அவுஸ்திரேலிய அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தில் இலங்கை கிரிக்கெட் அணியின் 5ஆம் இலக்க துடுப்பாட்ட வீரராக களம் வந்த குசல் பெரேரா பெளன்சர் பந்து ஒன்றின் மூலம் தாக்கப்பட்டதை அடுத்து தலை உபாதை தொடர்பான கட்டாய பரிசோதனைக்கு முகம் கொடுத்திருக்கின்றார்.
அவுஸ்திரேலிய டெஸ்ட் போட்டியில் தொடர்ந்தும் விளையாட முடியும் – திமுத் கருணாரத்ன
அவுஸ்திரேலிய அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது பெளன்சர் பந்து …
இலங்கை அணியின் முதல் இன்னிங்ஸில் தனன்ஞய டி சில்வாவுடன் இணைந்து துடுப்பாடிக் கொண்டிருந்த போது அவுஸ்திரேலிய வீரர் ஜை றிச்சார்ட்ஸன் வீசிய பெளன்சர் பந்து குசல் பெரேராவின் தலைக்கவசத்தினை தாக்கியது.
பந்து தாக்கியவுடன் பெரேராவின் தலைக்கவசத்தில் இருந்த இதர உதிரிப்பாகங்கள் கீழே விழுந்தது. எனினும், குசல் பெரேரா திடமாகவே இருந்திருந்தார். இதனை அடுத்து உடனடியாக இலங்கையின் உடற்பயிற்சி உதவியாளர் குசல் பெரேராவினை பரிசோதனை செய்தார். பரிசோதனைகளில் குசல் பெரேரா நல்லபடியாக இருப்பது போன்று தோன்றியது. பெரேராவும் தொடர்ந்து விளையாட அனுமதிக்கப்பட்டிருந்தார்.
ஆனால், மேலதிக பந்துகள் சிலவற்றை எதிர்கொண்ட பின்னர் பெரேரா தடுமாற்றம் ஒன்றை காண்பிக்க தொடங்கினார். இதனால் அவருக்கு தொடர்ந்து துடுப்பாட முடியாத நிலை உருவாகியதுடன் பதில் வீரர் ரொஷேன் சில்வாவுடன் இணைந்து மைதானத்தினை விட்டும் வெளியேறினார்.
இதனை அடுத்து குசல் பெரேராவிற்கு பதிலாக வேறு துடுப்பாட்ட வீரர் இலங்கை அணியின் துடுப்பாட்ட இன்னிங்ஸை தொடர இலங்கை அணி அதிகாரி ஒருவர் குசல் பெரேரா தலை உபாதை தொடர்பான கட்டாய பரிசோதனைக்கு முகம் கொடுக்கபோகின்றார் என்பதை அவுஸ்திரேலிய அணியிடம் உறுதி செய்திருந்தார்.
கனிஷ்ட கிரிக்கெட் தெரிவுக் குழுவில் பர்விஸ் மஹ்ரூப்புக்கு முக்கிய பதவி
இலங்கை கிரிக்கெட் ஆலோசனைக் குழுவின் பரிந்துரைக்கு அமைய இலங்கை கனிஷ்ட …
இந்த சம்பவங்களின் பின்னர் குசல் பெரேராவின் உடல்நிலை குறித்து தற்போது கிடைத்திருக்கும் தகவல்களின்படி அவர் நல்ல முன்னேற்றம் ஒன்றினை காட்டி வருவதாக அறியக்கிடைக்கின்றது.
எனினும், குசல் பெரேரா இலங்கை அணியின் முதல் இன்னிங்ஸிற்காக மீண்டும் துடுப்பாட களம் வரவில்லை. அதோடு, அவுஸ்திரேலிய அணி அவர்களது இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பாடும் போதும் களத்தடுப்பில் ஈடுபட அவர் வந்திருக்கவில்லை.
எனினும், குசல் பெரேரா இலங்கை அணியின் இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பாட வரலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேநேரம், குசல் பெரேராவிற்கு முன்னதாக, அவுஸ்திரேலிய அணியுடனான இதே டெஸ்ட் போட்டியில் பேட் கம்மின்ஸின் பெளன்சர் பந்து ஒன்றினை சந்தித்த திமுத் கருணாரத்ன, குறித்த பெளன்சர் பந்தின் உபாதை ஆபத்துகளிலிருந்து தப்பித்து இன்றைய டெஸ்ட் போட்டியில் மீண்டும் துடுப்பாடியமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<