கொவிட்-19 வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதனை அடுத்து இலங்கை டெஸ்ட் அணியின் ஆரம்பத் துடுப்பாட்டவீரரான பெதும் நிஸ்ஸங்க இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் இடையே நடைபெற்று வருகின்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து வெளியேறியிருக்கின்றார்.
>> சந்திமாலின் சதத்துடன் ஆஸி.க்கு சவால் கொடுக்கும் இலங்கை!
இதன் மூலம் பெதும் நிஸ்ஸங்க அவுஸ்திரேலிய டெஸ்ட் தொடர் ஆரம்பித்த பின்னர் இலங்கை டெஸ்ட் குழாத்தில் கொவிட்-19 வைரஸ் தொற்று ஏற்பட்ட ஆறாவது வீரராக மாறியிருக்கின்றார்.
நேற்று (10) காலை உடல் நிலை சற்று சரியாக இல்லை என பெதும் நிஸ்ஸங்க மேற்கொண்ட புகாரினை அடுத்து அவருக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதோடு, இந்த பரிசோதனையின் மூலமே அவருக்கு கொவிட்-19 வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.
இதேநேரம் பெதும் நிஸ்ஸங்க இலங்கை – அவுஸ்திரேலிய அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து வெளியேறியிருக்கும், அவரின் பிரதியீட்டு வீரராக ஆரம்பத் துடுப்பாட்டவீரர் ஓசத பெர்னாண்டோ இலங்கை குழாத்திற்குள் உள்வாங்கப்பட்டிருக்கின்றார்.
>> பாகிஸ்தானுக்கு எதிரான பயிற்சிப்போட்டியில் விளையாடவுள்ள இலங்கை அணி அறிவிப்பு
அதேநேரம் ஓசத பெர்னாண்டோ இலங்கை – அவுஸ்திரேலிய முதல் டெஸ்ட் போட்டியில், கொவிட்-19 வைரஸ் தொற்றுக்கு உள்ளான
அஞ்செலோ மெதிவ்ஸின் பிரதியீட்டு வீரராக விளையாடியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<