உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடருக்கான புள்ளிகள் முறைமை வெளியீடு

1220

சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் (ஐ.சி.சி) எதிர்கால கிரிக்கெட் சுற்றுத்தொடர் நிகழ்ச்சித் திட்டத்திற்கு (FTP) அமைவாக 2019 ஆம் ஆண்டின் கிரிக்கெட் உலகக் கிண்ணத்திற்கு பின்னர், உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடர் நடைபெறவுள்ளது.

இலங்கை கிரிக்கெட் தேர்தலை ஆறு மாதத்திற்குள் நடத்தவும் – ஐ.சி.சி உத்தரவு

இந்த உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரில், ஐ.சி.சி. இன் டெஸ்ட் தரவரிசையில் முதல் ஒன்பது இடங்களுக்குள் இருக்கும் அணிகள் பங்கெடுக்கின்றன. இதில் பங்கேற்கும் அணிகள் பொதுவான விருப்பு அடிப்படையில் தமது எதிரணியினை தெரிவு செய்து ஆறு இருதரப்பு டெஸ்ட் தொடர்களில் விளையாட வேண்டும்.   

இந்த இருதரப்பு டெஸ்ட் தொடர்களுக்கு வழங்கப்படும் புள்ளிகளின் அடிப்படையில், புள்ளிகள் அட்டவணையில் முதல் இரண்டு இடங்களைப் பெறும் அணிகள் 2021 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் மோதவிருக்கின்றன.  

அந்த வகையில், புதிதாக நடைபெறவுள்ள இந்த உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்கும் அணிகளுக்கு புள்ளிகள் வழங்கும் ஐ.சி.சி இன் அங்கீகாரத்துடனான புள்ளிகள் முறைமை (Point System) பற்றி ESPNCricinfo நிறுவனம் செய்தி வெளியிட்டிருக்கின்றது.

இந்த புள்ளிகள் முறைமையின் அடிப்படையில் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் ஒவ்வொரு இருதரப்பு தொடருக்கும் மொத்தமாக 120 புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்படவுள்ளன. இதனால், உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரில் விளையாடவுள்ள ஒவ்வொரு அணிக்கும் (ஆறு இருதரப்பு டெஸ்ட் தொடர்கள் இருப்பதால்) மொத்தமாக 720 புள்ளிகளைப் பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பம் காணப்படுகின்றது.

ஓய்வை அறிவித்தார் டேவிட் ரிச்சட்சன்

சர்வதேச கிரிக்கெட் சபையின் (ICC)..

இந்த புள்ளிகள் முறைமையில் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் டெஸ்ட் போட்டியொன்றுக்கு புள்ளிகள் வழங்குவது தொடரில் அடங்கும் போட்டிகளின் எண்ணிக்கையின் அடிப்படையிலாகும். உதாரணமாக, உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடருக்காக விளையாடப்படும் இருதரப்பு டெஸ்ட் தொடரொன்று இரண்டு போட்டிகளை கொண்டிருக்குமாயின் இத்தொடரில் ஒரு வெற்றிக்காக அணியொன்று 60 புள்ளிகளை பெற்றுக்கொள்ளும். இதேவேளை போட்டி சமநிலையில் (Draw) முடியுமிடத்து இரண்டு அணிகளுக்கும் தலா 20 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். அதேநேரம், போட்டி வெற்றியோ தோல்வியோ இன்றி  (Tie) முடிவடையும் சந்தர்ப்பத்தில் ஒவ்வொரு அணிகளும் தலா 30 புள்ளிகள் வீதம் பெற்றுக் கொள்ளும்.

அதேபோன்று, உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரில் மூன்று போட்டிகள் கொண்ட இருதரப்பு டெஸ்ட் தொடர் ஒன்று விளையாடப்படுமிடத்து, அதில் ஒரு போட்டியின் வெற்றிக்கு அணியொன்றுக்கு 40 புள்ளிகளும் போட்டி சமநிலையில் முடியுமிடத்து  இரண்டு அணிகளுக்கும் தலா 13.3 புள்ளிகள் வீதமும், வெற்றி தோல்வியின்றி முடிகின்ற நிலையில் ஒவ்வொரு அணிக்கும் தலா 20 புள்ளிகள் வீதமும் கிடைக்கும்.

இந்தப் புள்ளிகள் முறைமையின் அடிப்படையில் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரில் இரண்டு போட்டிகளைக் கொண்ட இருதரப்பு டெஸ்ட் தொடரில் விளையாடும் அணிகளுக்கு, இரண்டை விட கூடுதலான போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் அணிகளை விட அதிக புள்ளிகளை பெற்றுக் கொள்ளக் கூடிய சாதக நிலைமை காணப்படுகின்றது.

ஹர்பஜனின் பிறந்த நாளுக்கு தமிழில் வாழ்த்து தெரிவித்த சச்சின் டெண்டுல்கர்

விளக்கமாக கூறப்போனால், மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட இருதரப்பு தொடர் ஒன்றில் விளையாடும் அணி ஒரு வெற்றிக்கு 40 புள்ளிகளை பெற, இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடும் அணி ஒரு வெற்றிக்கு 60 புள்ளிகளை பெற்றுவிடும். இதன்படி, உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் தொடர் ஒன்றுக்கு 120 புள்ளிகளை எடுக்க இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடும் அணி இரண்டு வெற்றிகளை பெற வேண்டிய நிலையில், மூன்று போட்டிகளில் ஆடும் அணி மூன்று டெஸ்ட் போட்டிகளினதும் வெற்றிகளை பெற வேண்டியிருக்கும்.

அதோடு, இந்த புள்ளிகள் முறைமையில் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின்  டெஸ்ட் போட்டியொன்றின் சமநிலைக்கு குறைவான புள்ளிகளே கொடுக்கப்படுவதால் தொடரில் பங்கெடுக்கும் அணிகள் போட்டியினை சமநிலை செய்யாமல் வெற்றி பெற முழுமையான முயற்சிகளை மேற்கொள்ளும். இப்படியாக அணிகள் வெற்றிக்காக போராடுவது டெஸ்ட் போட்டிகளை சுவாரசியமாக மாற்றக் கூடிய விடயமாகும்

இலங்கை கிரிக்கெட் அணி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரில் தமது முதலாவது மோதலினை நியூசிலாந்து அணியுடன் இலங்கை மண்ணில் நடைபெறவுள்ள இருதரப்பு டெஸ்ட் தொடருடன் ஆரம்பிக்கின்றது. இரண்டு போட்டிகள் கொண்ட இந்த இருதரப்பு டெஸ்ட் தொடர் 2019 ஆம் ஆண்டின் ஜூலை மாதத்தில் ஆரம்பமாகவுள்ளது.

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடருக்கான புள்ளிகள் முறைமை

போட்டிகள் எண்ணிக்கை வெற்றி சமநிலை வெற்றி/தோல்வியற்ற முடிவு தோல்வி
2 60 20 30 0
3 40 13.3 20 0
4 30 10 15 0
5 24 08 12 0

 

 மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க