பில் சிம்மன்சின் ஒப்பந்தத்தை நீடிக்கும் பங்களாதேஷ்!

Bangladesh Cricket

50
Phil Simmons

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக 2027ம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக்கிண்ணம் வரை பில் சிம்மன்ஸ் செயற்படுவார் என அந்த அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. 

முன்னாள் மேற்கிந்திய தீவுகள் வீரரான பில் சிம்மன்ஸ் நடைபெற்று முடிந்த சம்பியன்ஷ் கிண்ணத் தொடர் வரை இடைக்கால பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார். 

>>ஐசிசி நடுவர்கள் குழாத்தில் இரண்டு புதுமுகங்கள்<<

எனினும் இவருடைய ஒப்பந்தக்காலத்தை எதிர்வரும் 2 ஆண்டுகளுக்கு நீடிப்பதற்கு பங்களாதேஷ் கிரிக்கெட் தீர்மானித்துள்ளது. 

பில் சிம்மன்சின் பயிற்றுவிப்பில் பங்களாதேஷ் அணி சிறந்த முடிவுகளை பெற்றிருக்கவில்லை. மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக ஒரு டெஸ்ட் மற்றும் ஒரு T20I தொடரை வென்றிருந்தது. எனினும் சம்பியன்ஷ் கிண்ணத் தொடரில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளிடம் தோல்வியுற்று தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டிருந்தது. 

எனினும் பங்களாதேஷ் கிரிக்கெட் அணிக்கான எதிர்கால திட்டங்களை கவனத்தில் கொண்டு அவரின் பயிற்றுவிப்பு காலம் நீடிக்கப்பட்டுள்ளது. பில் சிம்மன்ஸ் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் சந்திக்க ஹதுருசிங்க பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட பின்னர் பங்களாதேஷ் அணியின் இடைக்கால பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

>>மேலும்கிரிக்கெட்செய்திகளைப்படிக்க<<