LPL தொடருக்கான வீரர்கள் பதிவு ஆரம்பம்!

Lanka Premier League 2024

194
Lanka Premier League 2024

லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரில் விளையாடவுள்ள வெளிநாட்டு வீரர்கள் தங்களுடைய பெயர்களை விண்ணப்பிக்க முடியும் என இலங்கை கிரிக்கெட் சபை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இலங்கை கிரிக்கெட் சபையின் https://srilankacricket.lk/lpl-player-registration-portal/ இணையத்தளத்தின் ஊடாக வீரர்கள் தங்களுடைய பெயர்களை பதிவுசெய்ய முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

>>IPL தொடரில் விளையாட வியாஸ்காந்திற்கு வாய்ப்பு!<<

வெளிநாட்டு வீரர்கள் இரண்டு பிரிவுகளின் கீழ் தங்களுடைய பெயர்களை பதிவுசெய்துக்கொள்ள முடியும். சர்வதேச போட்டிகளில் விளையாடிய வீரர்கள் மற்றும் அறிமுகமாகாத வீரர்கள் என இரண்டு பிரிவுகளில் வீரர்கள் தங்களை பதிவுசெய்ய முடியும்.

அதேநேரம் முன்னாள் இலங்கை வீரர்கள் என்ற பிரிவில் ஓய்வுபெற்ற இலங்கை வீரர்கள் LPL தொடரில் விளையாட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போது சர்வதேசத்தில் நடைபெற்று வரும் லீக் போட்டிகளில் பங்கேற்கும் முன்னாள் இலங்கை வீரர்கள் LPL தொடரில் பங்கேற்க முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வீரர்கள் தங்களுடைய பெயர்களை எதிர்வரும் ஏப்ரல் 26ம் திகதி இரவு 12.00 மணிக்கு முன்னர் https://srilankacricket.lk/lpl-player-registration-portal/ என்ற இணையத்தளத்தில் பதிவுசெய்ய வேண்டும் என இலங்கை கிரிக்கெட் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

LPL தொடரானது எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி முதல் 21ம் திகதிவரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<