இங்கிலாந்து பிரீமியர் லீக் தொடரின் எட்டாவது வாரத்தின் மூன்று போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை (07) நடைபெற்றன. இதில் புல்ஹாமுக்கு எதிராக ஆர்சனல் கோல் மழை பொழிந்ததோடு, முன்னணியில் இருக்கும் மன்செஸ்டர் சிட்டி மற்றும் லிவர்பூல் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சமநிலை கண்டது. அதேபோன்று, சௌதம்டன் அணியை இலகுவாக வீழ்த்தி செல்சி முன்னேற்றம் கண்டது.
வெற்றிப் பாதைக்கு திரும்பிய மன்செஸ்டர் யுனைடெட்
இங்கிலாந்து பிரீமியர் லீக் தொடரின் எட்டாவது வாரத்தின்.
புல்ஹாம் எதிர் ஆர்சனல்
பிரான்சின் அலெக்சாண்ட்ரே லகசெட் இரண்டு கோல்கள், ஆரோன் ரம்சி பாதத்தின் பின்பக்கமாக உதைத்த அற்புதமான கோல் மற்றும் பியர்ரே-எமெரிக் ஒபமேயங் பெற்ற மேலும் இரு கோல்கள் என்பவற்றின் மூலம் புல்ஹாம் அணிக்கு எதிராக கரவான் கொட்டேஜில் நடைபெற்ற போட்டியில் ஆர்சனல் 5-1 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றியீட்டியது.
ஆர்சனலுக்கு எதிராக 2012 ஜனவரிக்கு பின்னர் முதல் வெற்றி ஒன்றை பெறும் முயற்சியோடு போட்டியை வேகமாக ஆரம்பித்த புல்ஹாம் அணிக்கு ஆர்ஜன்டீன மத்தியகள வீரர் லூசியானோ வீட்டோ இரண்டாவது நிமிடத்திலேயே சவால் கொடுத்தார்.
அதேபோன்று, புல்ஹாமின் சேர்பிய முன்கள வீரர் அலெக்சாண்டர் மிட்ரோவிக் பாதி வாய்ப்புகளை பெற்றபோதும் அவைகளை கோலாக மாற்றத் தவறினார்.
எவ்வாறாயினும் ஆர்சனலின் லகசட் 29 ஆவது நிமிடத்தில் கோல் பெறுவதை ஆரம்பித்தார். நாகோ மொன்ரியல் பரிமாற்றிய பந்தை பெற்ற அவர், அதனை நெருங்கிய தூரத்தில் இருந்து வலைக்குள் செலுத்தினார். எனினும் முதல்பாதி ஆட்டம் முடியும் நேரத்தில் புல்ஹாம் வீரர் அன்ட்ரே ஸ்குர்ல் பதில் கோல் போட்டு ஆட்டத்தை சமநிலைக்கு கொண்டுவந்தார்.
பார்சிலோனா, ரியல் மட்ரிட் அணிகளுக்கு சமநிலை முடிவுகள்
நடைபெற்று வரும் லாலிகா சுற்றுப் போட்டிகளில்..
இரண்டாவது பாதி ஆட்டம் முழுவதும் ஆர்சனல் வசமானது. அந்த அணி அடுத்தடுத்து நான்கு கோல்களை போட்டு இலகுவான வெற்றி ஒன்றை பதிவு செய்து கொண்டது. இந்த வெற்றியுடன் ஆர்சனல் அணி புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்திற்கு முன்னேற்றம் கண்டது.
லிவர்பூல் எதிர் மன்செஸ்டர் சிட்டி
நடப்புச் சம்பியன் மன்செஸ்டர் சிட்டியின் ரியாத் மஹ்ரெஸ், 86 ஆவது நிமிடத்தில் தவறவிட்ட பெனால்டி வாய்ப்புக் காரணமாக லிவர்பூல் அணிக்கு எதிரான போட்டி கோலின்றி சமநிலையில் முடிவுற்றது.
எனினும், மன்செஸ்டர் சிட்டி பிரீமியர் லீக் புள்ளிப் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டதோடு லிவர்பூல் கோல் வித்தியாசத்தில் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.
சிட்டியின் மாற்று வீரர் லேரோய் சேன் பெனால்டி பகுதியில் கீழே வீழ்த்தப்பட்டதை அடுத்தே சிட்டி அணிக்கு பெனால்டிக்கான வாய்ப்பு கிடைத்தது. எனினும், ஆர்ஜன்டீனாவின் மஹ்ரெஸ் வேகமாக உதைத்த பந்து கோல் கம்பத்திற்கு வெளியே பறந்தது.
மஹ்ரெஸ் கடைசியாக உதைத்த எட்டு பெனால்டி வாய்ப்புகளில் ஐந்தை தவறவிட்டுள்ளார். இந்நிலையில், இந்தப் போட்டியிலும் பெனால்டி வாய்ப்பை அவரிடம் வழங்கியது குறித்து சிட்டி ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
“வடக்கின் கில்லாடி யார்?” அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள றோயல், உருத்திரபுரம் அணிகள்
Thepapare.com ஊடக அனுசரணையில் அரியாலை..
லிவர்பூல் அணியின் சொந்த மைதானமான அன்பீல்டில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 51 வீதமான நேரம் சிட்டி அணி வீரர்களிடமே பந்து இருந்ததோடு லிவர்பூல் அணி நெருக்கடியை எதிர்கொண்டது. எனினும், சிட்டி அணி கடந்த 15 ஆண்டுகளில் லிவர்பூலில் லீக் போட்டி ஒன்றில் வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
செல்சி எதிர் சௌதம்டன்
இம்முறை பிரீமியர் லீக் தொடரில் தோல்வியுறாத அணியாக நீடிக்கும் செல்சிக்காக மத்தியகள வீரர் ரொஸ் பார்க்லி முதல் கோலை பெற சௌதம்டன் அணிக்கு எதிரான போட்டியில் அந்த அணி 3-0 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சௌதம்டனில் நடைபெற்ற இந்தப் போட்டியில் வில்லியன் வலையை நோக்கி உதைத்த பந்து கம்பத்தில் பட்டு வெளியேறியதோடு டான்னி இங்ஸுக்குக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பும் தவறிப்போனது. எனினும் செல்சி அணிக்கு கோல் பெறுவதை ஈடன் ஹசார்ட் தொடங்கி வைத்தார்.
ThePapare சம்பியன்ஷிப் தொடரை வெற்றியுடன் ஆரம்பித்த புனித ஜோசப் கல்லூரி
குதிரைப்பந்தய திடல் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற…
இங்கிலாந்து மத்தியகள வீரரான பார்க்லி 30ஆவது நிமிடத்தில் பரிமாற்றிய பந்தையே ஹஸார்ட் கோலாக மாற்றினார். ஹஸார்ட் இம்முறை பிரீமியர் லீக்கில் இதுவரை 7 கோல்களை பெற்று முன்னிலையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஜனவரி மாதம் எவர்டன் அணியில் இருந்து செல்சிக்கு ஒப்பந்தமான பார்க்லி 57 ஆவது நிமிடத்தில் அந்த அணிக்காக இரண்டாவது கோலை பெற்றுக்கொடுத்தார். தொடர்ந்து போட்டியின் உபாதை ஈடு நேரத்தில் ஹசார்ட் கொடுத்த பந்தை மாற்று வீரர் அல்வாரோ மேராடா கோலாக மாற்றினார்.
இதன்படி, செல்சி அணி இந்தப் பருவத்தில் அனைத்து போட்டிகளிலுமாக 11 ஆட்டங்களில் ஒன்பதை வென்றுள்ளது. மன்செஸ்டர் சிட்டி மற்றும் லிவர்பூல் அணிகளுக்கு இடையிலான போட்டி சமநிலை அடைந்ததை அடுத்து செல்சி, பிரீமியர் லீக் புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது. எனினும், இந்த மூன்று அணிகளும் தலா 20 புள்ளிகளை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<