சமூக வலைத்தளங்களில் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் தற்போது பரபரப்பாகப் பேசப்படும் ஒருவராக இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் மாறியுள்ளார்.
இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நிறைவுக்கு வந்த சுதந்திரக் கிண்ண முத்தரப்பு T-20 போட்டித் தொடரின் பங்களாதேஷ் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் கடைசிப் பந்தில் அடித்த சிக்ஸர் தான் போட்டியின் போக்கை மாற்றி இந்திய அணியை சம்பியனாகவும் முடிசூட வைத்தது.
புலியின் வாயிலிருந்து வெற்றியைப் பறித்த தமிழக நட்சத்திரம் கார்த்திக்!
கடைசி இரண்டு ஓவர்களிலும் தனது துடுப்பாட்டத்தால்..
இதில் 8 பந்துகளை மட்டும் சந்தித்த தினேஷ் கார்த்திக் 360 பாகை கோணத்தில் தனது துடுப்பு மட்டையை சுழற்றி அதிரடியாக 29 ஓட்டங்களைக் குவித்தார். அதிலும் ரூபெல் ஹுசைன் வீசிய 19ஆவது ஓவரில் 6,4,6,0,2,4 உள்ளடங்கலாக 22 ஒட்டங்களைக் குவித்து, பங்களாதேஷ் கையில் இருந்த போட்டியை இந்தியாவின் பக்கம் திருப்பினார்.
கடைசி நேரத்தில் இவரைக் களமிறக்காமல் சற்று முன்னதாகவே களம் இறக்கி இருந்தால், ஒரு சில ஓவர்களுக்கு முன்பே ஆட்டம் இந்தியாவுக்கு சாதகமாக முடிந்திருக்கும் என்று ரசிகர்கள் அங்கலாய்க்கிறார்கள்.
கடைசி ஓவரில் இந்திய அணியின் வெற்றிக்கு 12 ஓட்டங்கள் தேவைப்பட்டது. இதன்போது, இந்திய வீரர்கள் மற்றும் மைதானம் முழுவதும் இந்திய அணிக்கு ஆதரவு அளித்திருந்த இலங்கை ரசிகர்களும் பதற்றத்துடன் காணப்பட்டனர்.
எனினும், இந்த ஓவரின் நான்காவது பந்தில் பௌண்டரி ஒன்றை விளாசிய விஜய் சங்கர் ஐந்தாவது பந்தில் பிடிகொடுத்து 17 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
இதனால் இந்திய அணி வெற்றி பெற கடைசி பந்துக்கு 5 ஓட்டங்கள் பெற வேண்டிய நிலை ஏற்பட்டது. இதன்போது துடுப்பெடுத்தாடிய தினேஷ் கார்த்திக், ஓப் திசையில் அபார சிக்ஸர் ஒன்றை விளாசி இந்திய அணிக்கு த்ரில் வெற்றியைப் பெற்றுக் கொடுத்தார்.
கடைசிப் பந்தில் தினேஷ் கார்த்திக் அடித்த சிக்ஸர் எப்படி போட்டியின் போக்கை தீர்மானித்ததோ அதேபோல கிரிக்கெட் வரலாற்றில் முக்கியமான ஒருசில போட்டிகளும் அவ்வாறே ஆட்டத்தின் முடிவையே தலைகீழாக மாற்றின. அந்தப் போட்டிகள் குறித்து ஆராய்ந்து பார்ப்போம்.
இந்தியா – பாகிஸ்தான் (1986 – சார்ஜா)
இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி என்றாலே களத்தில் மட்டுமல்ல, ரசிகர்கள் மத்தியிலும் அனல் பறக்கும். அதுபோலதான் இந்தப் போட்டியும் அமைந்தது.
1986ஆம் ஆண்டு சார்ஜாவில் அவுஸ்திரேலியா–ஆசியக் கிண்ணப் போட்டிகள் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 245 ஓட்டங்களைக் குவித்தது.
மெதிவ்ஸ், சந்திமாலின் சேவையை எதிர்பார்க்கும் இலங்கையின் முன்னாள் வீரர்
2019ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக்..
246 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு பதிலெடுத்தாடிய பாகிஸ்தான் அணிக்கு ஜாவித் மியன்டாட் சதம் அடித்து அசத்தியிருந்தார். ஒரு புறத்தில் விக்கெட்டுகள் அடுத்தடுத்து வீழ்ந்தாலும் சளைக்காமல் இறுதிவரை ஆடுகளத்தில் மியன்டாட் இருந்தார்.
கடைசி ஓவர் கடைசிப் பந்தில் வெற்றிக்கு 4 ஓட்டங்கள் தேவைப்பட்டன. இந்திய வீரர் சேட்டன் சர்மா பந்து வீசினார். கடைசிப் பந்தை சேட்டன் சர்மா புல் – டோஸாக வீச, சரியான வாய்ப்பை எதிர்நோக்கி இருந்த மியன்டாட் அதை ‘ஸ்கெயார் லெக்‘ திசையில் அருமையான சிக்ஸராக மாற்றினார். யாருமே எதிர்பார்க்காத இந்த தருணத்தில், பாகிஸ்தான் அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியின் முடிவு பல ஆண்டுகளுக்கு இந்திய ரசிகர்களின் மனதில் நீங்காத வடுவாக அமைந்தது.
தென்னாபிரிக்கா – நியூசிலாந்து (1999 – நெப்பியர்)
நியூசிலாந்தின் நெப்பியர் நகரில் தென்னாபிரிக்கா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் போட்டி நடைபெற்றது. மழை காரணமாக போட்டி 40 ஓவர்களாகக் குறைக்கப்பட்டு தென்னாபிரிக்காவுக்கு 192 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதில் கடைசி ஓவரில் 11 ஓட்டங்கள் வெற்றிக்கு தேவைப்பட்டது. லேன்ஸ் குளூஸ்னர், மார்க் பவுச்சர் ஆகியோர் களத்தில் இருந்தனர்.
2ஆவது பந்தில் பவுச்சர் ஆட்டமிழந்ததால், ஆட்டம் பரபரப்பை எட்டியது. கடைசிப் பந்தில் வெற்றிக்கு 4 ஓட்டங்கள் தேவைப்பட்டது. நியூசிலாந்து வீரர் டியோன் நாஷ் வீசிய பந்தை லோங்–ஓன் திசையில் குளூஸ்னர் தூக்கி அடிக்க, அது சிக்ஸராக மாறியது. இறுதியில் தென்னாபிரிக்கா 2 விக்கெட்டினால் த்ரில் வெற்றி பெற்றது.
ஜிம்பாப்வே – பங்களாதேஷ் (2006 – ஹராரே)
ஹராரே நகரில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் பங்களாதேஷ் மோதியது. கடைசி இரு ஓவர்களில் 28 ஓட்டங்கள் ஜிம்பாப்வே அணியின் வெற்றிக்கு தேவைப்பட்டது. பிரென்டன் டெய்லர், தவான்டா முபாரிவா இருவரும் சேர்ந்து கடைசி ஓவருக்கு முன்னைய ஓவரில் 11 ஓட்டங்களைக் குவித்தனர்.
இதன்படி, கடைசி ஓவரில் 17 ஓட்டங்கள் வெற்றிக்கு தேவைப்பட்டன. பங்களாதேஷ் வீரர் மஷ்ரபி மோர்தசா பந்து வீசினார். கடைசி ஓவரின் 2ஆவது பந்தில் டெய்லர் அருமையான சிக்ஸர் அடித்தார். 5ஆவது பந்தில் முபாரிவா ரன் அவுட் ஆனார். இதனால், ஆட்டம் பரபரப்பின் உச்சத்துக்குச் சென்றது. கடைசி பந்தில், வெற்றிக்கு 5 ஓட்டங்கள் தேவைப்பட்டன. அதிரடியாக துடுப்பு மட்டையை சுழற்றிய டெய்லர் ‘மிட்விக்கெட்‘ திசையில் சிக்ஸர் அடித்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.
மேற்கிந்திய தீவுகள் – இலங்கை (2008 – டிரினிடாட்)
இலங்கை அணிக்கும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கும் இடையே டிரினிடாட்டில் நடைபெற்ற ஒரு நாள் போட்டியின் கடைசி ஓவரில் மேற்கிந்திய தீவுகளுக்கு வெற்றிக்கு 13 ஓட்டங்கள் தேவைப்பட்டன. இலங்கையின் அனுபவ வேகப்பந்து வீச்சாளரான சமிந்த வாஸ் இறுதி ஓவரை வீசினார்.
சந்தர்போலும், சுலமென் பென்னும் களத்தில் இருந்தனர். சந்தர்போல் மட்டும் அடித்து ஆடக்கூடியவர் என்பதால் அனைவரின் எதிர்பார்ப்பும் அவர் மீதே இருந்தது. சமிந்த வாஸ் தனது வேகப்பந்துவீச்சில் ஒவ்வொரு பந்திலும் ஓட்டங்களை விட்டுக்கொடுக்கவில்லை.
உடைமாற்றும் அறைக் கதவை உடைத்தவர் ஷகீப் அல் ஹஸன்
பங்களாதேஷுக்கு எதிராக இந்திய அணி கடைசி பந்தில்..
இதன்படி, கடைசி 2 பந்தில் 10 ஓட்டங்கள் தேவைப்பட்டன. 5ஆவது பந்தில் ‘மிட்–ஓப்‘ திசையில் சந்தர்போல் ஒரு பௌண்டரி அடித்து பரபரப்பை மேலும் அதிகரித்தார். கடைசி பந்தில் 6 ஓட்டங்கள் தேவைப்பட்டது. சிக்ஸர் அடித்தால் மட்டுமே வெற்றி என்கிற கட்டாய நிலை இருந்தது. சமிந்த வாஸ் புல்டோஸாக பந்தை வீச அதை ‘டீப் மிட் விக்கெட்டில்‘ அற்புதமாக சிக்ஸர் அடித்து ஆட்டத்தை வெற்றிகரமாக சந்தர்போல் முடித்துவைத்தார்.
தென்னாபிரிக்கா – நியூசிலாந்து (2013 – போட்செப்ஸ்ட்ரூம்)
தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய நியூசிலாந்து அணி 3-0 என்று ஒரு நாள் தொடரில் தோற்று வெளியேறிய போட்டித் தொடராக இது அமைந்தது.
தொடரின் இறுதி ஆட்டத்தில் தென்னாபிரிக்க அணி வெற்றி பெற கடைசி ஓவரில் 8 ஓட்டங்கள் தேவைப்பட்டன. அந்த அணிக்கு கைவசம் 2 விக்கெட்டுகள் இருந்தன. களத்தில் டேல் ஸ்டேன், ரயன் மெக்லரன் இருந்தனர். நியூசிலாந்து வீரர் ஜேம்ஸ் பிராங்க்ளின் இறுதி ஓவரை பந்துவீசினார்.
3 பந்துகளைச் சந்தித்த ஸ்டெயின் அதை வீணாக்கி, 5ஆவது பந்தில் ஆட்டமிழந்தார். இதனால், கடைசி பந்தில் 3 ஓட்டங்கள் தேவைப்பட்டது. தென்னாபிரிக்க ரசிகர்கள் அனைவரும் போட்டியில் வெற்றியை தீவிரமாக உற்று நோக்கியிருந்தனர். பிரங்க்ளின் வீசிய கடைசி பந்தை நேராக லோங் திசையில் தூக்கி சிக்ஸர் அடித்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார் மெக்லரன்.