செயிண்ட் மேரிசில் நடைபெற்ற சௌதம்டனுக்கு எதிரான போட்டியில் ஐரோப்பிய சுப்பர் கிண்ண சம்பியனான லிவர்பூல் அணி வெற்றி பெற்றதன் மூலம் இம்முறை ப்ரீமியர் லீக் தொடரில் அந்த அணி தொடர்ச்சியான தமது வெற்றிப் பயணத்தை கொண்டு செல்கின்றது.
ப்ரீமியர் லீக்கை வெற்றியுடன் ஆரம்பித்த மன்செஸ்டர் யுனைடெட், ஆர்சனல்
ஓல்ட் டிரபர்ட்டில் நடைபெற்ற செல்சிக்கு…
லிவர்பூர் அணிக்காக சாடியோ மானே முதல் கோலை பெற்ற நிலையில் அந்த அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டியது. அந்த அணி கடந்த புதன்கிழமை நடைபெற்ற செல்சியுடனான சுப்பர் கிண்ணத்தில் பெனால்டி சூட் அவுட் முறையில் வெற்றியீட்டி இருந்தது. இந்நிலையில் ப்ரீமியர் லீக்கில் இரண்டு வெற்றிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
இதில் சனிக்கிழமை நடந்த போட்டியில் லிவர்பூல் அணிக்கு ரொபார்டோ பெர்மினோ இரண்டாவது கோலை பெற்றதோடு போட்டியின் கடைசி நேரத்தில் டென்னி இங்ஸ் சௌதம்டனுக்காக ஆறுதல் கோல் ஒன்றை பெற்றார்.
மன்செஸ்டர் சிட்டி மற்றும் டொட்டன்ஹாம் அணிகளுக்கு இடையில் சனிக்கிழமை எட்டிஹாட் அரங்கில் நடைபெற்ற மற்றொரு போட்டி 2-2 என்ற கோல் கணக்கில் சர்ச்சைக்குரிய முறையில் முடிவுக்கு வந்தது. போட்டியின் மேலதிக நேரத்தில் காப்ரியல் ஜேசுஸ் பெற்ற கோல் வீடியோ உதவி நடுவர் மூலம் நிராகரிக்கப்பட்டது. இதனால் சிட்டி அணி 2018 டிசம்பருக்கு பின் முதல் முறை தனது சொந்த மைதானத்தில் வெற்றி பெற தவறியது.
இதன்போது ரஹீம் ஸ்டர்லிங் முதல் பாதியில் சிட்டி அணியை முன்னிலை பெறச் செய்தபோதும், எரிக் லமேலா சமநிலை கோலை பெற்றார். செர்கியோ அகுவேரோ சிட்டியை மீண்டும் முன்னிலை பெறச் செய்தபோதும் லுகாஸ் மௌரா பதில் கோல் திருப்பினார். மேலதிக நேரத்தில் ஜேசுஸ் பெற்ற கோல், அய்மரிக் லபோர்டின் கையில் பட்டதாக மறுக்கப்பட்டது.
மெஸ்ஸிக்கு சர்வதேச போட்டிகளில் விளையாட தடை
கோப்பா அமெரிக்கா போட்டிகளில் ஊழல்….
தனது ஆரம்ப போட்டியில் லிவர்பூலிடம் தோல்வியை சந்தித்த நோர்விக் சிட்டி, டீமு புக்கியின் ஹட்ரிக் கோல் மூலம் நியூ காசிலை 3-1 என வீழ்த்தியது.
பின்னிஷ் நாட்டு முன்கள வீரரான புக்கி இதுவரை இரண்டு ப்ரீமியர் லீக் போட்டிகளில் நான்கு கோல்களுடன் முன்னிலையில் உள்ளார். அவர் முதல் பாதியில் ஒரு கோலை பெற்று அதிர்ச்சி கொடுத்ததோடு இரண்டாவது பாதியில் மேலும் இரண்டு கோல்களை பெற்று நோர்விக் சிட்டிக்கு 3 கோல்களை பெற்றுக் கொடுத்தார். நயூ காசில் அணிக்கு கடைசி நேரத்தில் ஜொன்ஜோ செல்வி ஒரு கோலை புகுத்தினார்.
இந்தப் பருவத்தில் தனது முதல் வெற்றியை எதிர்பார்த்திருக்கும் அஸ்டன் வில்லான் தனது சொந்த மைதானத்தில் போர்மௌத்திடம் 2-1 என தோல்வியை எதிர்கொண்டது.
கால்பந்து ரசிகரான கிரிக்கெட் நட்சத்திரம் கோஹ்லி
இன்று உலகில் இருக்கும் சிறந்த கிரிக்கெட்….
அமெக்ஸ் அரங்கில் நடைபெற்ற வெஸ்ட் ஹாமுடனான போட்டியை பிரைட்டன் அணியால் 1-1 என சமநிலை செய்ய முடிந்தது.
இதனிடையே 10 ஆவது நிமிடத்தில் பெர்னாட் பெற்ற கோல் மூலம் வட்போர்ட் அணிக்கு எதிராக 1-0 என்ற கோல் வித்தியாசத்தில் எவர்டன் அணியால் வெற்றிபெற முடிந்தது.
மறுபுறம் சனிக்கிழமை நடைபெற்ற மற்றொரு போட்டியில் அவுபமயங் பெற்ற வெற்றி கோல் மூலம் பர்ன்லி அணியை ஆர்சனலால் 2-1 என்ற கோல் வித்தியாசத்தில் வீழ்த்த முடிந்தது.
காயத்தில் இருந்து மீண்ட அலெக்சாண்ட்ரே லகசட் 13 ஆவது நிமிடத்தில் கோல் பெற ஆர்சனலால் முன்னிலை பெற முடிந்த போதும் முதல் பாதிக்கு முன்னரே ஆஷ்லி பேர்ன்ஸ் மூலம் பர்ன்லி பதில் கோல் திருப்பியது.