ஜிம்பாப்வே அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ஒருநாள் தொடருக்கான இலங்கை குழாத்திலிருந்து ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பெதும் நிஸ்ஸங்க நீக்கப்பட்டுள்ளார்.
பெதும் நிஸ்ஸங்கவுக்கு ஏற்பட்டுள்ள திடீர் சுகயீனம் காரணமாக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
>>T20 உலகக்கிண்ணத்துக்கான குழு விபரங்கள் வெளியானது!
இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்திருந்த 17 பேர்கொண்ட குழாத்தில் பெதும் நிஸ்ஸங்க இடம்பெற்றிருந்தாலும், தற்போது அவருக்கு டெங்கு தொற்று ஏற்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்பட்டுள்ளது.
பெதும் நிஸ்ஸங்க அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ள காரணத்தால் அவருக்கு பதிலாக உள்ளூர் போட்டிகளில் பிரகாசித்துவந்த இளம் வீரர் ஷெவோன் டேனியல் அணிக்குள் இணைக்கப்பட்டுள்ளார் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<