களனி காற்பந்தாட்ட மைதானத்தில், பொல்கஹவெல ஐக்கிய கால்பந்து கழகம் மற்றும் கோட்டே விளையாட்டு கழகங்களுக்கு இடையில் நடைபெற்ற இரண்டாம் பிரிவுக்கான பிரிமியர் லீக் இறுதிப்போட்டியில் 3-0 என்ற கோல்கள் அடிப்படையில் பொல்கஹவெல ஐக்கிய கால்பந்து கழகம் வெற்றி பெற்று சம்பியன் பட்டதை சுவீகரித்தது.

போட்டியின் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய பொல்கஹவெல விளையாட்டு கழகம் நடுக்களத்தை சிறந்த முறையில் கட்டுப்படுத்தி விளையாடியதை காணக்கூடியதாக இருந்தது. பல சிறந்த வாய்ப்புக்கள் கிடைக்க பெற்ற போதிலும் பொல்கஹவெல விளையாட்டு கழகம் ஓப்சைட் காரணமாக முயற்சிகள் வீணடிக்கப்பட்டன. எனினும், போட்டியின் 13ஆவது நிமிடம் கிடைக்கப்பெற்ற வாய்ப்பினை சரியாக பயன்படுத்திக்கொண்ட சாலனி ஏக்கநாயக்க பொல்கஹவெல ஐக்கிய விளையாட்டு கழகம் சார்பாக முதல் கோலை பதிவு செய்துகொண்டார்.   

Photos: Polgahawela United v Kotte SC – Women’s Div II Final (2016)

Photos of the Polgahawela United v Kotte SC – Women’s Div II Final (2016)

இரு அணிகளும் போட்டிக்கு ஒவ்வாத வகையில் மோசமாக விளையாடிய போதிலும், கிடைக்கப்பெற்ற சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட எஸ்.எல். மானகே 21ஆவது நிமிடம் பொல்கஹவெல விளையாட்டு கழகத்துக்கு இரண்டாவது கோலை பெற்றுக்கொடுத்தார். இரண்டாவது கோலுடன் பொல்கஹவெல ஐக்கிய விளையாட்டு கழகம் முன்னிலை பெற்றது.

முதல் பாதி : பொல்கஹவெல ஐக்கிய விளையாட்டு கழகம் 2 – 0 கோட்டே கால்பந்து கழகம்

இரண்டாம் பாதி ஆரம்பித்த வேளையிலிருந்து கோட்டே கால்பந்து கழகம் வெற்றிக்கான எந்தவிதமான முயற்சிகளையும் மேற்கொள்வதை காணமுடியவில்லை. அவர்களால், கோல் கம்பத்தை நோக்கி பந்தை உதைப்பதற்கான முயற்சிகள் எதுவும் மேற்கொள்ளப்படவும் இல்லை. அத்துடன், இரு அணிகளும் சோர்வுற்ற நிலையில் காணப்பட்டன.

போட்டி முடிவடையும் நேரம் நெருங்கி வரும் வேளையில, போட்டியின் போது ஏற்பட்ட சில உபாதைகளால் போட்டி நிறுத்தபட்டிருந்த நேரத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட பொல்கஹவெல ஐக்கிய கால்பந்து கழக அணியினர் தங்களை உற்சாகப்படுத்திக்கொண்டனர். அதனை தொடர்ந்து போட்டி ஆரம்பித்த உடனேயே தக்க சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்த சாலனி ஏக்கநாயக்க மூன்றாவது கோலையும் பொல்கஹவெல ஐக்கிய கால்பந்து கழகத்துக்கு பெற்றுக்கொடுத்தார்.

இறுதியில் போட்டி முடிவுற பொல்கஹவெல ஐக்கிய கால்பந்து கழகம் சம்பியன் பட்டதை சுவீகரித்துக் கொண்டது. இலங்கை கால்பந்து சங்க தலைவர் அனுர டி சில்வா, செயலாளர் பாலேந்திர அந்தோனி மற்றும் அங்கத்தவர்கள் மத்தியில் விருதுகள் வழங்கப்பட்டன.  

முழு நேரம் : பொல்கஹவெல ஐக்கிய கால்பந்து கழகம்  3 – 0 கோட்டே விளையாட்டு கழகம்  

ThePapare.com இன் போட்டிக்கான சிறந்த விளையாட்டு வீரர் – சாலனி ஏக்கநாயக்க (பொல்கஹவெல ஐக்கிய கால்பந்து கழகம்) 

ThePapare.com இற்கு கோட்டே கால்பந்து கழக பயிற்சிவிப்பாளர் புத்திக டயஸ் கருத்து தெரிவித்த போது,

இந்த ஆண்டு இறுதிப் போட்டிக்கு தெரிவானது குறித்து மகிழ்ச்சியாக உள்ளது. குறித்த போட்டிகளுக்கு என்றே நாம் இந்த அணியினை ஒன்றிணைத்தோம். இன்றைய நாள் போட்டிகளில் வெளிப்படுத்திய திறமைகள் குறித்து மகிழ்ச்சியடைகின்றேன். எனினும், இன்றைய போட்டியில் நான் எதிர்பார்த்தது போல் நடுக்கள வீரர்கள் சரியாக செயற்படவில்லை. அத்துடன், சில பின்கள தடுப்பு வீரர்கள் காயம் காரணமாக இன்று விளையாடவில்லை. அடிக்கப்பட்ட முதல் கோல் ஒப்சைட் என்றே சொல்லலாம், எவ்வாறானினும், இந்த நாள் எங்களுக்கான நாள் அல்ல.

ThePapare.com இற்கு பொல்கஹவெல ஐக்கிய கால்பந்து கழக பயிற்சிவிப்பாளர் லியோ பெர்னாண்டோ கருத்து தெரிவித்த போது,

போட்டிக்கு முன்தாக எவ்வாறு இறுதிப் போட்டியில் விளையாடுவது என்று திட்டமிட்டிருந்தோம். திட்டமிட்டபடியே நடந்தது குறித்து மகிழ்ச்சி. அத்துடன் வெற்றியை பெற்றுக்கொடுத்த இந்த அணிக்காக பெருமைப்படுகின்றேன்.

விருதுகள்

போட்டியின் சிறந்த ஆட்டக்காரர்:  சாலனி ஏக்கநாயக்க (பொல்கஹவெல ஐக்கிய கால்பந்து கழகம்) 

இறுதி போட்டியின் சிறந்த கோல் காப்பாளார்: நிஸ்ஸங்கா வீரசிங்க (பொல்கஹவெல ஐக்கிய கால்பந்து கழகம்) 

கோல் அடித்தவர்கள்

பொல்கஹவெல ஐக்கிய கால்பந்து கழகம்:  சாலனி ஏக்கநாயக்க 13 & 62, எஸ்.எல். மானகே 21′