பாகிஸ்தான் கிரிக்கெட் சபையானது (PCB) தமது அணி வீரரான குஸ்தில் சாஹ் இரசிகர்களுடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டதாக குறிப்பிடப்படும் சம்பவத்தினை வன்மையாக கண்டிப்பதாக குறிப்பிட்டுள்ளது.
>>இந்திய கிரிக்கெட் அணிக்கு தென்னாபிரிக்க, மேற்கிந்திய தீவுகளின் சவால்<<
பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகள் ஒருநாள் தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டி இவ்வாரம் நடைபெற்று முடிந்திருந்தது. இந்தப் போட்டியின் பின்னர் பாகிஸ்தான் நியூசிலாந்திடம் தொடரினை 3-0 என இழந்த நிலையில், போட்டியின் பிந்திய விருது நிகழ்வு (Post Presentation) ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்வின் போது மைதானத்தில் இருந்த வெளிநாட்டு இரசிகர்கள் இருவர் பாகிஸ்தான் நாட்டினை இழிவு செய்யும் வகையில் பாஸ்தோ (Phasto) மொழியில் ஸ்லோகங்களை எழுப்பியதற்காக பாகிஸ்தான் சகலதுறை கிரிக்கெட் வீரரான குஸ்தில் சாஹ் முரண்பட்டதுடன் குறித்த விடயம் சமூக வலைதளங்களிலும் பிரபலமாகியிருந்தது.
பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தேசிய கிரிக்கெட் அணியின் வீரர்களை அவமதிக்கும் வகையில் குறிப்பிட்ட இரசிகர்கள் நடந்து கொண்டமைக்காக நியூசிலாந்து கிரிக்கெட் சபையிடம் (NZC) முறைப்பாடு செய்ததோடு, குறிப்பிட்ட இரசிகர்கள் இருவரும் மைதானத்தினை விட்டு நியூசிலாந்து கிரிக்கெட் சபையினால் வெளியேற்றப்பட்டனர். அத்துடன் இந்த நிகழ்வினை வன்மையாக கண்டிப்பதாகவும் பாக். கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
அதேவேளை பாகிஸ்தான் அணியுடன் ஸ்லோகங்களை வெளியிட்டு முரண்பட்ட வெளிநாட்டு இரசிகர்கள் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<