இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு குமார் சங்கக்காரவின் அறிவுரை

160

இலங்கை கிரிக்கெட் அணியில் விளையாடுவது என்பது எமக்கு கிடைக்கும் சிறப்புரிமையாகும் என இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.   

டயலொக் 4G – சண்டே டைம்ஸ் சிறந்த பாடசாலை கிரிக்கெட் வீரர்களுக்கான விருது வழங்கல் விழாவில் சிறப்பு அதிதியாக கலந்துக்கொண்ட குமார் சங்கக்கார, எதிர்கால கிரிக்கெட் வீரர்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் சிறப்புரை ஒன்றினை ஆற்றியிருந்தார். இதன்போதே, இலங்கை கிரிக்கெட் அணியில் விளையாடுவது தனிச்சிறப்பு மிக்கது என சுட்டிக்காட்டினார்.  

சிறந்த பாடசாலை கிரிக்கெட் வீரருக்கான விருதை வென்ற லக்ஷித ரசன்ஜன

இலங்கையில் உள்ள பாடசாலை கிரிக்கெட் வீரர்களை….

“கிரிக்கெட் விளையாட்டானது ஏனைய விளையாட்டுகளை விடவும் சற்று வித்தியாசமானது. இலங்கையிலும் சரி, சர்வதேசத்திலும் சரி தனிநபர் மதிப்பினை வெளிப்படுத்தக்கூடிய ஒன்று. மைதானம் மற்றும் மைதானத்துக்கு வெளியில் ஒருவரின் நடத்தை, ஒருவரது குணாம்சம் மற்றும் அவரது செயற்பாடுகள் என்பவற்றை கிரிக்கெட்டின் மூலம் இலகுவாக அறிந்துக்கொள்ள முடியும்.

கிரிக்கெட் என்பது துடுப்பாட்ட மட்டையும், பந்தும் மாத்திரம் அல்ல. அது ஒரு தனிப்பட்ட நபரின் அடையாளத்தை வெளிக்காட்டுவது. நீங்கள் யார் என்பதை கிரிக்கெட் மூலம் ஒருவரால் அறிந்துக்கொள்ள முடியும். நீங்கள் மைதானத்தில் விளையாடும் விதமும், மைதானத்துக்கு வெளியில் நடந்துக்கொள்ளும் விதமும் தான் உங்களின் அடையாளமாக மாரும்”

ஏனைய விளையாட்டுகளை விட கிரிக்கெட்டை பொருத்தவரை, விளையாட்டின் (கிரிக்கெட்டின்) மகத்துவத்தை பாதுகாப்பதற்கான சில வரைவுகள் இருக்கின்றன. கிரிக்கெட்டின் விதிமுறைகளை தாண்டி, இந்த விடயங்கள் கிரிக்கெட்டின் கனவான்தன்மை வெளிப்படுத்துவதற்கு சிறந்த அடித்தளமாக காணப்படுகின்றன. இதன் மூலம் கிரிக்கெட்டானது வீரர்களை தாண்டி, ஒரு சிறந்த மனிதரை உருவாக்குவதற்கு உதவுகின்றது.

“இந்த இடத்தில் மிகச்சிறந்த இளம் கிரிக்கெட் வீரர்கள் இருக்கின்றனர். இப்போது நீங்கள், உங்கள் எதிர்காலம் தொடர்பான தீர்மானங்களை எடுக்க வேண்டும். சிலர் கழகங்களில் இணைந்து விளையாட எண்ணியிருப்பீர்கள், மற்றும் சிலர் இலங்கை தேசிய அணிக்காக விளையாட வேண்டும் என கனவை தொடர்ந்தும் வைத்திருப்பீர்கள். அவற்றுக்கு முதலில் நீங்கள் சிறந்த திட்டத்தை வகுக்க வேண்டும். அதன் பின்னர், அதற்காக கடினமான உழைக்க வேண்டும்.

அதுமாத்திரமின்றி, சரியான பயிற்றுவிப்பாளர்கள் மற்றம் சரியான வழிகாட்டியை கொண்டு, கடினமான காலங்களிலும் முயற்சியை கைவிடாமல் இருக்க வேண்டும். அத்துடன், நாம் சரியான பயிற்சிகளை மேற்கொள்கின்றோம். அதற்காக கடினமாக உழைக்கிறோம் மற்றும் சரியான பாதையில் செல்கிறோம் என்ற நம்பிக்கை உங்களுக்குள் வரும் என்றால், உங்களது திறமை மற்றும் உங்களது செயற்திறன் மிகச்சிறப்பாக உள்ளது என அர்த்தம்” 

Photos : Dialog 4G – The Sunday Times Schoolboy Cricketer 2019

ThePapare.com | Sithija De Silva | 17/09/2019 | Editing and re-using….

இந்தநிலையில், இளம் வீரர்கள் ஒவ்வொருவரும், கடினமான உழைப்பையும், பயிற்சியையும் மேற்கொள்கின்றனர் என்றால், அவர்கள் பயிற்றுவிப்பாளர்கள், நடுவர்கள், உயர் பதவிகளில் உள்ளவர்கள் மற்றும் கிரிக்கெட் சபையின் உயர் அதிகாரிகளுடன் நண்பர்களாக அவசியமில்லை. அவர்களுக்கான வாய்ப்பு வரும் போது, வெளி உலககிற்கு தங்களுடைய திறமையை வெளிப்படுத்தி, தங்களை அடையாளப்படுத்திக்கொள்ள முடியும் எனவும் குறிப்பிட்டார்.

அதேநேரம், “வெற்றிபெற்ற மற்றும் பங்குபற்றிய அனைவருக்கும் எனது வாழ்த்துகள். இந்த விருதுகள் உங்களின் வாழ்க்கையின் முடிவாகது. இதுவொரு சவால்.  குறிப்பாக நான் (சங்கக்கார) மற்றும் ரங்கன ஹேரத் இப்போது சிறந்த இடத்தில் இருக்கிறோம். ஆனால், நாம் சிறந்த பாடசாலை கிரிக்கெட் வீரர்களாக தெரிவுசெய்யப்படவில்லை. எனவே உங்களின் கிரிக்கெட் வாழ்க்கை இப்போது முடிவடைந்துவிட்டது என மாத்திரம் நினைக்க வேண்டாம். மேலும் அதற்காக உழைக்க வேண்டும்”  என குமார் சங்கக்கார தெரிவித்தார்.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க