MRI பரிசோதனைக்கு முகங்கொடுத்துள்ள பெதும்

ICC T20 World Cup 2022

2990

அவுஸ்திரேலியாவின் ஜீலோங்கில் உள்ள கர்டினியா பார்க் மைதானத்தில் நெதர்லாந்து அணிக்கு எதிராக இன்று (20) நடைபெற்ற முதல் சுற்றின் கடைசி லீக் போட்டியில் இலங்கை அணி 16 ஓட்டங்களால் வெற்றியீட்டி சுபர் 12 சுற்றில் விளையாட தகுதி பெற்றது.

இந்த நிலையில், குறித்த போட்டியில் இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடிய போது ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பெதும் நிஸ்ஸங்க இடுப்பு பகுதி காயத்துள்ளாகி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து அவரை உடனடியாக MRI பரிசோதனைக்கு உட்டுபடுத்தவதற்கு இலங்கை அணி முகாமைத்துவம் நடவடிக்கை எடுத்துள்ளது.

எவ்வாறாயினும், அவருடைய காயம் தொடர்பில் எந்தவொரு அறிவிப்பையும் இலங்கை கிரிக்கெட் அணி முகாமைத்துவம் இதுவரை வெளியிடவில்லை என்றாலும், பெதும் நிஸ்ஸங்கவுக்கு எதிர்வரும் 2 வாரங்களுக்கு விளையாட முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாகவும் கிரிக்கெட் வட்டாரங்ள் செய்தி வெளியிட்டிருந்தன.

ஒருவேளை, பெதும் நிஸ்ஸங்க T20 உலகக் கிண்ணத்தில் இருந்து விலகினால் அவருக்குப் பதிலாக மாற்றீடு வீரராக நிரோஷன் டிக்வெல்லவை அணியுடன் இணைத்துக் கொள்ளப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், போட்டியின் பிறகு ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து பெதுத் நிஸ்ஸங்கவின் இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டிருப்பதாகவும், அதற்கான பரிசோதனைக்காக அவர் அழைத்துச் செல்லப்பட்டிருப்பதாகவும் மஹீஷ் தீக்ஷன உறுதிப்படுத்தியிருந்தார்.

இதனிடையே, இலங்கை அணியின் வேகப் பந்துவீச்சாளர் ப்ரமோத் மதுசான் மற்றும் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பெதும் நிஸ்ஸங்க ஆகியோரின் காயங்கள் பாரதூரமானதாக இல்லை என தெரிவிக்கப்படுகிறது. இதன்காரணமாக T20 உலகக் கிண்ணத் தொடரின் சுபர் 12 சுற்றின் முதல் போட்டியில் அவர்கள் இருவரும் விளையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னதாக டில்ஷான் மதுசங்க, துஷ்மந்த சமீர மற்றும் தனிஷ்க குணதிலக்க ஆகிய மூன்று வீரர்களும் காயம் காரணமாக இம்முறை T20 உலகக் கிண்ணத்திலிருந்து விலகியமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<