 41, சசித்திர பெரேரா 33. சிரான் பெர்னாண்டோ 4/114, தரிந்து ரத்னாயக்க 5/156
சோனகர் விளையாட்டுக் கழகம் (1வது இன்னிங்க்ஸ்) – 288/3 (73) இரோஸ் சமரசூரிய 111, ப்ரிமோஷ் பெரேரா 142, அண்டி சொலோமான்ஸ் 1/34
தமிழ் யூனியன் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் விளையாட்டுக் கழகம் எதிர் பதுரலிய கிரிக்கெட் கழகம்
மக்கோன சர்ரே விளையாட்டுக்கழக மைதானத்தில் நேற்று ஆரம்பமான இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தமிழ் யூனியன் கழக அணி முதலில் துடுப்பெடுத்தாடி தமது முதல் இன்னிங்சுக்காக சகல விக்கெட்டுக்களையும் இழந்து 332 ஓட்டங்களைப் பெற்றது. அவ்வணி சார்பாக மனோஜ் சரத்சந்திர ஆட்டமிழக்காமல் 119 பெற்றுக்கொண்டார்.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பதுரேலிய விளையாட்டுக் கழகம் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 196 ஓட்டங்களைப் பெற்றது. தொடர்ந்து தமது 2வது இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாடும் தமிழ் யூனியன் அணி இன்றைய 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவின்போது 1 விக்கெட் இழப்பிற்கு 45 ஓட்டங்களைப் பெற்றது. இதன்படி தமிழ் யூனியன் அணி 181 ஓட்டங்களால் முன்னிலையில் உள்ளது.
போட்டியின் சுருக்கம்
தமிழ் யூனியன் (1வது இன்னிங்க்ஸ் ) – 325/9 (93.1) மனோஜ் சரத்சந்திர 119*, ஜீவன் மென்டிஸ் 77, சிதார கிம்ஹான 43, பொபி பெர்னாண்டோ 40. அலங்கார அசங்க 5/106, டிலேஸ் குணரத்ன 3/83, நசீர் மலிக் 2/57.
பதுரேலிய கிரிக்கெட் கழகம் – 196/10 (64.1) பெத்தும் நிஸ்ஸங்க 100, அலங்கார அசங்க 23. ரமித் ரம்புக்வெல்ல 6/40, பொபி பெர்னாண்டோ 2/26.
தமிழ் யூனியன் (2வது இன்னிங்க்ஸ் ) – 45/1 (17) தினேத் திமோதய 19*. நதீர நாவெல 1/06.
கொழும்பு கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் ப்லூம்பீல்ட் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் விளையாட்டுக் கழகம்
கொழும்பு கோல்ட்ஸ் விளையாட்டுக்கழக மைதானத்தில் நேற்று ஆரம்பமான இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ப்லூம்பீல்ட் அணி முதலில் துடுப்பெடுத்தாடும் சந்தர்ப்பத்தினை கொழும்பு கோல்ட்ஸ் கிரிக்கெட் கழக அணிக்கு வழங்கியது. இதன்படி களமிறங்கிய கோல்ட்ஸ் கழக அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 400 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடி வரும் ப்லூம்பீல்ட் கழக அணி இன்றைய 2ம் நாள் ஆட்ட நேர முடிவின் போது 4 விக்கெட் இழப்பிற்கு 105 ஓட்டங்களைப் பெற்றது. .
போட்டியின் சுருக்கம்
கொழும்பு கோல்ட்ஸ் விளையாட்டுக்கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 400/10 (148.5) ஹசான் துமிந்து 168*, முஹமட் சிராஸ் 65, தில்ருவன் பெரேரா 60, சங்கீத் குரே 37, அஞ்சேலோ ஜெயசிங்க 26, மலித் டி சில்வா 5/105, லஹிரு பெர்னாண்டோ 3/92
ப்லூம்பீல்ட் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்க்ஸ்) – 105/4 (32) நிசால் பிரான்சிஸ்கோ 33, நிபுன் கருணாநாயக்க 28. பிரபாத் ஜெயசூரிய 2/14
ராகம கிரிக்கெட் கழகம் எதிர் சிங்கலீஸ் விளையாட்டுக்கழகம்(SSC)
குருநாகல் வெலகெதர கிரிக்கெட் மைதானத்தில் நேற்று ஆரம்பமாகவிருந்த இப்போட்டி நேற்றைய முதலாம் நாள் கைவிடப்பட்டிருந்த நிலையில் இன்று ஆரம்பமாகியது.
இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளராக ஹத்துருசிங்க இம்மாதம் நியமனம்
போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய ராகம அணி தமது முதல் இன்னிங்சுக்காக சகல விக்கெட்டுக்களையும் இழந்து 187 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சிங்கலீஸ் விளையாட்டுக் கழக அணி தமது முதல் இன்னிங்சுக்காக இன்றைய 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவின் போது 2 விக்கெட் இழப்பிற்கு 76 ஓட்டங்களைப் பெற்றது.
போட்டியின் சுருக்கம்
ராகம கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 187/10 (66.4) உதார ஜெயசுந்தர 71, செஹான் பெர்னாண்டோ 47. ஜெப்ரி வேண்டர்சே 5/63, சசித்திர சேனாநாயக்க 3/25
SSC (முதல் இன்னிங்ஸ்) – 76/2 (29)