அயர்லாந்து அணியின் அனுபவ ஆரம்ப துடுப்பாட்ட வீரர் போல் ஸ்டைர்லிங் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான குழாத்துடன் இணைந்துக்கொண்டுள்ளார்.
போல் ஸ்டைர்லிங் இலங்கை அணிக்கு எதிராக காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை.
>> மைதானத்தில் வைத்து கண்ணீர் சிந்திய லசித் மாலிங்க!
பங்களாதேஷ் அணிக்கு எதிராக நடைபெற்றுமுடிந்த தொடரையடுத்து அவருக்கு ஓய்வு வழங்கப்பட்டிருந்ததுடன், அவர் அயர்லாந்துக்கு திரும்பியிருந்தார்.
இந்தநிலையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தவாறு இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான அயர்லாந்து குழாத்துடன் போல் ஸ்டைர்லிங் இணைந்துள்ளதுடன், அடுத்தப் போட்டிக்கான இறுதி பதினொருவரில் இடம்பெறுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
அயர்லாந்து அணிக்காக மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள போல் ஸ்டைர்லிங் 104 ஓட்டங்களை பெற்றுள்ளார்.
இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (25) நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<