மதீஷ பதிரனவை இழக்கும் சென்னை சுப்பர் கிங்ஸ்

168
Pathirana returns to Sri Lanka

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் இளம் நம்பிக்கை வேகப்பந்துவீச்சாளரான மதீஷ பதிரன இம்முறை IPL தொடரின் எஞ்சிய போட்டிகளில் ஆடுவது சந்தேகம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

>> அமீரகத்தை வீழ்த்தி மகளிர் T20 உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற்ற இலங்கை

மதீஷ பதிரனவிற்கு ஏற்பட்டிருக்கும் தசை உபாதையே அவருக்கு IPL தொடரின் எஞ்சிய போட்டிகளில் ஆட முடியாத நிலையை உருவாக்கியிருக்கின்றது. அதேநேரம் மதீஷ பதிரன தனக்கு ஏற்பட்டிருக்கும் உபாதையில் இருந்து குணமடையும் பொருட்டு தனது தாயகமான இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

2024ஆம் ஆண்டுக்கான IPL தொடரில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்காக 6 போட்டிகளில் ஆடியிருந்த மதீஷ  பதிரன மொத்தமாக 13 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருக்கின்றார். 

அதேநேரம் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் மற்றுமொரு வேகப்பந்துவீச்சாளரான தீபக் சஹாரும் உபாதையினால் அவஸ்தைப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. எனினும் சஹாரின் உபாதை நீண்ட காலத்திற்கு நீடிக்காது என நம்பப்படுகின்றது. 

சென்னை சுப்பர் கிங்ஸ் அணி IPL தொடரில் இறுதியாக பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் விளையாடியதோடு, குறிப்பிட்ட போட்டியில் 28 ஓட்டங்களால் வெற்றியைப் பதிவு செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<