கொல்கத்தா நைட் ரைடர்ஷ் அணியில் இணையும் இங்கிலாந்து வீரர்

187
Phil Salt

இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரின் கொல்கத்தா நைட் ரைடர்ஷ் அணியில் இணைக்கப்பட்டிருந்த இங்கிலாந்து வீரர் ஜேசன் ரோய் அணியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். 

ஜேசன் ரோய் தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த முறை IPL தொடரில் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

>> ICC இன் அபாரதத்தினைப் பெறும் பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்

ஜேசன் ரோய் அணியிலிருந்து விலகியுள்ள நிலையில், அவருக்கு பதிலாக மற்றுமொரு இங்கிலாந்து துடுப்பாட்ட வீரர் பில் சோல்ட் அணியில் இணைக்கப்பட்டுள்ளார். 

இங்கிலாந்து அணியின் விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரரான பில் சோல்ட் இறுதியாக கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட T20I தொடரில் விளையாடியிருந்தார். 

குறித்த தொடரில் இரண்டு சதங்களை விளாசியிருந்த இவர், இங்கிலாந்து அணிக்காக வேகமான T20I சதத்தை பதிவுசெய்து, 331 ஓட்டங்களை விளாசியிருந்தார். இந்த இன்னிங்ஸ்கள் இரண்டும் IPL ஏலத்தை தொடர்ந்து இவர் பெற்றுக்கொண்டதால், அணி உரிமையாளர்களின் கவனத்தை இவரால் ஈர்க்க முடியவில்லை. 

எவ்வாறாயினும் தற்போது கொல்கத்தா நைட் ரைடர்ஷ் அணியில் இவர் இணைக்கப்பட்டுள்ளதுடன், அவருக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த 1.5 கோடி ரூபா தொகை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<