சம்பியன்ஸ் கிண்ணத் தொடருக்கான மைதானங்களை PCB பரிந்துரை

145
PCB proposes three venues for 2025 Champions Trophy

2025ஆம் ஆண்டு சம்பியன்ஸ் கிண்ண ஒருநாள் தொடர் பாகிஸ்தானில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் நிலையில் குறித்த தொடரினை தமது நாட்டில் நடாத்த மூன்று மைதானங்களை அந்த நாட்டு கிரிக்கெட் சபை (PCB) பரிந்துரை செய்துள்ளது.

>> பாகிஸ்தான் அணிக்கு இரு புதிய பயிற்சியாளர்கள் நியமனம்

சம்பியன்ஸ் கிண்ணத் தொடர் அடுத்த ஆண்டின் பெப்ரவரி மாத இடைவெளியில் நடாத்த திட்டங்கள் முன்வைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.   

இந்த நிலையில் தொடரினை நடாத்தும் அதிகாரம் கொண்டிருக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை லாஹூர், கராச்சி மற்றும் ராவல்பிண்டி ஆகிய இடங்களை சம்பியன்ஸ் கிண்ணத் தொடருக்கான மைதானங்களாக பரிந்துரை செய்திருக்கின்றது 

சுமார் 30 ஆண்டுகளின் பின்னர் பாகிஸ்தானில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள .சி.சி. இன் கிரிக்கெட் தொடராக சம்பியன்ஸ் கிண்ணத் தொடர் நடைபெறுகின்றது. அந்த நாட்டில் இறுதியாக நடைபெற்ற .சி.சி. இன் கிரிக்கெட் தொடர் 1996ஆம் ஆண்டிற்கான ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ணமாகும் 

இம்முறை சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்கவிருப்பதோடு குறிப்பிட்ட தொடர் சுமார் 2 வாரங்கள் வரை இடம்பெறும் எனக் கூறப்படுகின்றது 

அதேநேரம் இந்த தொடருக்கு தகுதி பெற்றிருக்கும் நாடுகளில் ஒன்றான இந்தியா தொடரில் பங்கேற்பதில் சந்தேகமும் காணப்படுகின்றது. இரு நாடுகள் இடையே நிலவும் அரசியல் குளறுபடிகள் இதற்கான காரணமாக குறிப்பிடப்படுகின்றது 

இறுதியாக நடைபெற்ற ஆசியக் கிண்ணத் தொடரினை தமது நாட்டில் நடாத்தும் உரிமையினை பாகிஸ்தான் கொண்டிருந்த போதிலும் இந்தியா பாகிஸ்தான் செல்ல மறுத்ததன் காரணமாக குறிப்பிட்ட தொடர் இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும் 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<