அழும் பிரான்ஸ் ரசிகரை தேற்றிய போர்த்துக்கேய குட்டி ரசிகன்

232

பிரான்ஸ் நாட்டில் நேற்று நள்ளிரவு பிரான்ஸ்- போர்த்துக்கல் அணிகளுக்கு இடையில் யூரோ கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் தொடரை நடத்தும் பிரான்ஸ் அணிதான் வெற்றிபெறும் என்று எல்லோரும் நினைத்தார்கள். ஆனால், வலிமையான தடுப்பாட்ட வீரர்கள் மூலம் பிரான்ஸ்வீ ரர்களைக் கோல் அடிக்க விடாமல் போர்த்துக்கல் பார்த்துக்கொண்டது.

அதேவேளையில் கூடுதல் நேரத்தில் ஆட்டத்தின் 113ஆவது நிமிடத்தில் ஈடர் கோல் அடித்து போர்த்துக்கல் அணியை வெற்றிபெற வைத்தார். இந்த தோல்வியை தாங்க முடியாத பிரான்ஸ் ரசிகர் கதறி அழுதார். இதை பார்த்துக் கொண்டிருந்த போர்த்துக்கல் இளம் ரசிகன் ஒருவன் பிரான்ஸ் ரசிகரின் கண்ணீரைத் துடைத்து விட்டு, அவருக்கு ஆறுதல் கூறினான்.