சானக்க கோமசாரு 12 விக்கெட்டுகள்; இலங்கை துறைமுக அதிகார சபை அணிக்கு இன்னிங்ஸ் வெற்றி

229

இலங்கை கிரிக்கெட் சபை நடாத்தும் 2017/18 ஆண்டுக்கான உள்ளூர் பருவத்திற்கான ப்ரீமியர் லீக் A நிலை தொடரின் ஐந்து போட்டிகள் சனிக்கிழமை (30) நிறைவடைந்தன.

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் இலங்கை இராணுவப்படை விளையாட்டுக் கழகம்

இலங்கை இராணுவப்படை விளையாட்டுக் கழகத்தை இரண்டு இன்னிங்சுகளிலும் சொற்ப ஓட்டங்களுக்கு வீழ்த்திய சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் இன்னிங்ஸ் மற்றும் 197 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க மேலும் 369 ஓட்டங்களைப் பெறவேண்டிய நிலையில் மூன்றாவதும் கடைசியுமான நாள் ஆட்டத்தில் தனது இரண்டாவது இன்னிங்சைத் தொடர்ந்த இலங்கை இராணுவப்படை அணி 188 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

சிலாபம் மேரியன்ஸ் கழகம் முதல் இன்னிங்சுக்கு 545 ஓட்டங்களை பெற்ற நிலையில் இலங்கை இராணுவப்படை அணி முதல் இன்னிங்ஸில் 160 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து இரண்டாவது இன்னிங்சுக்கு பலோ ஓன் (follow on) செய்தது.

சிலாபம் மேரியன்ஸ் அணித் தலைவர் மலிந்த புஷ்பகுமார இரண்டு இன்னிங்சுகளிலும் மொத்தம் 9 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.  

போட்டியின் சுருக்கம்

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 545 (118.3) – ஓஷத பெர்னாண்டோ 196, ஷெஹான் ஜயசூரிய 118, சச்சித்ர சேரசிங்க 65, இசுரு உதான 56, ரிசித் உபமால் 41, புலின தரங்க 37, ஜனித் சில்வா 5/114, துஷான் விமுக்தி 2/139

இலங்கை இராணுவப்படை விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 160 (49) – சன்ஜிக ரித்ம 35*, கசுன் டி சில்வா 27, நவோத் இலுக்வத்த 20, நுவன் லியனபதிரன 20, மலிந்த புஷ்பகுமார 6/56, அசித பெர்னாண்டோ 3/24

இலங்கை இராணுவப்படை விளையாட்டுக் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) F/O – 188 (62.1) – டில்ஷான் டி சொய்சா 62, கசுன் டி சில்வா 51, திக்ஷில டி சில்வா 3/19, மலிந்த புஷ்பகுமார 3/69

முடிவு – சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் இன்னிங்ஸ் மற்றும் 197 ஓட்டங்களால் வெற்றி


இலங்கை துறைமுக அதிகார சபை கிரிக்கெட் கழகம் எதிர் பதுரெலிய விளையாட்டுக் கழகம்

முதல்தர போட்டிகளில் அனுபவம் பெற்ற சானக்க கோமசாரு பதுரெலிய விளையாட்டுக் கழகத்திற்கு எதிராக இரண்டாவது இன்னிங்ஸிலும் ஆறு விக்கெட்டுகளை பதம்பார்க்க இலங்கை துறைமுக அதிகார சபை அணி இன்னிங்ஸ் மற்றும் 139 ஓட்டங்களால் வெற்றியை சுவீகரித்தது.

கபுகெதர, கருணாரத்ன ஆகியோரின் சதத்தால் SSC அணி வலுவான நிலையில்

மக்கொன சர்ரே மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க மேலும் 230 ஓட்டங்களை பெற வேண்டிய நிலையில் கடைசி நாளில் தனது இரண்டாவது இன்னிங்சைத் தொடர்ந்த பதுரெலிய விளையாட்டுக் கழகம் 115 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

இதன் போது 34 வயது சுழல் பந்து வீச்சாளர் சானக்க கோமசரு 6 விக்கெட்டுகளை பதம் பார்த்தார். இதன் மூலம் அவர் இந்தப் போட்டியில் மொத்தம் 12 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

B குழுவில் விளையாடும் இலங்கை துறைமுக அதிகார சபை அணி ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது.

போட்டியின் சுருக்கம்

இலங்கை துறைமுக அதிகார சபை கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 359 (100.3) – மதுக லியனபதிரன 115*, பிரஷான் விக்ரமசிங்க 88, கிஹான் ரூபசிங்க 48, ஆதீல் மாலிக் 25, கயான் மனீஷன் 20, யஷோத லங்கா 20, அலங்கார அசங்க 7/79, நிம்னத சுபசிங்க 3/56  

பதுரெலிய விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 105 (56) – சம்மிக்க ருவன் 20, சானக்க கோமசாரு 6/34

பதுரெலிய விளையாட்டுக் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) F/O – 115 (58.5) – சஞ்சய சதுரங்க 31, சானக்க கோமசாரு 6/39, மதுக லியனபதிரனகே 2/28, அகலங்க கனேகம 2/24

முடிவு –  இலங்கை துறைமுக அதிகார சபை கிரிக்கெட் கழகம் இன்னிங்ஸ் மற்றும் 139 ஓட்டங்களால் வெற்றி


SSC எதிர் கொழும்பு கிரிக்கெட் கழகம்

கொழும்பு கிரிக்கெட் கழகத்திற்கு எதிரான போட்டியை சமநிலையில் முடித்துக் கொண்ட SSC அணி ப்ரீமியர் லீக் தொடரின் A குழுவில் தொடர்ந்தும் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது.

SSC அணி இதுவரை ஆடிய நான்கு போட்டிகளில் ஒன்றை வென்று மூன்று போட்டிகளை சமநிலையில் முடித்துக் கொண்டுள்ளது.

கொழும்பு, SSC மைதானத்தில் நடைபெற்ற கொழும்பு கிரிக்கெட் கழகத்திற்கு எதிரான போட்டியிலும் SSC அணியின் பலமான துடுப்பாட்ட வரிசை அதிக ஓட்டங்களைக் குவித்தது. சர்வதேச அனுபவம் மிக்க திமுத் கருணாரத்ன, சாமர கபுகெதர மற்றும் மினோத் பானுக்க ஆகியோர் சதம் பெற்றனர். இதன் மூலம் அந்த அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 459 ஓட்டங்களை பெற்ற நிலையில் தனது முதல் இன்னிங்சை இடைநிறுத்திக் கொண்டது.

இந்நிலையில் முதல் இன்னிங்ஸில் 145 ஓட்டங்களால் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த கொழும்பு கிரிக்கெட் கழகம் கடைசி நாள் ஆட்ட நேர முடிவின் போது 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 233 ஓட்டங்களைப் பெற்றது.

போட்டியின் சுருக்கம்

கொழும்பு கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 314 (80.5) –அஷான் பிரியஞ்சன் 84, மாதவ வர்ணபுர 79*, கவீன் பண்டார 53, லசித் அபேரத்ன 43, அக்தாப் காதர் 3/45, கசுன் மதுஷங்க 2/33, சச்சித்ர சேனநாயக்க 2/88

SSC (முதல் இன்னிங்ஸ்) – 459/8d (115) – திமுத் கருணாரத்ன 141, சாமர கபுகெதர 114, மினோத் பானுக்க 100*, கவிந்து குலசேகர 30, வனிந்து ஹசரங்க 2/97, சச்சித் பத்திரன 5/131

கொழும்பு கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 233/5 (55) – ரொன் சந்திரகுப்தா 68, லசித் அபேரத்ன 90, அஷான் பிரியஞ்சன் 32, சச்சித்ர சேனநாயக்க 4/67

முடிவு – போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவுற்றது.


தமிழ் யூனியன் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம் எதிர் BRC

தமிழ் யூனியன அணிக்கு எதிரான போட்டியை சமநிலையில் முடித்த BRC அணி ப்ரீமியர் லீக் தொடரின் B குழுவில் 43.9 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேற்றம் கண்டுள்ளது. BRC அணி இதுவரை விளையாடிய நான்கு போட்டிகளில் ஒரு வெற்றி மற்றும் ஒரு தோல்வியைப் பெற்றுள்ளது.

உமேக சதுரங்கவின் சுழலில் சிக்கிய களுத்துறை

கொழும் பி சரா ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியின் கடைசி நாளில் தனது முதல் இன்னிங்சைத் தொடர்ந்த BRC அணி சுராஜ் ரந்தீவின் (152) சதத்தின் உதவியோடு 332 ஓட்டங்களைப் பெற்றது. முதல் இன்னிங்சில் 18 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த தமிழ் யூனியன் அணி கடைசி நாள் ஆட்ட நேர முடிவின் போது 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 234 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக சகலதுறை வீரர் ஜீவன் மெண்டிஸ் ஆட்டமிழக்காது 100 ஓட்டங்களை பெற்றார்.

போட்டியின் சுருக்கம்

தமிழ் யூனியன் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 314 (104) – தரங்க பரணவிதான 123, தினெத் திமோத்ய 57, ஷாலிக்க கருனநாயக்க 37, மனோஜ் சரத்சந்திர 33, விகும் சஞ்சய 3/63, ஹிமேஷ் ராமனாயக்க 2/39, சுராஜ் ரந்தீவ் 2/81   

BRC (முதல் இன்னிங்ஸ்) – 332 (106.5) – சுராஜ் ரந்தீவ் 152*, ஷஷின் டில்ரங்க 84, பிரமோத் மதுஷான் 5/85, ஜீவன் மெண்டிஸ் 3/74

தமிழ் யூனியன் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 234/5 (53) – ஜீவன் மெண்டிஸ் 100*, தரங்க பரணவிதான 60, மனோஜ் சரத்சந்திர 40, திலகரத்ன சம்பத் 2/68

முடிவு – போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவுற்றது.


சோனகர் விளையாட்டுக் கழகம் எதிர் ப்ளூம்பீல்ட் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம்

கொழும்பு ப்ளூம்பீல்ட் மைதானத்தில் நடைபெற்ற பரபரப்பான இப்போட்டியில் சோனகர் விளையாட்டுக் கழகம் மற்றும் ப்ளூம்பீல்ட் அணிகள் வெற்றிபெற போராடியபோதும் போட்டி சமநிலையில் முடிந்தது.

323 ஓட்ட வெற்றி இலக்கோடு கடைசி நாளில் தனது இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த ப்ளூம்பீல்ட் அணி ஆட்ட நேர முடிவின் போது 282 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது. ரமேஷ் மெண்டில் ப்ளும்பீல்ட் அணியின் வெற்றிக்காக ஆட்டமிழக்காது 59 ஓட்டங்களுடன் போராடியதோடு மறுபுறம் சோனகர் அணி பந்துவீச்சாளர்கள் எஞ்சிய மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்த நெருக்கடி கொடுத்தனர்.

எனினும் ப்ரீமியர் லீக் A குழுவில் சோனகர் விளையாட்டுக் கழகம் மற்றும் ப்ளூம்பீல்ட் கழகம் கடைசி இரண்டு இடங்களில் நீடிக்கின்றன.

போட்டியின் சுருக்கம்

சோனகர் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 163 (43.2) – ஷானுக்க துலாஜ் 39, தரிந்து ரத்னாயக்க 36, பிரிமோஷ் பெரேரா 20, இம்ரான் கான் 2/13, லஹிரு சமரகோன் 4/56, ரமேஷ் மெண்டிஸ் 2/73  

ப்ளூம்பீல்ட் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 213 (68.3) – நிசல் பிரான்சிகோ 61, சச்சின் ஜயவர்தன 49, மலித் டி சில்வா 25, பிரமுத் ஹெட்டிவத்த 22, சஜீவ வீரகோன் 6/58, தரிந்து ரத்னாயக்க 2/93

சோனகர் விளையாட்டுக் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 372/9d (80) – சாமர சில்வா 134, பபசர வதுகே 52, பிரிமோஷ் பெரேரா 28, ஷிரான் பெர்னாண்டோ 26*, தெனுவன் ராஜகருண 25, ஷானுக்க துலாஜ் 23, லஹிரு சமரகோன் 4/72, நிபுன் கருணாநாயக்க 2/44, மலித் டி சில்வா 2/86   

ப்ளூம்பீல்ட் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 282/7 (73) – லஹிரு ஜயகொடி 56, அதீஷ நாணயக்கார 48, ரமேஷ் மெண்டிஸ் 59*, பிரமுத் ஹெட்டிவத்த 45, சஜீவ வீரகோன் 2/85, தரிந்து ரத்னாயக்க 2/119

முடிவு – போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவுற்றது.