மேற்கிந்திய கிரிக்கட் பயிற்சியாளர் பணி நீக்கம்

2033
Phil Simmons

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கட் அணியின் பயிற்சியாளராக பிலிப் சிம்மன்ஸ் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் அவரை நேற்று அப்பதவியில் இருந்து மேற்கிந்திய தீவுகள் கிரிக்கட் சபை விடுவித்துள்ளது.

அணியில் புதிய அணுகுமுறை புகுத்த வேண்டும் என்று மேற்கொள் காட்டி இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மேற்கிந்திய தீவுகள் கிரிக்கட் சபை தெரிவித்துள்ளது. மேலும் பிலிப் சிம்மன்ஸ் அளித்த பங்களிப்புக்கு நன்றியும் தெரிவித்து இருக்கிறது.

சமீபகாலத்தில் நடந்த இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை மேற்கிந்திய தீவுகள் அணி தன் சொந்த மண்ணில் இழந்து இருந்தது. சிம்மன்ஸ் பயிற்சியின் கீழ் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கட்  அணி ஏப்ரல் மாதம் இந்தியாவில் நடைபெற்று முடிவடைந்த 20 ஓவர் உலகக் கிண்ணத்தை கைப்பற்றி இருந்தது.

அடுத்த வாரம் செப்டம்பர் 23ஆம் திகதி பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் தலா 3 போட்டிகளைக் கொண்ட டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.

இதில் பாகிஸ்தான் அணியின் முன்னணி ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் 35 வயதான முஹமத் ஹபீஸ் பங்குகொள்ளமாட்டார் என்று கூறப்பட்டுள்ளது. முஹமத் ஹபீஸிற்கு இங்கிலாந்து தொடரின் போது காலில் காயம் ஏற்பட்டது. இதனால் முதல் ஒருநாள் போட்டியுடன் பாகிஸ்தான் திரும்பினார். தற்போது எதிர்வரும்   30ஆம் திகதி முதல் ஒக்டோபர், மாதம் 5ஆம் திகதி வரை மேற்கிந்திய தீவுகள் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் ஒருநாள் தொடர் இடம் பெற உள்ளது.

முடிவுக்கு வருகிறது அப்ரிடியின் கிரிக்கட் வாழ்க்கை

இந்த தொடருக்கான பாகிஸ்தான் அணியில் முஹமத் ஹபீஸ் சேர்க்கப்படவில்லை. அவரது காயம் குணமடைய குறைந்தது மூன்று வாரங்கள் ஆகும் என்பதால் பாகிஸ்தான் கிரிக்கட் சபை இந்த முடிவை எடுத்துள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கட் சபையின் மருத்துவக்குழு வைத்தியர்  முஹமத் ரியாஸ் கூறுகையில் ‘‘தேசிய கிரிக்கட் அகடமியில் ஹபீஸின் காயம் குணமடைவதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் முழுவதும் குணமடைய இன்னும் மூன்று வாரங்கள் ஆகும்’’ என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் ஹபீஸின் பந்து வீச்சு .சி.சி.யின் விதிமுறைக்கு மாறாக இருப்பதாகக் கூறி கடந்த ஜூலை மாதம் முதல் 12 மாதங்கள் சர்வதேச போட்டிகளில் பந்து வீச்சுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்குள் அவர் தன்னுடைய பந்து வீச்சை சரி செய்து கொள்ள வேண்டும். ஆனால், பந்து வீச்சை சரி செய்து கொள்ளும் முயற்சிக்கான அவரது செயற்பாடுகள் திருப்திகரமாக இல்லை. பந்து வீச்சு இல்லாமல் அவரை அணியில் வைத்துக்கொள்ள பாகிஸ்தான் கிரிக்கட் சபை விரும்பவில்லை. இதனால் 35 வயதாகும் அவரது எதிர்கால கிரிக்கட் வாழ்க்கை கேள்விக்குறியாக உள்ளது.

இதேவேளை இந்திய கிரிக்கட் அணியின் இயக்குனராக ரவி சாஸ்திரி இருந்த காலத்தில் துடுப்பாட்ட பயிற்சியாளராக சஞ்சய் பாங்கரும், களத்தடுப்பு பயிற்சியாளராக ஆர். ஸ்ரீதரும் இருந்தனர். இந்தியாவில் நடைபெற்ற டி20 உலகக் கிண்ண தொடருடன் அவர்களது பதவிக்காலம் முடிவடைந்தது.

இந்திய கிரிக்கட் அணியின் இயக்குனராக இருந்த ரவி சாஸ்திரியின் இயக்குனர்  பதவியை பி.சி.சி.. நீடிக்க விரும்பவில்லை. அதனால் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு ரவி சாஸ்திரி முயற்சி செய்தார். ஆனால், அனில் கும்ப்ளே அவரை பின்னுக்குத் தள்ளி அந்தப் பதவியைப் பெற்றார். துடுப்பாட்ட பயிற்சியாளராக பாங்கர் மீண்டும் நியமிக்கப்பட்டார்.

ஆனால், களத்தடுப்பு பயிற்சியாளராக ஆர். ஸ்ரீதரின் பதவிக்காலம் நீட்டிக்கப்படவில்லை. இந்திய அணி சிம்பாப்வே மற்றும் மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. இந்த இரண்டு தொடருக்கும் தற்காலிகமாக அபேய் ஷர்மா களத்தடுப்பு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.

22ஆம் திகதி இந்தியாநியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. இதற்கிடையில் இந்தியாஅணி அவுஸ்திரேலியாவில் விளையாடி வருகிறது. ஸ்ரீதர் இந்தியாஅணியின் களத்தடுப்பு பயிற்சியாளராக சென்றுள்ளார். அவரை உடனடியாக இந்தியா வந்து இந்திய அணியில் சேர்ந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அனில் கும்ப்ளே தலைமைப் பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டதும், களத்தடுப்பு பயிற்சியாளராக ஸ்ரீதரை வைத்துக் கொள்ள விரும்பினார். இதனால் ஸ்ரீதரை தொடர்பு கொண்டு, ‘‘மேற்கிந்திய தீவுகள் தொடர் முடிந்த பின்னர் தங்களுக்கு அழைப்பு வரும். தயாராக இருக்க வேண்டும்’’ என்று கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனடிப்படையில்தான் ஸ்ரீதரை இந்திய அணியில் இணைந்து கொள்ளும்படி கேட்டுக்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இருந்தாலும் அவரது பதவிக்காலம் ஒப்பந்தம் குறித்து விரிவான செய்தி ஏதும் கசியவில்லை.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்