Home Tamil த்ரில் வெற்றியோடு இறுதிப் போட்டிக்கு தெரிவான ஜப்னா கிங்ஸ்

த்ரில் வெற்றியோடு இறுதிப் போட்டிக்கு தெரிவான ஜப்னா கிங்ஸ்

Lanka Premier League 2024

2
Lanka Premier League 2024

த்ரில்லராக நடைபெற்று முடிந்திருக்கும் ஜப்னா கிங்ஸ் மற்றும் கண்டி பல்கோன்ஸ் இடையிலான லங்கா பிரீமியர் லீக் (LPL T20) 2024ஆம் ஆண்டு தொடரின் இரண்டாவது குவாலிபையர் போட்டியில் ஜப்னா கிங்ஸ் 01 ஓட்டத்தினால் வெற்றி பெற்றுள்ளது.

>>

மேலும் இந்த அசத்தல் வெற்றியோடு ஜப்னா கிங்ஸ் LPL T20 தொடரின் இறுதிப் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை (21) கோல் மார்வல்ஸை எதிர்த்தாடும் வாய்ப்பினையும் பெற்றிருக்கின்றது. அதேநேரம் இப்போட்டியில் தோல்வியடைந்த LPL T20 தொடரின் நடப்புச் சம்பியன்களான கண்டி பல்கோன்ஸ் தொடரில் இருந்து வெளியேறுகின்றது.

LPL T20 தொடரின் இரண்டாவது குவாலிபையர் மோதல் கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச அரங்கில் இடம்பெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற கண்டி வீரர்கள் முதலில் களத்தடுப்பினை தெரிவு செய்தனர்.

இதன்படி முதலில் துடுப்பாடிய ஜப்னா கிங்ஸ் அணியானது 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 187 ஓட்டங்கள் பெற்றது. ஜப்னா கிங்ஸ் துடுப்பாட்டத்தில் அபாரம் காட்டிய குசல் மெண்டிஸ் தன்னுடைய கன்னி T20 சதத்தோடு வெறும் 54 பந்துகளில் 12 பௌண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கலாக 105 ஓட்டங்களை ஆட்டமிழக்காது பெற்றார்.

கண்டி பல்கோன்ஸ் பந்துவீச்சில் சதுரங்க டி சில்வா, மொஹமட் ஹஸ்னைன் மற்றும் ரமேஷ் மெண்டிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சுருட்டினர்.

>>டில்சான் மதுசங்கவுக்கு அபராதம்!

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 188 ஓட்டங்களை அடைய பதிலுக்கு ஆடிய கண்டி பல்கோன்ஸ், ஜப்னா கிங்ஸ் அணியின் சுழல்பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் தடுமாறியிருந்தது.

எனினும் அவ்வணிக்கு பின்வரிசை துடுப்பாட்டத்தில் கைகொடுத்த ரமேஷ் மெண்டிஸ் இறுதி வரை போராடிய போதிலும் அந்த ஆட்டமும் கைகொடுக்காமல் போக கண்டி பல்கோன்ஸ் அணியானது 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 186 ஓட்டங்களுடன் போட்டியில் ஒரு ஓட்ட வித்தியாசத்தில் தோல்வியினைத் தழுவியது.

கண்டி அணியின் துடுப்பாட்டத்தில் ரமேஷ் மெண்டிஸ் 11 பந்துகளுக்கு 2 சிக்ஸர்கள் மற்றும் 3 பௌண்டரிகள் அடங்கலாக 30 ஓட்டங்கள் ஓட்டங்கள் எடுத்திருந்தார். மறுமுனையில் கமிந்து அன்ட்ரே பிளச்சர் கண்டி தரப்பில் 21 பந்துகளுக்கு 38 ஓட்டங்கள் பெற்று தனது தரப்பில் கூடுதல் ஓட்டங்களைப் பதிவு செய்தார்.

ஜப்னா கிங்ஸ் அணியின் பந்துவீச்சில் பேபியன் அலன் 4 விக்கெட்டுக்களையும், வியாஸ்காந்த் விஜயகாந்த 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றி தமது தரப்பு வெற்றியினை உறுதி செய்தனர். போட்டியின் ஆட்டநாயகனாக குசல் மெண்டிஸ் தெரிவானார்.

போட்டியின் சுருக்கம்

Upcoming


Jaffna Kings

Kandy Falcons



>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<