ThePapare.com: பிரீமியர் லீக் முதல் வாரத்தின் சிறந்த வீரர்

371

ThePapare.com பிரீமியர் லீக் வாரத்தின் சிறந்த வீரர் (1) – ரிசாலிசன்

[socialpoll id=”2515438″]

இங்கிலாந்து பிரீமியர் லீக் (EPL) தொடரின் முதல் வாரத்தின் போட்டிகள் முடிவடைந்திருக்கும் நிலையில் ThePapare.com ரசிகர்களான உங்களுக்கு வாரத்தின் சிறந்த வீரருக்காக வாக்களிக்க முடியும்.

அதற்காக முதல் வாரத்தில் பிரகாசித்த சில வீரர்களை நாம் அடையாளம் கண்டுள்ளோம்.

சாடியோ மானே (லிவர்பூல்)

லிவர்பூல் அணியால் தனது முதல் போட்டியில் வெஸ்ட் ஹாமுக்கு எதிராக 4-0 என்ற கோல் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற முடிந்தது. செனகல் நாட்டைச் சேர்ந்த முன்கள வீரர் மானே 2 கோல்களை பெற்று போட்டியில் சிறந்த வீரராக தெரிவானார்.

பிரீமியர் லீக் தொடரின் ஆரம்ப போட்டிகளில் லிவர்பூல் அணிக்காக மானே தொடர்ச்சியாக மூன்று முறை கோல் பெற்றுள்ளார். 1989-90 மற்றும் 1991-92 பருவத்தில் ஜோன் பார்னஸுக்கு பின்னர் இந்த சாதனையை படைக்கும் முதல் வீரர் மானே ஆவார்.

முன்னணி அணிகளின் வெற்றியுடன் ஆரம்பமான பீரீமியர் லீக்

27 ஆவது பருவத்திற்கான இங்கிலாந்து பிரீமியர்..

ரிசாலிசன் (எவர்டன்)

முதல் பாதி ஆட்டத்திற்கு முன்னரே 10 வீரர்களுக்கு குறைக்கப்பட்ட எவர்டன் அணியால் வோல்வஸுக்கு எதிரான போட்டியை 2-2 என சமனிலையில் முடித்துக் கொள்ள முடிந்தது. அந்த அணிக்கான புதிய நம்பிக்கையாக ரிசாலிசன் இரட்டை கோல்கள் பெற்றார்.

அவரது முதல் கோல் எதிரணியில் பின்கள வீரர்களின் பலவீனத்தால் பெறப்பட்டது என்றபோதும் இரண்டாவது கோல் தனது இடது காலால் கோல் கம்பத்தின் இடது மூலையை நோக்கி வளைந்து செல்லும் வகையில் உதைத்து பெற்ற ஒரு அபார கோலாகும்.

பென்ஜமின் மெண்டி (மன்செஸ்டர் சிட்டி)

எமிரேட் அரங்கில் நடந்த போட்டியில் ஆர்சனலை 2-0 என்ற கோல் வித்தியாசத்தில் சிட்டி அணி வெற்றி பெற்றது. உலகக் கிண்ணம் வென்ற பிரான்ஸ் அணியில் இடம்பெற்ற மெண்டி இந்த இரண்டு கோல்களுக்கும் உதவியாக இருந்தார்.

கடந்த பருவத்தில் காயம் காரணமாக நீண்ட இடைவெளியை எடுத்துக் கொண்ட மெண்டி, குறிப்பிட்ட தருணங்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரஹீம் ஸ்டெர்லிங் மற்றும் பெர்னார்டோ சில்வா ஆகியோர் கோல் பெற உதவினார்.

பிரீமியர் லீக்: நடப்புச் சம்பியன் சிட்டி மற்றும் லிவர்பூல் அணிகளுக்கு உறுதியான வெற்றி

உலகின் முன்னணி கால்பந்து தொடர்களில் ஒன்றான…

நிகோலோ கான்டே (செல்சி)

ஹடர்ஸ்பீல்ட் கழகத்திற்கு எதிராக செல்சி 3-0 என இலகுவான வெற்றி ஒன்றை பெற்றது. கடந்த ஜூலை 15ஆம் திகதி நடைபெற்ற உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ஆடிய நிகோலோ கான்டே, ஹடர்ஸ்பீல்ட் அணிக்கு எதிராக ஒட்டுமொத்த 90 நிமிடங்களும் விளையாடினார்.  

இதன்போது, மிக அரிதான கோல் ஒன்றையும் புகுத்திய அவர் 53 தடவைகள் பந்தை பரிமாற்றியதோடு அது 84.9 வீதம் வெற்றி தருவதாக இருந்தது. அவர் 70 தடவைகள் பந்தை தொட்டதொடு ஒரு தடவை கோலை நோக்கி செல்வதை தடுத்தார். அவர் கோலை நோக்கிச் செல்வதை இரு முறை வெளியே தள்ளிவிட்டதோடு, இரு முறைகள் பந்தை இடைமறித்தார்.

ரொபர்டோ பெரெய்ரா (வெட்போர்ட்)

ஆர்ஜன்டீன மத்தியகள வீரரான ரெபார்டோ பெரெய்ரா, வெட்போர்ட் அணிக்காக இரண்டு கோல்களையும் பெற்றார். இதில் முதல்பாதி முடிவதற்கு 10 நிமிடங்கள் இருக்கும்போது ஜோஸ் ஹொலேபாஸின் கோணர் கிக்கைக் கொண்டு எவரும் எதிர்பாராத கோல் ஒன்றை புகுத்தினார்.

இரண்டாவது பாதி ஆட்டம் ஆரம்பித்த விரைவில் முன்னாள் ஜுவன்டஸ் வீரரான அவர் பெனால்டி எல்லைக்குள் பந்தை கடத்தி வந்து எதிரணி கோல்காப்பளர் மட் ரியான் செய்வதறியாத வகையில் கோல் ஒன்றை பெற்றார். பிரைடனுக்கு எதிராக அந்த போட்டியில் வெட்போர்ட் 2-0 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பொல் பொக்பா (மன்செஸ்டர் யுனைடெட்)

உலகக் கிண்ண வெற்றியாளரான பொக்பா மன்செஸ்டர் அணிக்கு முதல் முறை தலைமை வகித்தார். போட்டியின் ஆரம்பத்திலேயே கிடைத்த பெனால்டி வாய்ப்பில் அவர் ஓடி வந்து எதிரணி கோல்காப்பருக்கு மேலால் பந்தை வலைக்குள் செலுத்தினார்.

ஒட்டுமொத்த உலகக் கிண்ணத்திலும் ஆடியபோதும் பொக்பா இந்த போட்டியில் 84 நிமிடங்கள் மைதானத்தில் இருந்து மன்செஸ்டர் யுனைடெட் முகாமையாளர் ஜோஸ் மோரின்ஹோவுக்கு அதிர்ச்சி கொடுத்தார். லூகா ஷோ போட்டியின் கடைசி நேரத்தில் அந்த அணிக்கு இரண்டாவது கோலை பெற்றார். ஜிம்மி வார்டி பதில் கோல் ஒன்றை பெற்ற நிலையில் லெஸ்டர் சிட்டிக்கு எதிராக மன்செஸ்டர் யுனைடெட் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<