புத்தளம் விம்பில்டன் மற்றும் கல்பிட்டி பேல்ஸ் கழகங்களின் 20 வயதிற்குட்பட்ட அணிகளுக்கிடைலான சினேக பூர்வ போட்டி கல்பிட்டி அல்- அக்ஸா தேசிய பாடசாலை மைதானத்தில் முழுமையாக 50 நிமிடங்கள் கொண்ட போட்டியாக இடம்பெற்றது. இப் போட்டியில் பலம் மிக்க விம்பில்டன் 20 வயதிற்குட்பட்ட அணியினரை 1-0 என்ற கோல் அடிப்படையில் பேல்ஸ் 20 வயதிற்குட்பட்ட அணியினர் வீழ்த்தினர்.
இரண்டாம் பாதியில் போராடி வென்றது ட்ரிபல் செவன் அணி
புத்தளம் உதைப்பந்தாட்ட லீக் பெருமையோடு ஏற்பாடு செய்து நடாத்திக்கொண்டிருக்கின்ற…
ஆட்டம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து பந்து பேல்ஸ் வீரர்களின் கால்களிலே காணப்பட போட்டியின் ஆரம்பத்திலிருந்தே விம்பில்டன் கழகத்திற்கு பந்தினைப் பெற போராட வேண்டி ஏற்பட்டது.
போட்டியின் 4வது நிமிடத்தில் பேல்ஸ் கழகத்தின் தடுப்பு வீரர் இம்தாத் கொடுத்த நேர்த்தியான பந்துப் பரிமாற்றத்தைப் பெற்ற ஸஜாத் விம்பில்டனின் இரண்டு தடுப்பு வீரர்களையும் கடந்து கம்பத்திற்குள் பந்தினை உட்செலுத்த தன் கோல் கணக்கினை ஆரம்பித்து முன்னிலை பெற்றது பேல்ஸ் கழகம்.
தொடர்ந்து போட்டியில் 13ஆவது நிமிடத்தில் விம்பில்டன் வீரர் அல்தாப் கொடுத்த பந்தினை சிபான் கம்பம் நோக்கி அடிக்க பந்து பேல்ஸ் அணியின் தடுப்பு வீரரில் பட்டு வெளியேற அந்த முயற்சி வீணானது.
ஆட்டத்தின் 17வது நிமிடத்தில் பேல்ஸ் கழகத்தின் இஸ்ரத் கொடுத்த இலகு கோல் வாய்ப்பிற்கான பந்துப் பரிமாற்றத்தை ஹஸீப் தவறவிட கை நழுவிப் போணது வாய்ப்பு.
மேலும் 22வது நிமிடத்தில் விம்பில்டன் அணிக்குக் கிடைத்த ப்ரீ கிக் வாய்ப்பை சிஸான் கம்பம் நோக்கி உயர்த்தி அடிக்க அதை இலகுவாகப் பிடித்துக் கொண்டார் இம்தாத்.
முதற் பாதியின் இறுதி முயற்சியாக நஸ்ரான் பந்தினை கம்பம் நோக்கி உயர்த்தி அடிக்க அதை ஸஜாத் தலையால் முட்டி கோலாக்க முயல விம்பில்டனின் தடுப்பு வீரர்கள் அதை தடுத்து பந்தை வெளியேற்ற தோல்வியில் முடிந்தது பேல்ஸ் அணியின் முயற்சி.
முதல் பாதி: பேல்ஸ் விளையாட்டுக் கழகம் 1-0 விம்பில்டன் விளையாட்டுக் கழகம்.
முதல் பாதி முன்னிலையை தக்கவைத்துக் கொள்ளும் நோக்கோடு பேல்ஸ் கழகம் களமிறங்க இரண்டாம் பாதியில் பேல்ஸ் கழகத்திற்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்ற நோக்கோடு விம்பில்டன் களம் கண்டது.
பாடசாலை கால்பந்து சம்பியன்ஷிப் தொடர் செப்டம்பர் முதலாம் வாரம் ஆரம்பம்
இலங்கை பாடசாலைகள் கால்பந்து சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்படும் 18 வயதுக்கு…
இரண்டாம் பாதி ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து பந்தினை தன் வசப்படுத்திக் கொண்டது விம்பில்டன் கழகம்.
ஆட்டத்தின் 30வது நிமிடத்தில் கிடைத்த கோர்ணர் கிக் வாய்ப்பினை சிஸான் கம்பம் நோக்கி அடிக்க அதை சிறப்பாகச் செயல்பட்ட இம்தாத் பற்றிக் கொள்ள விம்பில்டனின் மற்றொரு கோல் முயற்சி வீணானது.
மீண்டும் 34வது நிமிடத்தில் சிஸான் கொடுத்த பந்துப் பரிமாற்றத்தைப் பெற்ற சயால் பேல்ஸ் அணியின் தடுப்பு வீரர்களை கடந்து கம்பம் நோக்கி பந்தை கொண்டுசெல்ல துள்ளியமாக செயற்பட்ட இம்தாத் பந்தினை பாய்ந்து பிடித்தார்.
ஆட்டத்தின் 40வது நிமிடத்தில் பேல்ஸின் ஹப்ரத் கொடுத்த பந்தினை ஸஜாத் பெற்று கம்பம் நோக்கி உதைக்க நவீத் அதை இலகுவாக பிடித்துக்கொண்டார்.
இரு கழகங்களும் மாறி மாறி கம்பம் நோக்கி பந்தினை கொண்டு சென்று கோலாக நிறைவு செய்ய எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன.
ஆட்டத்தின் இறுதி நிமிட இறுதி முயற்சியாக விம்பில்டன் வீரர் சிஸான் பந்தினை நிஸாத்திடம் கொடுக்க அதை நிஸாத் கம்பம் திருப்ப இலகுவாக வந்த பந்தை இம்தாத் பிடித்துக்கொண்டார். எனவே, விம்பில்டனின் இறுதி முயற்சி தோல்வியில் முடிந்தது.
போட்டி நிறைவு பெற்றதாக நடுவர் அறிவிக்க பலம்மிக்க விம்பில்டனின் போராட்டம் வீண் போக முதற்பாதியின் ஆரம்பத்தில் போட்ட கோலினால் 1 – 0 என போராடி வென்றது பேல்ஸ் கழகம்.
முழு நேரம்: பேல்ஸ் விளயாட்டுக் கழகம் 1-0 விம்பில்டன் விளையாட்டுக் கழகம்.
கோல் பெற்றவர்கள்
பேல்ஸ் விளையாட்டுக் கழகம் – ஸஜாத் 4’