GLT20 தொடரில் பாகிஸ்தான் வீரர்கள் ஆட தடை

1

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வீரர்கள் கனடாவின் குளோபல் லீக் T20 (GLT20) தொடரில் விளையாட அந்த நாட்டு கிரிக்கெட் சபை ஆட்சேபனையற்ற சான்றிதழ் (NOC) வழங்க மறுப்புத் தெரிவித்துள்ளது.

>>இன்னிங்ஸ் தோல்வியுடன் டெஸ்ட் தொடரினை இழந்த இலங்கை இளம் கிரிக்கெட் அணி

இதன் காரணமாக குளோபல் லீக் T20 தொடரின் புதிய பருவத்திற்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட பாகிஸ்தான் வீரர்களான பாபர் அசாம், மொஹமட் ரிஸ்வான் மற்றும் சஹீன் அப்ரிடி ஆகிய வீரர்களுக்கு குறிப்பிட்ட தொடரில் ஆட முடியாத நிலை உருவாகியிருக்கின்றது.

பாகிஸ்தான் கிரிக்கெட் சபை பாகிஸ்தான் விளையாடவிருக்கும் சர்வதேச தொடர்களை காரணம் காட்டியே ஆட்சேபனையற்ற சான்றிதழ் (NOC) வழங்க மறுப்புத் தெரிவித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

அதேநேரம் இதற்கு முன்னதாக பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளரான நஸீம் சாஹ்விற்கும் இந்த விடயத்தினை காரணம் காட்டி ”த ஹன்ரட்” லீக் தொடரில் ஆடுவதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை ஆட்சேபனையற்ற சான்றிதழ் (NOC) வழங்க மறுப்புத் தெரிவித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

”மூன்று வகைப் போட்டிகளிலும் ஆடும் இந்த மூன்று கிரிக்கெட் வீரர்களினதும் சேவை அடுத்த எட்டு மாதங்களுக்கு பாகிஸ்தான் அணிக்கு தேவையாக இருக்கின்றது. சம்பியன்ஸ் கிண்ணம், ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் என இந்த காலப்பகுதியில் பாகிஸ்தான் அணியானது 9 டெஸ்ட், 14 ஒருநாள் போட்டிகளில் ஆடுகின்றது. எனவே இந்த விடயங்களை கருத்திற் கொண்டும், வீரர்களது பணிச்சுமையினை கருத்திற் கொண்டும் கனடாவின் லீக் தொடரில் நாம் அவர்களை விளையாட அனுமதிவிக்கவில்லை.” என பாகிஸ்தான் கிரிக்கெட் சபை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

>>ஐசிசி இன் வருடாந்த மாநாடு அடுத்த வாரம் இலங்கையில்

அதேவேளை புதிய பருவத்திற்கான குளோபல் லீக் T20 தொடரானது ஜூலை 25ஆம் திகதி தொடக்கம் ஒகஸ்ட் 11 வரை இம்முறை நடைபெறவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<