ஜுவன்டஸ் கால்பந்து கழகத்தின் நட்சத்திர வீரர் பவுலோ டிபாலாவுக்கு கடந்த ஆறு வாரங்களில் மேற்கொள்ளப்பட்ட நான்காவது மருத்துவ சோதனையிலும் தொடர்ந்தும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆர்ஜன்டீன முன்கள வீரரான டிபாலா மற்றும் அவரது காதலி ஒரியானா சபடினிக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டிருப்பது கடந்த மார்ச் 21 ஆம் திகதி அவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட முதல் மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.
“நாம் உங்களை வெறுக்கிறோம்” ரொனால்டோவிடம் கூறிய டிபாலா
போர்த்துக்கல் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவிடம் ஆர்ஜன்டீன மக்கள்…
இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டது தொடக்கம் டிபாலாவுக்கு நான்கு முறை மருத்துவ சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் இறுதியாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையிலும் அந்த வைரஸ் அவரின் உடலை விட்டு நீங்கவில்லை என்பது கண்டறியப்பட்டிருப்பதாக ‘El Chiringuito’ என்ற ஸ்பெயின் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கூறப்பட்டுள்ளது.
இந்த நோய்த் தொற்றினால் தாம் மூச்சுவிட முடியாமல் இருந்தது மற்றும் அதனால் ஏற்பட்ட வேதனைகள் பற்றி 26 வயதான டிபாலா கூறியிருந்தார். எனினும் தாம் குணமடைந்தது போல் உணர்வதாகவும் காதலியிடமும் நோய் அறிகுறிகள் நீங்கி இருப்பதாகவும் அவர் ஊடகங்களுக்கு கூறியிருந்தார்.
“அதிர்ஷ்டவசமான (எமது) உடல்நிலை நன்றாக உள்ளது. எம்மிடம் எந்த நோய் அறிகுறியும் இல்லை” என்று ஜுவான்டஸ் கழகத்தின் உத்தியோகபூர்வ யூடியுப் செனலுக்கு கடந்த மார்ச் இறுதியில் டிபாலா கூறியிருந்தார்.
எனினும் அவரிடம் இருந்த இன்னும் வைரஸ் தொற்று நீங்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில் தொடர்ந்தும் தீவிர சிகிச்சையில் இருக்க வேண்டி ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இத்தாலியின் ஜுவன்டஸ் கழகத்தைச் சேர்ந்த டனிலே ருகானி மற்றும் ப்ளைஸ் மடுய்டி ஆகியோருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து டிபாலாவுக்கும் வைரஸ் தொற்றி இருப்பது உறுதி செய்யப்பட்டது. எனினும், மேற்படி இருவரும் வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்திருப்பதாக ஜுவன்டஸ் கழகம் இந்த மாத ஆரம்பத்தில் அறிவித்திருந்தது.
நெய்மாருடன் இணைவது ஆபத்தினை ஏற்படுத்தலாம்
பிரான்ஸின் முன்னாள் கால்பந்து வீரரான இமானுவேல் பெடிட், தனது நாட்டின்…
இந்நிலையில் டிபாலா தொடர்ந்தும் வைரஸினால் பாதிக்கப்பட்டிருப்பது இத்தாலி கால்பந்து வட்டாரத்தில் மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, அனைத்து சீரி A அணிகளும் வரும் மே 4 ஆம் திகதி திங்கட்கிழமை பயிற்சிகளுக்கு திரும்ப இத்தாலி லீக் அதிகாரிகள் அனுமதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மே 4 ஆம் திகதி தொடக்கம் தனிப்பட்ட முறையில் வீரர்களுக்கு பயிற்சியில் ஈடுபட முடியும் என்றும் இரண்டு வாரங்கள் கழித்து அவர்கள் குழுவாக பயிற்சி பெற அனுமதிக்கப்படுவார்கள் என்றும் இத்தாலி பிரதமர் கியுசெப் கொண்டே அறிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் அதில் இருந்து குணம் அடையும் வரை அடுத்தடுத்த மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். டிபாலா மாத்திரமன்றி அட்லான்டா கோல்காப்பாளர் மார்கோ ஸ்பொடிலோ மீது மேற்கொண்ட மருத்துவ சோதனைகளில் அவருக்கு ஆரம்பத்தில் வைரஸ் தொற்றி இருப்பதும் பின்னர் அதில் இருந்து நீங்கி இருப்பதும் தொடர்ந்து வைரஸ் தொற்றி இருப்பதாகவும் முடிவுகள் காட்டின.
>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<