டொட்டன்ஹாமிடமும் தோற்று தடுமாறும் மன்செஸ்டர் யுனைடெட்

195
AFP

லூகாஸ் மௌரோவின் இரட்டை கோல் மூலம் மன்செஸ்டர் யுனைடெட் அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய டொட்டன்ஹாம் ஹொட்ஸ்புர், இங்கிலாந்து பிரீமியர் லீக் தொடரில் தொடர்ச்சியாக மூன்றாவது வெற்றியை பெற்றுக் கொண்டது.  

நியூகாஸிலின் ஓன் கோலால் செல்சிக்கு தொடர்ந்து மூன்றாவது வெற்றி

நியூகாஸில் யுனைடெட் அணி கடைசி நேரத்தில் பெற்றுக் …

முகாமையாளர் ஜோஸ் மொரின்ஹோவின் மன்செஸ்டர் யுனைடெட் பலவீனமான தற்காப்பு ஆட்டம் காரணமாக மீண்டும் ஒரு தோல்வியை பெற்று பிரீமியர் லீக் தொடரில் மேலும் பின்தள்ளப்பட்டுள்ளது.

ஓல்ட் டிரபர்ட் மைதாத்தில் இந்த வார பிரீமியர் லீக் போட்டிகளின் கடைசி ஆட்டமாக இலங்கை நேரப்படி இன்று (28) அதிகாலை நடைபெற்ற இந்த போட்டியின் இரண்டாவது பாதியிலேயே டொட்டன்ஹாம் தனது மூன்று கோல்களையும் பெற்றது. இதனால், செய்வதறியாத மன்செஸ்டர் மற்றொரு பரிதாபமான தோல்வியை சந்திக்க வேண்டி ஏற்பட்டது.

யுனைடெட் அணி பிரீமியர் லீக்கில் இதுவரை ஆடிய மூன்று போட்டிகளில் இரண்டில் தோற்றிருப்பதோடு கடைசி இரண்டு போட்டிகளிலும் மொத்தம் ஆறு கோல்களை விட்டுக்கொடுத்துள்ளது.

கடந்த வாரம் பிரைடன் அணியிடம் 3-2 என தோற்ற மன்செஸ்டர் யுனைடெட் ஆறு மாற்றங்களுடனேயே இன்றைய போட்டியில் களமிறங்கியது.

இரண்டாம் வார வெற்றியையும் பதிவு செய்த பார்சிலோனா, ரியல் மட்ரிட் அணிகள்

லா லிகா கால்பந்து சுற்றுப் போட்டிகளின் இரண்டாம் …

போட்டியின் முதல் பாதியில் நம்பிக்கை தரும் வகையில் ஆடிய யுனைடெட் முதல் நிமிடத்திலேயே கோல் பெறும் வாய்ப்பொன்றை தவறவிட்டது. பிரேசிலின் பிரெட் எதிரணி பெனால்டி எல்லையை ஆக்கிரமித்தபோதும் அவரால் பந்தை வலைக்குள் புகுத்த முடியாமல்போனது.

டன்னி ரோஸ் பரிமாற்றிய பந்து ரொமலு லுகாகுவுக்கு கோல் ஒன்றை பெறுவதற்கு பொன்னான வாய்ப்பாக இருந்தபோது அது தவறிப்போனது.  

முதல் பாதி: டொட்டன்ஹாம் ஹொட்ஸ்புர் 0 – 0 மன்செஸ்டர் யுனைடெட்

இரண்டாவது பாதி ஆரம்பித்தபோது ஹொட்ஸ்புர் அணியின் ஆதிக்கம் வலுவாக இருந்தது. முதல் சில நிமிடங்களுக்குள் அந்த அணி இரண்டு முறை கோல் இலக்கை நோக்கி பந்தை செலுத்தியது.  

இந்நிலையில் 50ஆவது நிமிடத்தில் கிடைத்த கோணர் கிக்கை கீரான் ட்ரிப்பியர் உதைக்க அதனை தலையால் முட்டி கோலாக மாற்றினார் ஹெரி கேன். மேலும் இரண்டு நிமிடங்களுக்குள்ளேயே கிறிஸ்டியன் எரிக்ஸன் தாழ்வாக கடத்திய பந்தை பெற்ற லூகாஸ் மௌரோ அதனை லாவகமாக கோலாக மாற்றினார்.  

இரண்டு நிமிட இடைவெளியில் டொட்டன்ஹாம் இரண்டு கோல்களை பெற யுனைடெட் அணி அந்த அதிர்ச்சியில் இருந்து கடைசிவரை மீளவே இல்லை.

கால்பந்து போட்டியின் பாதிநேரம் அமைதிக்காத்த பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள்

இத்தாலியில் நடைபெற்று வரும் சீரி ஏ கால்பந்தாட்ட தொடரில் …

இந்நிலையில் போட்டி முடியும் தருவாயில், 84 ஆவது நிடத்தில் மௌரோ மற்றொரு கோலை பெற டொட்டன்ஹாமின் இலகு வெற்றி உறுதியானது. இங்கிலாந்து அணித்தலைவர் ஹெரி கேன் உதவ மௌரோ அந்த கோலை பெற்றார்.

மன்செஸ்டர் யுனைடெட் அணி பிரீமியர் லீக்கில் தனது சொந்த மைதானத்தில் சந்திக்கும் 50ஆவது தோல்வியாகவும் இது இருந்தது.

யுனைடெட் அடுத்து வரும் செப்டெம்பர் 2 ஆம் திகதி நடைபெறவிருக்கும் போட்டியில் பர்ன்லி அணியை எதிர்கொள்ளவிருப்பதோடு டொட்டன்ஹாமும் அதே தினத்தில் வட்போர்ட் உடன் பலப்பரீட்சை நடத்தும்.

முழு நேரம்: டொட்டன்ஹாம் ஹொட்ஸ்புர் 3 – 0 மன்செஸ்டர் யுனைடெட்

கோல் பெற்றவர்கள்

டொட்டன்ஹாம் ஹொட்ஸ்புர் – ஹெரி கேன் (50′), லூகாஸ் மௌரோ (52′, 84′)