பாகிஸ்தான் – அவுஸ்திரேலிய ஒருநாள் தொடர் அட்டவணை வெளியீடு

607
Image Courtsey - AFP

பாகிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் அட்டவணை இன்று (10) பாகிஸ்தான் கிரிக்கெட் சபையினால் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஐக்கிய அரபு இராச்சியத்திலேயே குறித்த தொடர் நடைபெறவுள்ளது.

உலகக் கிண்ணத்தில் பாகிஸ்தான் அணியின் தலைவராக சர்ப்ராஸ் அஹமட்

இந்த ஆண்டில் இடம்பெறவுள்ள கிரிக்கெட் உலகக் கிண்ணத்தில், பாகிஸ்தான்…

2019ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண போட்டிகள் ஆரம்பமாவதற்கு இன்னும் மூன்று மாதங்கள் எஞ்சியுள்ள நிலையில் ஐ.சி.சி ஒருநாள் அந்தஸ்து கொண்டுள்ள ஒவ்வொரு அணியும் இருதரப்பு தொடர்கள் மூலம் தங்களுக்கான பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. மேலும், குறித்த இருதரப்பு தொடர்கள் உலகக் கிண்ண போட்டிகளுக்காக ஒவ்வொரு நாடுகளினதும் அணியை தெரிவு செய்வதற்கும் இலகுவாக அமைந்திருக்கின்றன.

அந்த வகையில் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் அழைப்பை ஏற்று அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையானது இருதரப்பு ஒருநாள் தொடர் ஒன்றில் ஆட சம்மதம் தெரிவித்திருந்தது. அதன்படி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் மார்ச் மாதம் நடைபெறவுள்ளது.

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியானது அடுத்தாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய அணியுடன் அங்கு மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட இரு தொடர்களில் ஆடவுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தின் முதல் தொடரான டி20 சர்வதேச தொடர் இம்மாதம் 24ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

“ஸ்மித், வோர்னர் இல்லையென்பது நகைப்புக்குறிய விடயம்” – லாங்கர்

இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக் கிண்…

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியானது தென்னாபிரிக்க அணியுடனான நீண்டநாள் சுற்றுப்பயணத்தினை முடித்துக்கொண்டு நாடு திரும்பியுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடர் எதிர்வரும் வியாழக்கிழமை (14) ஆரம்பமாகவுள்ளது. இந்த தொடரில் அநேகமான பாகிஸ்தான் அணி வீரர்களுடன், சர்வதேச மற்றும் உள்ளூர் வீரர்களும் விளையாடவுள்ளனர்.

பாகிஸ்தான் அணியே குறித்த இருதரப்பு தொடரினை ஏற்பாடு செய்திருக்கின்றது. ஆகவே, தொடரில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் சொந்த மண்ணுக்கு ஆஸி. அணியை அழைத்திருந்தாலும் ஆஸி. அணி அதற்கு எந்தவொரு பின்னூட்டல்களையும் வழங்காததன் காரணமாக பாக். கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை ஆஸி. அணி வராது என்பதை உணர்ந்து தற்போது பாகிஸ்தான் அணியின் சொந்த மைதானங்களாக காணப்படுகின்ற ஐக்கிய அரபு இராச்சியத்தில் அமைந்திருக்கின்ற மூன்று மைதானங்களில் 5 ஒருநாள் சர்வதேச போட்டிகளை நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, சாஜாஹ் கிரிக்கெட் மைதானம், அபுதாபி செய்க் ஸாயிட் மைதானம் மற்றும் டுபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானம் போன்ற மைதானங்களில் குறித்த 5 ஒருநாள் போட்டிகளும் நடைபெறவுள்ளன.

1982ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட சாஜாஹ் கிரிக்கெட் மைதானத்தில் கடந்த வருடம் பெப்ரவரி 19ஆம் திகதியே ஆப்கானிஸ்தான் – ஜிம்பாப்வே அணிகளுக்கிடையில் இறுதியாக ஒருநாள் போட்டி நடைபெற்றிருந்தது. இந்நிலையில், ஒரு வருடத்தின் பின்னர் மீண்டும் சர்வதேச போட்டியொன்று இம்மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஏனைய இரு மைதானங்களிலும் குறித்த ஒருவருட இடைவெளியில் ஒருநாள் போட்டிகள் நடைபெற்றிருகின்றன.

இது ஒரு பக்கம் இருக்க, தற்போது வெளியிடப்பட்டுள்ள அட்டவணையின்படி கடந்த வருடம் தென்னாபிரிக்க அணியுடனான போட்டியில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தடைக்குள்ளாகியிருந்த ஆஸி. அணியின் முன்னாள் தலைவரான ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வோர்னர் ஆகியோரின் ஒருவருட தடைக்காலம் நான்காவது போட்டி நடைபெறவுள்ள தினத்திற்கு முதல் நாளிளேயே நிறைவடையும். இதனால், இவர்கள் இருவரும் 4ஆவது மற்றும் 5ஆவது ஒருநாள் போட்டிகளில் மாத்திரம் விளையாட முடியும். இருந்தாலும் தற்போது இவர்கள் இருவரும் பாரிய உபாதைக்கு முகம்கொடுத்துள்ளனர்.

தற்போதைய ஒருநாள் தரவரிசையின்படி பாக். அணி 102 புள்ளிகளுடன் 5ஆவது இடத்திலும், ஆஸி. அணி 100 புள்ளிகளுடன் 6ஆவது இடத்திலும் உள்ளன. இறுதியாக பாகிஸ்தான் அணியினர் அவுஸ்திரேலிய அணியை அவர்களின் சொத்த மண்ணில் வைத்து 2017ஆம் ஆண்டு இருதரப்பு ஒருநாள் தொடரில் விளையாடியிருந்தனர். இதில் ஆஸி. அணி 4-1 என்ற அடிப்படையில் ஒருநாள் தொடரை கைப்பற்றியிருந்தது.

ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் அட்டவணை

22 மார்ச் – முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டி – சார்ஜாஹ்
24 மார்ச் – இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி – சார்ஜாஹ்
27 மார்ச் – மூன்றாவது ஒருநாள் சர்வதேச போட்டி – அபுதாபி
29 மார்ச் – நான்காவது ஒருநாள் சர்வதேச போட்டி – டுபாய்
31 மார்ச் – ஐந்தாவது ஒருநாள் சர்வதேச போட்டி – டுபாய்

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க