இங்கிலாந்து பிரீமியர் லீக் (EPL) தொடரின் நான்காவது வாரத்தின் போட்டிகள் முடிவடைந்திருக்கும் நிலையில் ThePapare.com ரசிகர்களான உங்களுக்கு வாரத்தின் சிறந்த வீரருக்காக வாக்களிக்க முடியும்.
வாரத்தின் சிறந்த வீரருக்கு ரசிகர்களுக்கு கீழே வாக்களிக்க முடியும்! (வாக்கு முடிவு திகதி செப்டெம்பர் 07)
[socialpoll id=”2518172″]
கிளன் முர்ரே (பிரைட்டன்)
கிளன் முர்ரேவின் இரட்டை கோல்களால் புல்ஹாமுக்கு எதிரான போட்டியை 2-2 என்ற கோல் வித்தியாசத்தில் சமன் செய்த பிரைட்டனால் புள்ளிகளை பெற முடிந்தது. முர்ரே இலக்கை நோக்கி உதைத்த மூன்று பந்துகளில் பிரைட்டன் அணிக்கு இரண்டு கோல்களை பெற முடிந்தது. இதன்மூலம் அவர் 2018இல் தனது சொந்த மைதானத்தில் அதிக கோல் பெற்றவராக (8) ஹெரி கேனுடன் முதலிடத்தில் காணப்படுகிறார். போட்டியில் பிரைட்டன் அணி தொடர்ச்சியாக எதிரணிக்கு அச்சுறுத்தல் கொடுக்க முர்ரேவின் ஆட்டம் முக்கியமானதாக இருந்தது.
தொடர் தோல்விகளின் பின் யுனைடெட் வெற்றி: வட்போர்ட் அடுத்தடுத்து வெற்றி
இங்கிலாந்து பிரீமியர் லீக் தொடரின் நான்காவது வாரத்தின் முக்கிய மூன்று….
அலெக்ஸ் மக்கார்தி (சௌதம்ப்டன்)
கிறிஸ்டல் பெலஸுக்கு எதிரான போட்டியை 2-0 என முடித்து சௌதம்ப்டன் இந்த பருவத்தில் தனது முதல் வெற்றியை பெற்றது. இந்த வாரம் இங்கிலாந்து குழாத்திற்கு அழைக்கப்பட்ட அலெக்ஸ் மக்கார்தி, கிறிஸ்டியன் பென்டெக் நெருங்கிய தூரத்தில் இருந்து உதைத்த பந்தை தடுத்ததோடு லுகா மிலிவோஜிக் சரமாரி தாக்குதலையும் தடுத்திருந்தார். சௌதம்ப்டன் கோல்காப்பளரான அவர் ஆறு கோல்காப்புகளை செய்ததோடு எதிரணிக்கு எந்த கோலையும் விட்டுக்கொடுக்கவில்லை.
ஜோஸ் ஹோல்பாஸ் (வட்போர்ட்)
டொட்டன்ஹாமுக்கு எதிரான போட்டியில் வென்ற வட்போர்ட் பிரீமியர் லீக்கில் இதுவரை ஆடிய நான்கு போட்டிகளிலும் வெற்றியை பதிவு செய்து கொண்டது. அந்த அணிக்காக இரண்டு கோல்களை பெற ஜோஸ் ஹோல்பாஸ் துல்லியமான பந்து பரிமாற்றத்தை வெளிப்படுத்தினார். ஹோல்பாஸ் மற்றும் ரொபர்டோ பெரெய்ரா தொடர்ச்சியாக சிறந்த புரிதலுடன் ஆடி வருகின்றனர். இவர்கள் இடது பக்கவாட்டியில் இருந்து டொட்டன்ஹாமின் எந்த ஒரு தாக்குதல் ஆட்டத்தையும் முறியடிப்பவர்களாக செயற்பட்டனர்.
லிவர்பூல், செல்சி அணிகளுக்கு அடுத்தடுத்து நான்காவது வெற்றி
இங்கிலாந்து பிரீமியர் லீக் தொடரின் நான்காவது வார போட்டிகள்……
டேவிட் சில்வா (மன்செஸ்டர் சிட்டி)
எட்டிஹாட் அரங்கில் நடைபெற்ற போட்டியில் நியூகஸிலை கடுமையாக போராடியே மன்செஸ்டர் சிட்டி 2-1 என்ற கோல் வித்தியாசத்தில் வீழ்த்தியது. டேவிட் சில்வா மீண்டும் ஒரு முறை சிட்டியின் தாக்குதல் ஆட்டத்தில் முக்கியமானவராக இருந்தார். சிட்டி ஆடிய அனைத்து திட்டங்களும் சில்வா ஊடாகவே சென்றதோடு அவர் தனது பந்துப் பரிமாற்றத்தில் 88 வீதத்தை பூர்த்தி செய்தார்.
அலெக்சாண்ட்ரே லகாசெட் (ஆர்சனல்)
காடிப் சிட்டிக்கு எதிராக 3-2 என்ற கோல் வித்தியாசத்தில் வென்றபோதும் ஆர்சனல் தொடர்ந்தும் உறுதியாக இல்லை. பிரான்ஸ் முன்கள வீரர் லகாசெட் தனது திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்திய போட்டியாக இதனை குறிப்பிடலாம். அவர் வெற்றி கோலை பெற்றதோடு இரண்டாவது கோலுக்கு உதவினார். முதல் பாதியில் அவர் கோல் ஒன்றை பெறும் வாய்ப்பு ஏற்பட்டபோதும் அப்போது அவர் உதைத்த பந்து கோல் கம்பத்தில் பட்டு வெளியேறியது.
ThePapare.com இன் பிரீமியர் லீக் வாரத்தின் சிறந்த வீரர் – ஜோஸ் ஹோல்பாஸ்
>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<