பொதுநலவாய பளுதூக்கல் சம்பியன்ஷிப்பில் இலங்கைக்கு 3 பதக்கங்கள்

182

தென்னாபிரிக்காவில் கடந்த 17ஆம் திகதி நடைபெற்ற பொதுநலவாய பளுதூக்கல் சம்பியன்ஷிப் போட்டிகளில் இலங்கை வீரர்கள் ஒரு வெள்ளிப் பதக்கம் மற்றும் 2 வெண்கலப் பதக்கங்களை வென்று தொடரை நிறைவு செய்துள்ளனர்.

தொடரின் இலங்கை அணித் தலைவராக செயற்பட்ட ரன்சிலு இலங்கைக்கு வெள்ளிப் பதக்கத்தினை பெற்றுக்கொடுத்தார். 120 கிலோ எடைப் பிரிவில் போட்டியிட்ட ரன்சிலு, க்ளாசிக் ஸ்குவட் பிரிவில் 290 கிலோவினையும், ஒட்டு மொத்தமாக 732.5 கிலோவினையும் தூக்கி 2 தேசிய சாதனைகளையும் தனக்கு சொந்தமாக்கிக்கொண்டார்.

தேசிய சாதனையுடன் பொதுநலவாய பளுதூக்கலில் இலங்கைக்கு இரு பதக்கங்கள்

பொதுநலவாய நாடுகளின் பளுதூக்கல் போட்டித் தொடரின் 2ஆவது நாளான…

120 கிலோ எடைப் பிரிவில் போட்டியிட்ட மற்றொரு வீரரான தரின் வீரசிங்க ஒட்டுமொத்த போட்டியில் வெண்கலப் பதக்கத்தினை பெற்றுக்கொண்டார். தரின், க்ளசிக் பெஞ்ச் ப்ரெஸ் பிரிவில் 205 கிலோவினை தூக்கிய முதல் இலங்கையர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது. 105 கிலோ க்ளசிக்  எடைப் பிரிவில் போட்டியிட்ட இந்திக பரணகம வெண்கலப் பதக்கத்தினை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தகது.

முன்னதாக நடைபெற்ற போட்டியில் இலங்கை அணி 4 தங்கம், 3 வெள்ளி உட்பட மொத்தமாக 25 பதக்கங்களை சுவீகரித்தமை குறிப்பிடத்தக்கது.