நியூகாஸில் யுனைடெட் அணி கடைசி நேரத்தில் பெற்றுக் கொடுத்த ஓன் கோல் மூலம் இங்கிலாந்து பிரீமியர் லீக்கில் செல்சி கழகம் தொடர்ச்சியாக மூன்றாவது வெற்றியை பெற்றது.
நியூகாஸிலில் உள்ள செயின்ட் ஜேம்ஸ் பார்க் அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்தப் போட்டியின் முதல் பாதி ஆட்டம் இழுபறியோடு முடிவுற்ற நிலையில் இரண்டாவது பாதியின் 11 நிமிடங்களுக்குள் பெறப்பட்ட மூன்று கோல்களுமே போட்டியின் முடிவை தீர்மானிப்பதாக இருந்தது.
சலாஹ்வின் கோல் மூலம் விலர்பூல் அடுத்தடுத்து 3ஆவது வெற்றி: ஆர்சனலுக்கு முதல் வெற்றி
இங்கிலாந்து பிரீமியர் லீக் தொடரின் மூன்றாவது…
இந்த போட்டியில் பெற்ற வெற்றியுடன் செல்சி அணி இம்முறை பிரீமியர் லீக்கில் இதுவரை அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்ற அணியாக லிவர்பூல் மற்றும் வட்போர்ட் அணிகளுடன் இணைந்துள்ளது. இந்த மூன்று அணிகளும் தலா 9 புள்ளிகளுடன் முதல் மூன்று இடங்களில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதில் பெல்ஜியம் நட்சத்திரம் ஈடன் ஹசார்ட் செல்சி அணி ஆடிய முதல் இரு போட்டிகளிலும் கதிரையில் அமர்ந்த நிலையில் ஞாயிறு போட்டியில் முதல்முறை களமிறங்கினார். ரஷ்யாவில் நடந்த உலகக் கிண்ண போட்டிக்கு பின்னர் ஹசார்ட், ஸ்பெயினின் ரியெல் மெட்ரிட் கழகத்திற்கு செல்வதற்கான வாய்ப்புகள் பற்றி பேசப்பட்ட நிலையிலேயே அவர் செல்சிக்கு களமிறங்கி இருந்தார்.
முதல் பாதி ஆட்டத்தில் செல்சி அணியால் அதிக நேரம் பந்தை தன்வசம் வைத்திருக்க முடிந்தபோதும் இரு அணிகளாலும் கோல் பெற முடியாமல்போனது.
முதல் பாதி: செல்சி 0 – 0 நியூகாஸில் யுனைடெட்
முதல் கோலை பெறுவதற்கு இரு அணிகளும் அவசரம் காட்டிக்கொண்டிருந்த வேளையில் செல்சி அணிக்கு பெனால்டி வாய்ப்பு ஒன்று கிடைத்தது. நியூகாஸில் பெனால்டி எல்லைக்குள் பந்தை கடத்திச் சென்ற மார்கோ அலொன்சோவை தடுக்க முயன்ற பபியோ ஸ்சர் அவரை கீழே வீழ்த்த செல்சி அணிக்கு நடுவர் பெனால்டி வழங்கினார்.
SAFF கிண்ண தொடருக்கான இலங்கை கால்பந்து குழாம் அறிவிப்பு
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 4ஆம் திகதி முதல் 15ஆம்..
அந்த வாய்ப்பை பயன்படுத்தி 76ஆவது நிமிடத்தில் ஹசார்ட் கோல்பெற செல்சி அணி 1-0 என முன்னிலை பெற்றது. எனினும் ஏழு நிமிடங்கள் கழித்து ஸ்பெயின் முன்கள வீரர் ஜோஸ்லு மிக நெருங்கிய தூரத்தில் இருந்து தலையால் முட்டி நியூகாஸில் யுனைடெட் சார்பில் பதில் கோல் திருப்பினார்.
இந்நிலையில் நான்கு நிமிடங்களின் பின் போட்டியின் திருப்பமாக செல்சி வீரர் மார்கோ அலொன்சோ உதைத்த பந்து வலையில் இருந்து விலகிச் செல்லும்போது அதனை நியூகாஸில் வீரர் டியன்ட்ரே யெட்லின் தட்டிவிட்டார். அந்த தவறால் பந்து வலைக்குள் சென்று ஓன் கோலாக மாறியதோடு அது செல்சியின் வெற்றி கோலாகவும் இருந்தது.
செல்சி அணி, அடுத்து இதுவரை தோல்வியுறாமல் இருக்கும் மற்றொரு அணியான போர்ன்மவுத் அணியை வரும் சனிக்கிழமை (செப்டம்பர் 01) எதிர்கொள்ளவுள்ளது.
முழு நேரம்: செல்சி 2 – 1 நியூகாஸில் யுனைடெட்
கோல் பெற்றவர்கள்
செல்சி – ஏடன் ஹசார்ட் 76′ (பெனால்டி), டியன்ட்ரே யெட்லின் 87′ (ஓன் கோல்)
நியூகாஸில் யுனைடெட் – ஜோஸ்லு 83′
>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<