பக்கார் சமானிடம் விளக்கம் கோரியுள்ள பாக். கிரிக்கெட் சபை (PCB)

Pakistan Cricket Board

66
Pakistan Cricket Board

பாகிஸ்தான் கிரிக்கெட் சபை (PCB), பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்வரிசை வீரரான பக்கார் சமான் தனது சக வீரர் பாபர் அசாம் தொடர்பில் சமூக வலைதளத்தில் வெளியிட்ட கருத்திற்கு விளக்கம் கோரியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

>>அசத்தல் வெற்றியுடன் மே.இ.தீவுகள் T20 தொடரை சமநிலை செய்த இலங்கை<<

பாகிஸ்தான் டெஸ்ட் அணியில் காணப்பட்ட அனுபவமிக்க துடுப்பாட்டவீரரான பாபர் அசாம் தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வந்த மோசமான ஆட்டம் காரணமாக தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்துபாகிஸ்தான் டெஸ்ட் தொடரில் இருந்து அதிரடியான முறையில் நீக்கப்பட்டிருந்தார் 

இந்த நிலையில் பாபர் அசாம் பாகிஸ்தான் டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட்டது தொடர்பில், பாகிஸ்தான் கிரிக்கெட் தெரிவுக்குழுவினை பக்கார் சமான் சமூக வலைதளமான  X (Twitter) ஊடாக விமர்சித்திருந்தார். இந்த விமர்சனமே பக்கார் சமானிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை விளக்கம் கோர காரணமாக அமைந்திருக்கின்றது 

தற்போது பக்கார் சமானிற்கு தனது விமர்சன நிலைப்பாடு தொடர்பில் விளக்கம் வழங்க பாகிஸ்தான் கிரிக்கெட் சபையினால் 7 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது 

அதேநேரம் பக்கார் சமான் இதற்கு முன்னதாக தனக்கு வெளிநாட்டு T20 லீக் தொடர்களில் விளையாட ஆட்சேபனையற்ற மனு வழங்காததன் (NOC) காரணமாக தனது அதிருப்தியினை வெளியிட்டிருந்ததும் சுட்டிக்காட்டத்தக்கது 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<