2019ஆம் உலகக் கிண்ணமே நமது இலக்கு – மெதிவ்ஸ்

3682
“It was a demoralizing and embarrassing tour” –Mathews

கடந்த மே மாதம் இங்கிலாந்து பயணித்து இங்கிலாந்து அணிக்கெதிராக டெஸ்ட், ஒருநாள் மற்றும் ஒரு இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டியிலும் தோல்வியடைந்து, அந்தத் தொடரில் இடம்பெற்ற சர்வதேசப் போட்டிகள் எவற்றிலும் வெற்றியைப் பெறத்தவறிய இலங்கை அணி இன்று தாயகம் திரும்பியது.

3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 0-2 என்ற கணக்கில் இழந்த இலங்கை அணி, 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை 0-3 என்ற கணக்கில் இழந்ததோடு, ஒரு இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டியிலும் தோல்வியடைந்திருந்தது. அத்தோடு, சுப்பர் தொடர் என அழைக்கப்படும் இந்தத் தொடரில், புள்ளிகள் அடிப்படையில் 4-20 என்ற புள்ளிகளையே இலங்கை பெற்றது.

இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த மெதிவ்ஸ், அடுத்ததாக இடம்பெறவுள்ள அவுஸ்திரேலியத் தொடர் குறித்துக் கவனஞ்செலுத்தினார்.

எங்களைப் புத்துணர்வாக்க, எங்களுக்குச் சிறிய ஓய்வு கிடைக்கும். அதன் பின்னர் அடுத்த தொடர், இதைப் போலவே கடினமாக அமையும். இடம்பெறவுள்ள அந்த மோதலுக்காக மனதளவிலும், உடலளவிலும் நாங்கள் சிறப்பாகத் தயாராகியிருக்க வேண்டும்என்று அவர் தெரிவித்தார்.

இங்கிலாந்துத் தொடரின் பெறுபேறுகள் தொடர்பாக ஏமாற்றத்தை வெளிப்படுத்தினாலும், அத்தொடரில் காணப்பட்ட சிறப்பான விடயங்கள் குறித்துக் கவனஞ்செலுத்த, மெதிவ்ஸ் முனைந்தார். மிகவும் ஏமாற்றமளிக்கிறது தான், ஆனால் இந்தத் தொடரிலிருந்து சில நல்ல விடயங்களைக் கொண்டு செல்லமுடியும். துடுப்பாட்டத்திலும் விக்கெட் காப்பிலும், டினேஷ் சந்திமால் சிறப்பாகச் செயற்பட்டார். குசால் மென்டிஸூம் சிறப்பாக ஓட்டங்களைக் குவித்தார். அவ்வப்போது சிறப்பாக விளையாடினோம், ஆனால் நாங்கள் நினைத்தளவு போட்டியை வழங்குவதற்கு, துடுப்பாட்ட வீரர்களுக்குப் பின்புலமாக விளங்க வேண்டியளவு பந்துவீச்சாளர்களைக் கொண்டிருக்கவில்லைஎன்றார்.

இது தொடர்பில் மெதிவ்ஸ் மேலும் பேசுகையில்நாம் விமான நிலையம் வந்து அடைந்து அங்கிருந்து சந்தித்த அனைவரும் எமக்கு ஆறுதல் மற்றும் ஆதரவு அளிக்கும் வகையில் பேசியிருந்தார்கள். நாம் கீழே விழுந்து இருக்கும் போது இவ்வாறு எமக்கு ஆதரவு அளிக்கும் அனைவருக்கும் எமது நன்றிகள்,

இளம் மற்றும் அனுபவம் வாய்ந்த அணியைப் பெறவேண்டும், எமது முக்கிய குறிக்கோள் 2019ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்திற்கு இலங்கை அணியை சிறப்பாகத் தயார் செய்வது தான். இங்கிலாந்து தொடரில் 5 பந்துவீச்சாளர்கள் உபாதைக்கு உள்ளாகி இருந்தார்கள். இது எமக்கு பாரிய இழப்பாக இருந்ததுஒவ்வொரு போட்டியிலும் ஏதாவது  பகுதியில் (துடுப்பாட்டம், பந்துவீச்சு, களத்தடுப்பு) பிழைகள் ஏற்படுகின்றன” என்று கூறியிருந்தார்

அத்தோடு திலகரத்ன டில்ஷான் அநேகமாக அவுஸ்திரேலிய தொடரில் விளையாடுவார் என்றும் அவர் அதற்கு தற்போது பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றார். மிலிந்த சிறிவர்தனவும் அணிக்குத் திரும்பக் கூடிய அதிக வாய்ப்புகள் உள்ள நிலையில் செஹான் ஜயசூர்யாவும் தற்போது பயிற்சிகளில் இணைத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்