ThePapare.com: பிரீமியர் லீக் மாதத்தின் சிறந்த முகாமையாளர் – ஓகஸ்ட்

174

இங்கிலாந்து பிரீமியர் லீக் (EPL) தொடரின் முதல் மாதம் முடிவடையும் நிலையில் ThePapare.com ரசிகர்களுக்கு மாதத்தின் சிறந்த முகாமையாளருக்கு வாக்களிக்க முடியும்.

மாதத்தின் சிறந்த முகாமையாளருக்கு ரசிகர்களால் கீழே வாக்களிக்க முடியும்! (வாக்கு முடிவு திகதி ஓகஸ்ட் 31)

[socialpoll id=”2517428″]

ஜுர்கன் க்ளோப்ஸ் (லிவர்பூல்)

மூன்று போட்டிகள், எதிரணிக்கு கோல் விட்டுக்கொடுக்காத மூன்று வெற்றிகள். க்ளோப்ஸ் தனது வழக்கமான பாணியில் ஏற்கனவே உத்வேகத்தோடு லிவர்பூலின் முதல் போட்டியிலேயே வெஸ்ட் ஹாமுக்கு எதிராக 4-0 என அபார வெற்றியை பெற்று ரசிகர்களுக்கு களிப்பூட்டியுள்ளார். கிறிஸ்டல் பெலஸுடனான போட்டியில் எதிரணி மைதானத்திலும் சிறப்பான முறையில் ஆட முடியும் என்பதை நிரூபித்து அவரது அணி 1-0 என வெற்றி பெற்றது. தனது அணி சிறந்த நிலையில் இல்லாத போதும் கடந்த வாரம் பிரைட்டனுக்கு எதிரான போட்டியில் லிவர்பூல் 1-0 என வெற்றி பெற்றது.

ThePapare.com: பிரீமியர் லீக் மூன்றாவது வாரத்தின் சிறந்த வீரர்

இங்கிலாந்து பிரீமியர் லீக் (EPL) தொடரின் மூன்றாவது வாரத்தின் போட்டிகள்…

ஜாவி கிராசியா (வட்போர்ட்)

வட்போர்ட் இந்த மாதம் தனது மூன்று போட்டிகளிலும் தோற்காமல் புள்ளிப் பட்டியலில் கோல் வித்தியாசத்தின் அடிப்படையில் மாத்திரம் இரண்டாவது இடத்திற்கு வந்து அதிர்ச்சி தந்தது. ஜாவி கிராசியாவின் வீரர்கள் பிரைட்டன், பர்ன்லி மற்றும் கிறிஸ்டல் பெலஸ் அணிகளுக்கு எதிராக போராடி வெற்றிகளை குவித்தது. டொட்டன்ஹாம் ஹொட்ஸ்பூர் மற்றும் மன்செஸ்டர் யுனைடெட் அணிகளை எதிர்த்தாடவிருக்கும் நிலையில் அடுத்த வாரம் அவர்களின் நிலை பற்றி பார்க்கலாம்.

மௌரிசியோ செர்ரி (செல்சி)

திபோட் கோர்டொயிஸின் வெளியேற்றம் மற்றும் ஹசார்ட் மற்றும் வில்லியன் வெளியேறுவது பற்றி எழும் வதந்திகளுக்கு இடையே செர்ரியுடன் இணைந்திருக்கும் செல்சி 100 வீத வெற்றியை பதிவு செய்துள்ளது. ஆரம்ப தின போட்டியில் ஹட்டர்ஸ்பீல்டுக்கு எதிரான வெற்றி உறுதியானதாக இருந்தது. ஆர்சனலுக்கு எதிரான போட்டி இரு தரப்புக்கும் இடையிலானதாக இருந்தது. கடந்த வாரம் நியூகாஸிலுக்கு எதிரான வெற்றியை உறுதி செய்ய அதிர்ஷ்டமும் செல்சிக்கு உதவியது.

மொரிசியோ பொசட்டினோ (டொட்டன்ஹாம்)

வீரர்கள் பரிமாற்ற சந்தையில் பொசட்டினோவுக்கு வேலை இருக்கவில்லை என்பதோடு அது அவருக்கு பிரச்சினையையும் ஏற்படுத்தவில்லை. டொட்டன்ஹாம் தலைவர் மூன்று போட்டிகளிலும் வென்று சிறப்பான ஆரம்பத்தை பெற்றுள்ளார். கடைசியான வெற்றி மன்செஸ்டர் யுனைடெட் அணிக்கு எதிராகவாகும். நியூகாஸில் மற்றும் புல்ஹாமுக்கு எதிரான முதல் இரு போட்டிகளிலும் பெற்ற வெற்றியால் டொட்டன்ஹாம் நான்காவது இடத்தை பிடிக்க முடிந்தது.

ThePapare.com இன் பிரீமியர் லீக் மாதத்தின் சிறந்த முகாமையாளர் (ஓகஸ்ட்) – ஜாவி கிராசியா

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<