45வது கோபா அமெரிக்கக் கிண்ண கால்பந்து போட்டி அமெரிக்காவில் நடைபெற்றுவருகிறது. நேற்று நடந்த முதல் கால் இறுதி ஆட்டத்தில் அமெரிக்கா 2–1 என்ற கோல் கணக்கில் ஈக்வடாரை வீழ்த்தியது.
2வது கால் இறுதி ஆட்டம் இன்று அதிகாலை நடைபெற்றது. இதில் கொலம்பியா – பேரு அணிகள் மோதின.
இரு அணிகளும் அபாரமாக விளையாடியது. நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிடம் வரை இரு அணிகளும் கோல் எதுவும் போடவில்லை.
இதனால் வெற்றி – தோல்வியை நிர்ணயம் செய்ய “பெனால்டி ஷூட்” கடைப்பிடிக்கப்பட்டது. இதில் கொலம்பியா 4–2 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
கொலம்பியா அணியில் ரோட்ரிக்ஸ், குடார்டோ, மொரினோ, பெரஸ் ஆகியோர் பெனால்டி ஷூட்டில் கோல் அடித்தனர். பேரு அணியில் ராய்டாஸ், தபியா ஆகியோர் கோல் அடித்தனர். டிராக்கோ, கிறிஸ்டிமன் குய்வா ஆகியோர் வாய்ப்பைத் தவறவிட்டனர். கொலம்பியா கோல்கீப்பர் டேவிட் ஒஸ்பானியா அபாரமாக செயல்பட்டு பந்தைத் தடுத்தார்.
இந்த வெற்றி மூலம் கொலம்பியா அணி அரை இறுதிக்குத் தகுதிபெற்றது. மெக்சிகோ – சிலி இடையே நடைபெறும் ஆட்டத்தில் வெல்லும் அணியுடன் கொலம்பியா அரை இறுதி யில் மோதும்.
பேரு அணி லீக் ஆட்டத்தில் 8 முறை சாம்பியனான பிரேசிலை வெளியேற்றி இருந்தது.
நாளை நடைபெறும் கால்இறுதி ஆட்டங்களில் அர்ஜென்டினா– வெனிசூலா, மெக்சிகோ – சிலி அணிகள் மோதுகின்றன.
மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்