அறிமுக வீரர்களை மேற்கிந்திய தீவுகள் தொடரில் களமிறக்கும் இங்கிலாந்து

22
Pennington, Jamie Smith picked for West Indies Tests

அறிமுக வீரர்களான டில்லோன் பென்னிங்டன் மற்றும் ஜேமி ஸ்மித் ஆகிய வீரர்களை இங்கிலாந்து கிரிக்கெட் அணியானது மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் இணைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

>>இந்திய கிரிக்கெட் அணியின் மற்றுமொரு நட்சத்திரம் ஓய்வு<<

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் மேற்கிந்திய தீவுகள் அணியானது அங்கே மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடவிருக்கின்றது. இதில் முதல் போட்டி இம்மாதம் 10ஆம் திகதி ஆரம்பமாகவிருக்கும் நிலையில், இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் ஆடும் இங்கிலாந்தின் 14 பேர் அடங்கிய வீரர்கள் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது 

அந்தவகையில் அறிவிக்கப்பட்டிருக்கும் வீரர்கள் குழாத்திலேயே அறிமுக வீரர்களான டில்லோன் பென்னிங்டன் மற்றும் ஜேமி ஸ்மித் ஆகிய வீரர்கள் இணைக்கப்பட்டிருக்கின்றனர். இந்த வீரர்களில் டில்லோன் பென்னிங்டன் வேகப்பந்துவீச்சாளர் என்பதோடு அவர் அண்மையில் நடைபெற்று முடிந்த உள்ளூர் கவுண்டி தொடரில் நொட்டிங்கம்ஷைர் அணிக்காக 29 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது 

மறுமுனையில் ஜேமி ஸ்மித் விக்கெட்காப்புத் துடுப்பாட்டவீரர் என்பதோடு அவர் அண்மைய உள்ளூர் தொடரில் 50.70 என்கிற சராசரியோடு 507 ஓட்டங்களை குவித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து அணியானது பென் போக்ஸ் மற்றும் ஜொன்னி பெயர்ஸ்டோவ் ஆகிய வீரர்களுக்கு மேற்கிந்திய தீவுகள் தொடரில் ஓய்வு வழங்கியிருக்கும் நிலையில் ஜேமி ஸ்மித் டெஸ்ட் அறிமுகம் பெறுவார் எனக் கூறப்பட்டிருக்கின்றது 

>>LPL தொடரை ஆரம்பித்து வைக்கவுள்ள சமரி அதபத்து!<<

இந்திய டெஸ்ட் சுற்றுப்பயணத்தில் காணப்பட்டிருந்த வீரர்களான டொம் ஹார்ட்லி, ஒல்லி ரொபின்சன், ஜேக் லீச் மற்றும் மார்க் வூட் ஆகிய வீரர்களுக்கும் மேற்கிந்திய தீவுகள் தொடரில் ஓய்வு வழங்கப்பட்டிருக்கும் நிலையில் சோஹைப் பாஷீர் தொடர்ந்தும் அணியில் நீடிக்கின்றார் 

அதேநேரம் இங்கிலாந்து அணி லோர்ட்ஸில் நடைபெறும் மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் மாத்திரம் முன்னணி வேகப்பந்துவீச்சாளரான ஜேம்ஸ் அன்டர்சனுக்கு வாய்ப்பு வழங்கியிருக்கின்றது. அத்துடன் இது அவரது இறுதி சர்வதேச போட்டியாக இருக்கும் எனவும் கூறப்பட்டிருக்கின்றது 

அதேவேளை மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டிக்கான இங்கிலாந்து குழாம் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது 

இங்கிலாந்து குழாம் 

பென் ஸ்டோக்ஸ் (தலைவர்), ஜேம்ஸ் அன்டர்சன் (முதல் போட்டி மாத்திரம்), கஸ் அட்கின்ஸன், சோஹைப் பாஷீர், ஹர்ரி புரூக், ஷேக் கிராவ்லி, ஜோ ரூட், பென் டக்கட், டேன் லோரன்ஸ், டில்லோன் பென்னிங்டன், ஒல்லி போப், மெதிவ் பொட்ஸ், ஜேமி ஸ்மித், கிறிஸ் வோக்ஸ் 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<